புதுடில்லி: ''ஒவ்வொரு மத்திய அமைச்சரும், இந்த ஆண்டு இறுதிக்குள், குறைந்த பட்சம், இரண்டு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, அந்நாட்டுடனான சமூக, பொருளாதார உறவு களை மேம்படுத்த வேண்டும்,'' என, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து, வெளியுறவு அமைச்சகத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், உலக நாடுகளுடனான இந்திய உறவை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பிரதமர்
நரேந்திர
மோடி, பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று வருகிறார்.
வழக்கம் போல்
அமெரிக்கா, பிரிட்டன், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமல்லாமல்,
பல சிறிய நாடுகளுக்கும், பிரதமர் மோடி சென்று வருகிறார்.
பெரிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து, அன்னிய முதலீடுகளை அதிகரிக்க செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில், உலகிலுள்ள, 190க்கும் மேலான நாடுகளுக்கு, இந்திய பிரதிநிதிகள் சென்று வர வேண்டும் என்பதே, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிக்கோள்.
அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கேபினட் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் ஒவ்வொருவரும், குறைந்தபட்சம், இரண்டு நாடுகளுக்கு சென்று வர வேண்டும் என, இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதற்காக,
அமைச்சர்கள் பயணிக்க வேண்டிய, 68 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு
உள்ளது.
அமைச்சர்கள், தம் வசதிக்கேற்ற தேதிகளை யும், துறை சார்ந்த
உடன்படிக்கைகள், பேச்சுக் கள் நடத்த வேண்டிய நாடுகளின் பட்டியல் களையும் அனுப்பி வைக்கும்படி, அமைச்சர் சுஷ்மா கேட்டுக் கொண்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மத்தியில், பா.ஜ., அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில், 3 லட்சத்து, 69 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி அன்னிய முதலீடாக கிடைத்துள் ளதாகவும்; இது, முந்தைய காங்., ஆட்சியில் கிடைத்ததை விட, 43 சதவீதம் அதிகம் என்றும், அமைச்சர் சமீபத்தில் தெரிவித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (9)
Reply
Reply
Reply