காதலும்... கவர்ச்சியும்... களிப்பூட்டுகிறார் இயக்குனர் லெனின் பாரதி| Dinamalar

காதலும்... கவர்ச்சியும்... களிப்பூட்டுகிறார் இயக்குனர் லெனின் பாரதி

Updated : செப் 14, 2016 | Added : செப் 11, 2016 | |
பார்க்கும் சம்பவங்களை, பிரச்னைகளுக்கான முடிவுகளை நாசூக்காக மக்கள் ரசிக்கும்படி திரையில் சொல்லும் அசாத்திய திறமை பெற்றவர்கள் தான் திரைப்பட இயக்குனர்கள். இதில் காமெடி, காதல், விரக்தி, வீரத்தை ஆங்காங்கே தெளித்து, சினிமா பார்ப்பவர்களை, சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்க செய்யும் திறமை இயக்குனர்களுக்கு கை வந்த கலை. இதை இயக்குனரின் வெற்றி என்றே கூறலாம்.அந்த வகையில் கபடி
காதலும்... கவர்ச்சியும்... களிப்பூட்டுகிறார் இயக்குனர் லெனின் பாரதி

பார்க்கும் சம்பவங்களை, பிரச்னைகளுக்கான முடிவுகளை நாசூக்காக மக்கள் ரசிக்கும்படி திரையில் சொல்லும் அசாத்திய திறமை பெற்றவர்கள் தான் திரைப்பட இயக்குனர்கள். இதில் காமெடி, காதல், விரக்தி, வீரத்தை ஆங்காங்கே தெளித்து, சினிமா பார்ப்பவர்களை, சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்க செய்யும் திறமை இயக்குனர்களுக்கு கை வந்த கலை. இதை இயக்குனரின் வெற்றி என்றே கூறலாம்.
அந்த வகையில் கபடி விளையாட்டை மையமாக வைத்து பயிற்சியாளர் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு, குதிரையுடன் பாசப்போராட்டம் நடத்தும் அழகர்சாமி குதிரை, நான் மகான் அல்ல போன்ற படங்களில் இணைஇயக்குனராக... ஆதலால் காதல் செய்வீர் படத்தின் கதாசிரியர், மலையும் முகிலும் முத்தமிட்டு, சில்லென சீதோஷ்ண நிலையை தரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த இயக்குனர் லெனின் பாரதி, தற்போது மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தை இயக்கி உள்ளார். இவரிடம் சில்லென உதிர்ந்த பனி துளிகள் இதோ...
* சினிமாவில் இயக்குனர்துறை எவ்வாறு வேறுபடுகிறதுஒரு படம் என்பது கூட்டு முயற்சி தான். கதாசிரியர், இயக்குனர் தான் படத்தின் மூலகர்த்தா என்பதால், இதை தேர்ந்தெடுத்தேன். நாம் சந்தித்த பிரச்னையை கலை மூலம் கடத்தலாம். வாழ்வியல் கற்றுத்தந்த பாடத்தை மற்றவர்களுக்கும் சொல்லலாம்.* குருவாக நினைப்பது...பலவிதத்தில் பலர் குருவாக இருந்து உள்ளனர்.* சினிமாவில் ஜாதி புகுந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளதே...ஜாதியை மையமாக வைத்து சில பகுதிகளில் இயக்கம் உள்ளது. கலைத்துறையில் இது பயனளிக்காது.* மற்ற இயக்குனர்களிடமிருந்து எந்தவிதத்தில் நீங்கள் மாறுபட்டு உள்ளீர்கள்?எல்லோருக்கும் தனி அடையாளம் உண்டு. அதன்படி பயணிப்பேன்.* ஒரு படத்திற்கு பெயர் வைப்பது முதல் வசனம், பாடல் என பிறமொழி ஆக்கிரமிப்பு உள்ளதே...சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு தான். எந்தவொரு தொன்மையான மொழியையும் எளிதாக அழித்துவிட முடியாது. தமிழும் தொன்மையானது தான்; அழிக்க முடியாது.* படத்திற்கு கவர்ச்சி தேவையா...கவர்ச்சி தேவை இல்லை. மேற்கு தொடர்ச்சி மலை படத்தில், நேரடியாக பார்ப்பதை தான் காட்சியாக்கி உள்ளேன். நாம் ரியாலிட்டியை தான் பார்க்கவேண்டும்.* இளைஞர்கள் காதல், கவர்ச்சியை எப்படி உணர்கின்றனர் ...காதல் என்பது மனம் சார்ந்தது. கவர்ச்சி உடல் சார்ந்தது. இவை இரண்டும் வெவ்வேறு துருவங்கள்.* இளம் இயக்குனர்கள் பற்றி...இளம்இயக்குனர்கள், தொடர்ந்து ஒளி வீசி வருகின்றனர். தங்களுக்கென முத்திரையுடன் செயல்படுகின்றனர். இதில் தனித்துவம் பெறுகின்றனர்.* நீங்கள் யார் ரசிகர் ...எனது தந்தை இடதுசாரி சிந்தனை உள்ளவர். அந்த சூழலில் நான் வளர்ந்ததால், நடிகர், நடிகையை பார்த்து இயக்கும் ஆசை வரவில்லை.* பழைய படங்களின் தாக்கம், காட்சி பற்றி...நிறைய படங்கள் பார்த்து உள்ளேன், ஒவ்வொன்றும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்டு சொல்லமுடியாது.* புதுமுகங்களுக்கு வாய்ப்பு தருவீர்களா...எனது படத்தில் கதாநாயகன், கதாநாயகி புதுமுகம். எனது கிராமத்தினரையே முக்கிய பாத்திரங்களாக நடிக்க வைத்து உள்ளேன்.* மேற்கு தொடர்ச்சி மலை படம் பற்றி...தமிழக - கேரள எல்லை பகுதி நிலமற்ற மக்கள், கேரளாவிற்கு சென்று கூலி வேலை செய்கின்றனர். இவர்களின் வாழ்வியல் பற்றிய படம் தான் இது. இப்படத்தை சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்ப உள்ளேன்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X