தமிழ் சினிமாவை கலக்கிய ராதாவின் செல்லமகள். தெலுங்கில் அறிமுகமாகி, தமிழில் 'கோ' வில் பத்திரிகையாளராக, அன்னக்கொடியும் கொடி வீரனில் கொடியிடையாளாக, புறம் போக்கு என்கிற பொதுவுடமையில் தீரம் மிகுந்த பெண்ணாக, குயில் போன்ற குரல் கொண்ட குயிலியாக, நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த கண்ணழகி கார்த்திகா நாயர் கொஞ்சும் தமிழில் பேசிய முத்து சிதறல்கள் ...
* படிப்புபிறந்தது, வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான், பிசினஸ் தொடர்பான கல்லுாரி படிப்பை முடித்துள்ளேன்.
* சினிமாவில் வாய்ப்புபத்தாம் வகுப்பு படிக்கும் போதே வாய்ப்பு வந்தது. ஆனால் அம்மா எனக்கு அது பற்றி தெரிவிக்கவில்லை. படிப்பு முடித்த பின் தான் முதலில் தெலுங்கில் நாகார்ஜூன் மகன் நாக சைதன்யாவுடன் ஜோடியாக 'ஜோஷ்' படித்தில் நடித்தேன்.
* உங்களுக்கு படங்கள் குறைவாக வெளியாகிறதேநடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்வது, மேனேஜர், பி.ஆர்.ஓ.,யாரும் கிடையாது. நடிப்பை அறிந்தவர்கள், அழைத்தவர்கள் படங்களில் மட்டுமே நடிப்பதால் குறைவாக தெரிகிறது.
* விரும்பும் வேடங்கள்...மலையாளம்,தெலுங்கு படங்களில் இரட்டை வேடம், ஆக் ஷன் போன்ற வேடங்களில் நடித்துள்ளேன். நான் விரும்பிய வேடங்கள் நடித்த படங்களில் கிடைத்து வருகிறது.
* விஜய், அஜித் உடன் நடிக்கும் வாய்ப்பு வந்ததா...விஜய்யுடன் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அது சரியாக அமையவில்லை.
* பிடித்த நடிகர்தற்போதைய கதாநாயகர்கள் அனைவரும் பிடித்தவர்கள். திறமையானவர்கள். இதில் யாரையும் தவிர்க்க முடியாது.
* பொழுது போக்கு...உடற்பயிற்சி, ஓட்டம். மும்பையில் ஓடுவது சிரமம்.
* லட்சிய கனவுஎனது படங்கள் குழந்தைகள், படிப்பை கெடுக்க கூடாது. பிசினஸ் தொடர்பாக படித்துள்ளதால் நடிப்போடு சொந்த தொழிலில் சாதிப்பதையே விரும்புகிறேன்.
* தற்போது நடிக்கும் படம்அது ரகசியம்...
* பாரதி ராஜா படம் பற்றி...அவரது படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன்...
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE