அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
களையிழக்கிறதா தே.மு.தி.க., ஆண்டு விழா?
35 இடங்களில் மட்டும் கொண்டாட்டம்

சட்டசபை தோல்வியால் பெரும் பின்னடை வை சந்தித்துள்ள, தே.மு.தி.க.,வின் ஆண்டு விழா கொண்டாட்டமும், இந்தாண்டு களை யிழந்துள்ளது.

களையிழக்கிறதா தே.மு.தி.க., ஆண்டு விழா?  *35 இடங்களில் மட்டும் கொண்டாட்டம்

கடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், தே.மு.தி.க.,வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி விட்டனர்.

எஞ்சியுள்ளவர்களும், கடும் நிதி நெருக்கடியில்

சிக்கியுள்ளனர். இதனால், கட்சி நிகழ்ச்சிகளில், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை. ஆக., 25ல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை,பல மாவட்ட செயலர்கள் ஆடம்பரமாக கொண்டாடவில்லை.

இந்நிலையில், வரும், 14ல், தே.மு.தி.க.,வின், 12ம் ஆண்டு துவக்க விழா வருகிறது. கட்சி நிர்வாகி கள் பெரியளவில் ஆர்வம் காட்டாததால் இந்த விழா, கடந்த காலங்களை போல பிரம்மாண்ட மாக கொண்டாடப்பட வாய்ப்பில்லை என, கட்சி வட்டாரங்கள் கூறின.

தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இந்தாண்டு, கட்சி தலைமை அலுவலகத்தையும் சேர்த்து, 35 இடங்களில் மட்டுமே ஆண்டு விழா பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. கட்சி தலைவர் விஜயகாந்த் பங்கேற்கும் பொதுக்கூட்டம், ஏதாவது ஒரு மாவட்டத்தில்

Advertisement

பிரம்மாண்டமாக நடப்பது வழக்கம்.

இந்தாண்டு, மாவட்ட செயலர்கள் செலவு செய்ய தயங்குவதால், கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றி விட்டு, ஆண்டு விழா நிகழ்ச்சியை விஜயகாந்த் முடித்து கொள்ள உள்ளார். இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
-- நமது நிருபர் --


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
12-செப்-201619:51:57 IST Report Abuse

Rajendra Bupathiசொல்ல முடியாது? புலி பதுங்குறது பாயறத்துக்காக கூட இருக்கலாமில்ல? இப்ப தாத்தா வேற ஆதரவு கரம் நீட்டி இருக்காரு?

Rate this:
Balaji - Khaithan,குவைத்
12-செப்-201619:23:30 IST Report Abuse

Balajiகட்சியில் இருக்கும் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர் என்பதும் இதற்கு முக்கிய காரணம்..... அதுமட்டுமல்லாது தேர்தலுக்காக அவர்கள் பட்ட கடனுக்கு தலைவர் எதுவும் செய்யாததும் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது........இதையெல்லாம் சமாளித்து எப்படி கட்சியை கரையேற்றப் போகிறாரோ?????

Rate this:
Anton Pham - Houston,யூ.எஸ்.ஏ
12-செப்-201618:56:58 IST Report Abuse

Anton Phamநான் புதியதாக துவங்க போகும் கட்சியில்கூட விஜயகாந்தை சேர்க்க மாட்டேன்பா. அவரின் கட்சிக்கு தொண்டர்கள் இருக்கிறார்களா என பூதக்கண்ணாடி போட்டு தேடும் அளவிற்குத்தான் உள்ளது. இதுல ஆண்டுவிழா வேறயா? வெளங்கும்.

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X