அரசியல் செய்தி

தமிழ்நாடு

குறுகிய நோக்கத்துடன் கர்நாடக அரசு:தமிழக பா.ஜ., தலைவர் காட்டம்

Added : செப் 12, 2016 | கருத்துகள் (18)
Advertisement
 குறுகிய நோக்கத்துடன் கர்நாடக அரசு:தமிழக பா.ஜ., தலைவர் காட்டம்

சென்னை:''மழைக்காலம் நெருங்குகிறது. ஆனால், அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை எதையும், தமிழக அரசு எடுத்ததாக தெரியவில்லை; இது நல்லதல்ல,'' என, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது கர்நாடகம். அதனால், அம்மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் துாண்டப்பட்டுள்ளது; தொடர்ந்து தாக்குதல்கள் நடக்கின்றன. சட்டம் - -ஒழுங்கை பாதுகாக்க, அம்மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கர்நாடக காங்கிரஸ் அரசு, இந்த விஷயத்தில் நியாயத்தின் படி நடக்கவில்லை.
மொத்த விஷயத்தையும், திசை திருப்பி அதன் மூலம் மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் செயல்படுகிறது. காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க, தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என, எல்லா கட்சிகளும் கோரிக்கை விடுத்தும், தமிழக முதல்வர், இதில் அக்கறையில்லாமல் இருப்பது சரியல்ல.காவிரி பிரச்னையில், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை, மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்திடம், தமிழக பா.ஜ., விரிவாக எடுத்துரைத்து உள்ளது.மழைக்காலம் நெருங்குகிறது. ஆனால், அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை எதையும் தமிழக அரசு எடுத்ததாக தெரியவில்லை; இது நல்லதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat - ngr,இந்தியா
12-செப்-201620:13:31 IST Report Abuse
venkat காங்கிரஸ் பலவீனமானத்துக்கு இது போன்ற காரணம் ,,,,, காங் ஐ கேட்போம் , கண்டிப்போசெம்
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
12-செப்-201618:29:55 IST Report Abuse
Durai Ramamurthy அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி பிரச்னை குறித்து விவாதிப்பதால் மயிரிழை அளவுகூட பயனிருக்காது. பஜ்ஜி, வடைய சாப்பிட்டு வரலாமே தவிர, அதில் பங்கேற்கும் தலைவர்களால் ஒருசொட்டு காவிரி நீர்கூட பெற்றுத்தர முடியாது.. நீங்க போய் விவாதித்தால் அணை திறந்து கொள்ளுமா?..
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
12-செப்-201614:05:49 IST Report Abuse
GB.ரிஸ்வான் நீயும், கருணாவும்,மற்றும் டவ்சர் ராமதாஸ், கூவிக்கினே இருங்கள்.நானும் ரவுடி தான் என புலம்பிகிட்டே இருங்கள்....
Rate this:
Share this comment
Remo - Tirunlevellli,இந்தியா
12-செப்-201618:59:44 IST Report Abuse
Remoஹாஹா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X