குறுகிய நோக்கத்துடன் கர்நாடக அரசு:தமிழக பா.ஜ., தலைவர் காட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குறுகிய நோக்கத்துடன் கர்நாடக அரசு:தமிழக பா.ஜ., தலைவர் காட்டம்

Added : செப் 12, 2016 | கருத்துகள் (18)
 குறுகிய நோக்கத்துடன் கர்நாடக அரசு:தமிழக பா.ஜ., தலைவர் காட்டம்

சென்னை:''மழைக்காலம் நெருங்குகிறது. ஆனால், அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை எதையும், தமிழக அரசு எடுத்ததாக தெரியவில்லை; இது நல்லதல்ல,'' என, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது கர்நாடகம். அதனால், அம்மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் துாண்டப்பட்டுள்ளது; தொடர்ந்து தாக்குதல்கள் நடக்கின்றன. சட்டம் - -ஒழுங்கை பாதுகாக்க, அம்மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கர்நாடக காங்கிரஸ் அரசு, இந்த விஷயத்தில் நியாயத்தின் படி நடக்கவில்லை.
மொத்த விஷயத்தையும், திசை திருப்பி அதன் மூலம் மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் செயல்படுகிறது. காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க, தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என, எல்லா கட்சிகளும் கோரிக்கை விடுத்தும், தமிழக முதல்வர், இதில் அக்கறையில்லாமல் இருப்பது சரியல்ல.காவிரி பிரச்னையில், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை, மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்திடம், தமிழக பா.ஜ., விரிவாக எடுத்துரைத்து உள்ளது.மழைக்காலம் நெருங்குகிறது. ஆனால், அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை எதையும் தமிழக அரசு எடுத்ததாக தெரியவில்லை; இது நல்லதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X