அரசியல் செய்தி

தமிழ்நாடு

நதிகள் இணைப்பே நிரந்தர தீர்வு: இல.கணேசன்

Added : செப் 12, 2016 | கருத்துகள் (3)
Advertisement

பெரம்பலுார்:''தமிழகத்தின் தண்ணீர் பிரச்னைக்கு, நதிகள் இணைப்பு தான் ஒரே தீர்வு,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
அரியலுாரில் அவர் அளித்த பேட்டி: கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் தர மறுத்து போராட்டங்கள் நடத்துவதாலும்; தமிழகம் பதில் போராட்டம் நடத்துவதாலும் பிரச்னை தீரப் போவதில்லை. தற்போது, இரு மாநிலங்களும் காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை நாடியுள்ளன. அதில், எந்த முடிவு கிடைத்தாலும் அதுவும் நிரந்தர தீர்வல்ல.
நதிநீர் இணைப்பு ஒன்று தான் நிரந்தர தீர்வு. கிருஷ்ணா நதிநீரை, ஒகேனக்கலில் கொண்டு வந்து இணைப்பதன் மூலம் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இதற்கான பூர்வாங்கப் பணிகளுக்காக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிடும்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை, உறுப்பினர்களே தேர்வு செய்யும் முறை குறித்து முன்கூட்டியே அனைத்து கட்சிகளுடனோ அல்லது எதிர்க்கட்சி தலைவருடனோ ஆலோசித்து, அரசு முடிவெடுத்து இருக்கலாம். அதையெல்லாம் தவிர்த்ததற்கு, அரசிடம் உள்ள அச்சமே காரணம். இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
12-செப்-201607:03:41 IST Report Abuse
தேச நேசன் ஒண்ணு பண்ணுங்க நதி நீர் இணைப்புக்கு ஒரு வரைபடம் போடுங்க. அதில் பாதிக்கப்படும் விவசாய வியாபார நபர்களிடம் நிலம் கேளுங்க. ஆயிரத்தில் ஒருவராவது மனமுவந்து நிலம் கொடுக்க முன்வருகிறார்களா எனப் பாருங்கள். கோர்ட் தடையாணைகள் பறக்கும். அனைவரிடமும் நிலம் எடுப்பதற்குள் பத்து தலைமுறைகள் கழிந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Singapore,சிங்கப்பூர்
12-செப்-201606:28:03 IST Report Abuse
Rajavel இந்த ஆளு இருக்கும் வரை தமிழக பிஜேபி உருப்பிடாது. மத்தியில் நீங்க தானே இருக்கீங்க நதிகளை இணைக்கவேண்டியது தானே? நதிகள் இணைப்பு இருக்கட்டும் முதலில் நதிகளை மாநில பட்டியலில் இருந்து விடுவித்து மத்திய பட்டியலுக்கு கொண்டு வாங்க.
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
12-செப்-201606:20:52 IST Report Abuse
Renga Naayagi ரெண்டு ஆண்டுகள் ஓடி விட்டன ..இப்படியே பேசி பேசி இன்னமும் மூணு ஆண்டுகளை ஓட்டுங்க ..யார் தடுத்தார்கள் நதிகளை இணைக்க ..வேணும்னா ராஜனியை brand அம்பாஸடர் ஆக நியமியுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X