சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

குழந்தைத் தொழிலாளர் சட்டங்களும், குழந்தை நட்சத்திரங்களும்

Updated : செப் 19, 2016 | Added : செப் 18, 2016
Advertisement
 குழந்தைத் தொழிலாளர் சட்டங்களும், குழந்தை நட்சத்திரங்களும்

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் என இருக்கும் சட்டத்தின் கீழ், திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், மேடைகள், போன்ற மீடியாக்களில் பங்கு பெறும் குழந்தைகள் அடங்குவார்களா என நம்மில் பலருக்கும் கேள்விகள் உண்டு.குழந்தை நட்சத்திரங்களின் ஊடகதொழில் குறித்து இந்தியாவில் தனிச் சட்டம் ஏதும் இல்லை.இதில் குழந்தை என்பவர் யார் என்பதற்கும், தொழிலாளி என்பவர் யார் என்பதற்கும் முதலில் பொருள் காண வேண்டி உள்ளது. Child Labour என்பது குறித்து International Labour Organization “குழந்தைகளை அவர்களின் குழந்தைமையிலிருந்து எது வெளியேற்றுகிறதோ, எந்த வேலை அவர்களின் உடல்,மன நலத்திற்கு ஊறு விளைவிக்கிறதோ, எந்த வேலை அவர்களின் அடிப்படை உரிமையான கல்வியிலிருந்து விலகி இருக்கச் செய்கிறதோ, அதுவே” என்கிறது.UNICEF 5 முதல் 11 வயதிலான குழந்தைகள் பணம் சம்பாதிக்கும் வேலை எதையேனும், ஒரு மணி நேரம் அல்லது 28 மணி நேரமோ ஒரு வாரத்தில் செய்தாலோ, அல்லது 12 வயது முதல் 14 வயதிலான குழந்தைகள் பணம் சம்பாதிக்கும் வேலை எதையேனும் 14 மணி நேரம் முதல் 42 மணி நேரம் வரை ஒரு வாரத்தில் செய்தாலோ அதுவே Child Labour என்கிறது.


17 வயதுக்கு குறைவானவர்கள்:

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் 2001ல்,17வயதுக்கும் குறைவானவர்கள் சம்பாத்தியம் செய்யும் வகையிலான வேலையோ, லாபத்திற்காக வியாபாரமோ செய்தாலும் அது Child Labour என்கிறது. அந்த வேலை பகுதி நேர வேலையாகவோ, முழு நேர வேலையாகவோ இருந்தாலும் அது Child Labour என்கிறது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம்.சில சமூக நல ஆர்வலர்கள், பள்ளிக்குச் செல்லாத எந்தக் குழந்தையுமே, கல்வி அல்லாத, பணம் சம்பாதித்துத் தரும் வேலை ஒன்றை மறைமுகமாகவேனும் செய்கிறார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும் எனும் கருத்தையும் கொண்டுள்ளனர்.இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழி பல சட்டங்களில் மாறுதல் ஏற்படுத்தப்பட்டது.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியிலும், அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள் பகுதியிலும் பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகள் சுரங்கத் தொழில் போன்ற ஊறு விளைவிக்கும் கடினமான தொழில்களில் ஈடுபடுத்தப்படக் கூடாது என கூறப்பட்டுள்ளது(Article 24).


தொழிலக சட்டம்:

The Factories Act of 1948, பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகள் தொழிலகங்களில் வேலை செய்வதை தடை செய்கிறது. ஆனால், இச்சட்டம் அதே தொழிலகங்களில் பதினைந்து முதல் 18 வரையிலான இள வயதினர் எப்போது, எவ்வளவு நேரத்திற்கு, என்ன மாதிரியான வேலைகளைச் செய்யலாம் என சில பரிந்துரைகளைச் செய்கிறது.The Mines Act of 1952 சுரங்கங்களில் 18 வயதிற்குட்பட்டோர் வேலை செய்வதை தடை செய்கிறது.The Child Labour (Prohibition and Regulation) ஊறு விளைவிக்க்க்கூடிய தொழில்கள் என சிலவற்றைப் பட்டியலிட்டு, அந்த வேலைகளில் பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகள் செய்யக்கூடாது என தடை செய்கிறது.The Juvenile Justice (Care and Protection of Children Act of 2000 ஒரு மைனரை, ஊறு விளைவிக்கும் வேலையைச் செய்ய வைத்தால் அப்படிச் செய்வித்தவருக்கு சிறைத் தண்டனை எனச் சொல்வதன் மூலம், அதை தடை செய்கிறது.


கட்டாய கல்வி:

அதே நேரத்தில் அதே இந்திய அரசியலமைப்புச் சட்ட்த்தின் Article 21 மற்றும் Article 45, ஆறு முதல் பதினான்கு வயது வரையான குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி தருவதைப் பற்றி பேசுகிறது.அதன் அடிப்படையில் அமைந்த சட்டமானது The Right of Children to Free and Compulsory Education Act 2009.இதன் படி ஆறு முதல் பதினான்கு வயது வரையான குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் எனவும், அத்தோடு, தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது மொத்த இடங்களில் 25% கல்வி வாய்ப்பு அற்ற மற்றும் மாற்றுத் திறனாளிக் குஅந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்கிறது. இதை ஒட்டி அமைக்கப்பட்ட National Policy on Child Labour inn 1987ம் அதைத் தொடர்ந்த National Child Labour Project (NCLP) குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் பெரும் பங்காற்றின.குழந்தைகள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவோ, அல்லது தமது குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றவோ பணம் சம்பாதிக்கும் வேலையைச் செய்வதையே மேற்சொன்ன சட்டங்களூம், இந்திய அரசியலமைப்புச் சட்டங்களும் தடை செய்கின்றன. ஆனால், குழந்தைகள், பணத்தேவைகாக அல்லாமல், பெரும் புகழ் வெளிச்சத்திற்காக டிவி, திரைப்படங்களில் நடிப்பது பற்றி தனிச் சட்டங்கள் ஏதும் இயற்றப்படவில்லை. ஆனால் அதே சமயம் குழந்தை நட்சத்திரங்களை தொழிலாளர்கள் பட்டியலில் சேர்க்காவிட்டாலும், அக்குழந்தைகளின் கல்வி, குழந்தைமை, மனநலம், உடல்நலம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் ஊடகங்களில் பங்கெடுப்பதை கவனத்தில் கொள்கிறது.


கல்வி கொள்ளை போகிறது:

குழந்தை நட்சத்திரங்கள் மேற்சொன்ன தொழிலாளிகளாக கடும் பணி செய்வதில்லை என்றாலும், இங்கும் அவர்களின் மன, உடல் நலத்திற்கு ஊறு விளைவதும், அவர்களின் கல்வி கொள்ளை போவதும் நடக்கிறதுதான். இதை மனதில் வைத்தே குழந்தைகள் தொழிலகங்களில் வேலை செய்வதைத் தடை செய்வது, சுரங்கத் தொழில் கூடாது என்பது எனப் பிரித்துச் சொல்லாமல், பணத்திற்காக எந்த வேலையுமே செய்தல் கூடாது என சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனும் பரிந்துரையும், மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் ஐம்பதாயிரம் தண்டம் கட்ட வேண்டும் எனும் பரிந்துரையும் முன் வைக்கப்பட்டது. ஆனால், சட்டமோ, பள்ளி நேரத்திற்குப் பிறகு சிறு வேலைகளையும், பெற்றோருக்கு உதவியாக காடுகளில் சுள்ளி பொறுக்குவது போன்றவற்றைச் செய்யலாம் எனும் அளவிலேயே நிற்கிறது. சராசரியாக ஒரு குழந்தை நட்சத்திரம் ஊடகப் பணியில் ஒரு நாளைக்கு 25,000 வரை சம்பாதிக்கவும் முடிகிறது. குழந்தை நட்சத்திரங்களைப் பற்றிய பெரிய முன்னெடுப்பு எதுவும் இல்லை.


போட்டிகளில் பங்கேற்கலாமா:

ஆனால், அதன் பின்னிட்டு, அமைந்த National Commission for Protection of Child Rights (NCPCR) ன் Chairperson சாந்தா சின்ஹா, குழந்தைகள் பாடல், ஆடல் போட்டிகளில் பணத்தினை சம்பளமாகப் பெறாதவரை அதில் ஈடுபடுவதில் தடை இல்லை என்கிறார். அந்தப் போட்டிகளில் குழந்தைகளுக்கு சம்பளம் தரப்படுவதில்லைதான். ஆனால், அந்தச் சம்பளம் போட்டியின் பரிசு என பெரும் தொகை தரப்படுவதால் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பொறுப்பாளர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டு அப்போட்டிகளில் குழந்தைகள் தாமாக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.இது போன்ற போட்டிகளில், குழந்தைகள் இரவு வெகுநேரம் வரை பயிற்சி, போட்டிக்கான பதிவு(recordings) என தொடர்ந்து தொல்லைக்குள்ளாகின்றனர் என்பது நாம் அறிந்த்தே. ஆனால் இவை அனைத்தும் பள்ளி நேரம் அல்லாத நேரத்திலேயே நடக்க வேண்டும் என்பதால், பள்ளிச் சுமை, வீட்டுப்பாடச் சுமை இவற்றோடு இந்தச் சுமைகளையும் குழந்தைகள் பொறுத்தாக வேண்டி இருக்கிறது. இது போக, TRP ரேட்டிங்கிற்காக, அக்குழந்தைக்ள் வெளியேற்றப்பட்டால், அவர்கள் அழுவதை விலாவாரியாக கேமிராவில் சூம் செய்து காட்டுவதும், அவர்களின் ஒவ்வொரு செயல்களையும் ஒரு பிரபலரின் செயல்கள் போல அந்த நிகழ்ச்சிகளின் விளம்பரங்களில் பயன்படுத்துவதும், அவர்களுக்கு அதீத மன அழுத்தத்தையே தருகின்றது.சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட குழந்தை கோமா நிலைக்குச் சென்று திரும்பிய செய்தி அறிவோம்தானே?சமீபத்தில், NCPCR குழந்தை நட்சத்திரங்களைக் கணக்கில் கொண்டு ஊடக குழந்தைகளுக்காக பரிந்துரைத் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவந்துள்ளது.இந்தப் பரிந்துரைத் தொகுப்பின் படி 18 வயதுக்குட்பட்டவகள் அனைவரும் குழந்தைகளே.


பரிந்துரைகள்:

வீடியோ கேம்ஸ்களில் கூட குழந்தைகளைக் காட்ட வேண்டும் எனில், அது அனிமேட்ட்டாக இருந்தாலும் அதற்கென வரைமுறைகள் வேண்டும் என சில நாட்டு சட்டங்கள் வரையறுக்கின்றன. அதே போல, சில நாடுகள் அச்சில் வெளியாகும் படக்கதைகளிலும் கூட குழந்தைகள் ஓவியம்/படம் இடம் பெறுமாயின் அதற்கென சில விதிகளைக் கொண்டுள்ளன.அது போலவே இந்தியாவிலும், எந்த ஒரு விடியோவும், விடியோ விளையாட்டு குறுந்தகடுகளும், எந்த மாதிரியான விடியோ என நாட்டு சட்டத்தில் சொல்லப்பட்டபடி பிரித்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் (classification). அதாவது அந்த குறுந்தகடு, பெரியவர்களுக்கு மட்டுமானதா?, குழந்தைகளும் பயன்படுத்தலாம் ஆனால் பெற்றோருடன் சேர்ந்தே பயன்படுத்தலாம் எனும் நிலையில் இருக்கிறதா என்பன போன்ற தகவலகள் அந்த குறுந்தகட்டு அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேற்சொன்னவை, குழந்தைகள் பயன்படுத்தும், மற்றும் பெரியவர்கள் பயன்படுத்தும் குறுந்தகடு, வீடியோக்களில், குழந்தைகள் நடித்திருந்தால், குழந்தைகளின் ஓவியம்/படம் இடம் பெற்றிருந்தால் என அனைத்தையும் சேர்த்ததே.அப்படி குழந்தைகள் பயன்பாட்டிற்கு இல்லாத குறுந்தகடுகளை பொது இடங்களில் வைத்திருப்பது கூட குற்றம் என பிற நாட்டுச் சட்டங்கள் சொல்வது போலவே இந்திய சட்டத்திலும் திருத்தம் கொண்டு வர வேண்டும்.


குழந்தை நடிகர்களின் பெற்றோரே பொறுப்பு:

இந்தியாவில் விளம்பரங்களில் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டால் அதற்கான விளம்ப்ரங்களில் நடித்தவர்களும் பொறுப்பாவார்கள் என சட்ட்த்திருத்தம் கொண்டு வரவிருப்பதாக செய்திகள் பகிரப்படுகின்றன. அச்செய்தி உண்மையானால், விளம்ப்ரங்களில் நடித்த குழந்தை நடிகர்களின் பெற்றோர்/பொறுப்பாளரே முழு பொறுப்பும் ஏற்க வேண்டும் என சட்டத்திருத்த்த்தில் சேர்க்கை கொண்டு வர வேண்டும். இந்தக் குழந்தைகள் பெறும் இது போன்ற பணம், அல்லது வீடு போன்ற பெரும் பரிசுப்பொருட்கள் பெற்றோர்/பொறுப்பாளராலேயே பெரிதும் அனுபவிக்கப்படுகிறது. அக்குழந்தைகளோ இன்னும் இன்னும் முன்னேற கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கவே வேண்டி இருக்கிறது. (California's Coogan Law பற்றி நாம் அறிந்திருக்கிறோம் தானே? அந்த சட்டம் கூகன் எனும் சிறுவன், தான் சம்பாதித்த பணம் அத்தனையையும் தாய் வைத்துக் கொண்டதால், அவர் மீது வழக்கிட்டான். அதை ஒட்டியே அந்தச் சட்டம் அவன் பெயரிலேயே கூகன் சட்டம் என்றானது.)(இந்தியாவில் The Juvenile Justice (Care and Protection of Children) Act 2000ன் படி குழந்தைகள் பெறும் பணத்தை மற்றவர் வைத்துக் கொள்வது என்பது தண்டனைக்குரியது).The Child Labour (Prohibition and Regulation Act 1986ன் பிரிவு 7, இடைவெளியின்றி மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஒரு குழந்தை வேலை செய்யக்கூடாது எனச் சொல்கிறது. ஒரு நாளில் ஆறு மணி நேரத்திற்கு மேலும், அதே போல இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரையிலும் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் சொல்கிறது.) இது போல ஊடக குழந்தை நட்சத்திரங்களின் பணி நேரமும் கால வரையறை செய்யப்பட வேண்டும்.


பரிந்துரையில் சிக்கல்:

குழந்தைகள் குறித்த சட்டங்களில் சொல்லப்பட்டிருப்ப்பவற்றை ஊடகப் பணியில் பின்பற்றுதலில் பிரச்சனைகள் உள்ளன.ஊடகப் பணியில், அவை நேரம் சார்ந்த காட்சியாக இருந்தால் சட்டத்தின் காலம் குறித்த இப்பகுதியைப் பின்பற்ற இயலாது. குழந்தைகள் பயன்படுத்தக் கூடாது எனச் சொன்னால், குழந்தைகளை வைத்து மட்டுமே சொல்லக்கூடிய சில சமூகக் கருத்துக்களைச் சொல்லவே இயலாது.குழந்தைகள் ஊடகங்களில் நிகழ்ச்சி தரக்கூடாதெனில், அவர்களின் திறமை வெளி உலகத்திற்கு தெரியாமல் போகும் அபாயம் மட்டுமே உண்டு.அக்குழந்தைகள் பணம் பெறக்கூடாதெனில், அவர்களை கவர, அவர்களின் திறமையை மேற் கொண்டுவர வழிதான் என்ன?மேற்கண்ட சிக்கல்களைக் களைய, ஊடக குழந்தை நட்சத்திரங்களுக்கு என தனிச் சட்டம் கொண்டு வர வேண்டி இருக்கிறது. தன் சுய தேவைக்காக சம்பாதிக்கும் குழந்தைகளுக்கும், தன் திறமை வெளித்தெரிய புகழ் சம்பாதிக்கும் குழந்தைகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உண்டுதானே?என்ன செய்யப்போகிறோம்?
- ஹன்ஸா (வழக்கறிஞர்)legally.hansa68@gmail.comPh.9994949195

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X