சுவாதி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவாதி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை

Updated : செப் 19, 2016 | Added : செப் 18, 2016 | கருத்துகள் (178)
Advertisement
சுவாதி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை

சென்னை: சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக. என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். ஏராளமான தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 1 ம் தேதி சுவாதியை கொலை செய்ததாக கூறி ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரின் வீட்டை போலீசார் சுற்றி வளைத்த போது ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.
ராம்குமார் தந்தை பேட்டி: இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமாரின் தந்தை பரமசிவன் அளித்த பேட்டியில், " என்னுடைய மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது. அவன் கொலையாளி அல்ல. அவன் உயிரோடிருந்தால் உண்மை எப்படியாவது வெளியில் வந்துவிடும் என்று பயந்து போலீசார் திட்டமிட்டு என் மகனை கொலை செய்துள்ளனர் " என்றார்.


சிறைத்துறை விளக்கம்ராம்குமாரின் தற்கொலை தொடர்பாக சிறைத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:ராம்குமார் மாலை 4.45 மணிக்கு தற்கொலைக்கு முயன்றார். சிறை சமையல் அறையில் இருந்த மின்கம்பியை வாயால் கடித்துள்ளார். மின் வயரை உடலிலும் செலுத்தியுள்ளார். இதை அறிந்ததும், ராம்குமாருக்கு சிறையில் முதலுதவி அளிக்கப்பட்டது. ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.
நாளை பிரேத பரிசோதனை:உயிரிழந்த ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு நாளை பிரேத பிரேத பரிசோதனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சுப்ரீம் கோர்ட் வரை செல்வேன்சம்பவம் தொடர்பாக ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் கூறுகையில் " ராம்குமாரை நேற்று நான் சிறைக்கு சென்று பார்த்தேன். அவன் நலமாக தான் இருந்தான். எந்தவித மன அழுத்தத்திலும் அவன் இல்லை. சிறை அதிகாரி விஜயகுமார் இருந்தவரை ராம்குமார் பாதுகாப்பாக தான் இருந்தான். அவர் இன்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ராம்குமார் இறப்பில் மர்மம் உள்ளது. அவன் உடலை பார்க்க போலீசார் அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் தீர்வு கிடைக்க சுப்ரீம் கோர்ட் வரை செல்வேன்" என்றார்.
வாசகர் கருத்து (178)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
24-செப்-201620:07:20 IST Report Abuse
Paranthaman யாரையோ காப்பாற்ற இவனை குற்றவாளியாக்கி விட்டார்கள் என்று இங்கே பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஊரில் இருப்பவர்கள் எல்லோரையும் விட்டு விட்டு போலீசார் அவனை மட்டும் பிடித்தது ஏன் எனபதை எவரும் சிந்திக்கவில்லை. அவனே, தான் தான் ஸ்வாதியை கொன்றதாக போலீசில் வாக்கு மூலம் கொடுத்து கையெழுத்தும் போட்டுள்ளான். அவன் கொலை செய்யவில்லை என்றால் கொலை நடந்த அன்று எதற்காக தான் தங்கியிருந்த ரூமை விட்டு சொந்த ஊருக்கு ஒடினான். கொலை அவன் செய்யவில்லை என்றால் அந்த ரூமிலேயே தங்கி இருக்கவேண்டியது தானே. சூளை மேடு தெருவில் அவன் பின்னால் தொங்கிய பேக்குடன் ஒரமாக நடந்து வரும்போது அவன் சட்டை காலரின் பின்பக்கம் தூக்கி விடப்பட்டு முதுகிற்குள் செருகி உள்ளது தெரியாதபடி மறைத்து அசைந்து அசைந்து நடந்து வருவதை பல வீட்டு கேமராக்கள் காட்டியதை பல தொலைக்காட்சிகளில் திருப்பி திருப்பி காட்டப்பட்டன. அவன் ரயில் நிலையத்திலிருந்து வேகமாக ஓடுவதையும் அந்த கேமராக்கள் காட்டின. அவன் நடையையும் முக சாயலையும் பின் பக்க முதுகையும் உற்று நோக்கியவர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
RK Riyas Ahamed Khan. - Delhi,இந்தியா
20-செப்-201615:21:55 IST Report Abuse
RK Riyas Ahamed Khan. ராமநாதபுரம் சிறையில் கைதிகள் தான் சமைக்கிறார்கள். அதுபோல் இவனும் சமையல் கட்டுக்கு சமைக்க சென்றிருப்பான். ஆதலால் இது கொலை அல்ல..தற்கொலைதான் .
Rate this:
Share this comment
Cancel
Priya - cbe,இந்தியா
20-செப்-201611:06:18 IST Report Abuse
Priya இதில் ஏதோ உண்மை இருக்கு அதனாலதான் அவனை கொன்னுருக்காங்க ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X