பொது செய்தி

இந்தியா

சோதனைச் சாவடிகளை சீரமைக்க மத்திய அரசு திட்டம்

Added : செப் 19, 2016 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு, நாடு முழுவதிலும் மாநில எல்லைகளில் உள்ள 80 சோதனைச் சாவடிகளை ரூ.4,000 கோடி செலவில் சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தெரிவித்ததாவது: ஜி.எஸ்.டி., சட்டம் அடுத்த ஆண்டு ஏப்., 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு,
சோதனைச் சாவடிகளை சீரமைக்க மத்திய அரசு திட்டம்

புதுடில்லி : ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு, நாடு முழுவதிலும் மாநில எல்லைகளில் உள்ள 80 சோதனைச் சாவடிகளை ரூ.4,000 கோடி செலவில் சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தெரிவித்ததாவது: ஜி.எஸ்.டி., சட்டம் அடுத்த ஆண்டு ஏப்., 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ், மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ள சுமார் 80 சோதனைச்சாவடிகளை சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி சரக்குகள் சுமூகமாக கொண்டுசெல்ல, ஒரு சோதனைச் சாவடிக்கு ரூ.50 கோடி வீதம், மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளை ரூ.4,000 கோடி செலவில் சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர, அனைத்து சோதனைச் சாவடிகளையும் இணைக்க ‛ஆப்' ஒன்றும் தயாராகி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
19-செப்-201613:25:18 IST Report Abuse
Selvaraj Thiroomal RTO ஆபீசுகளையே ஒழிக்க போகிறேன் என்றார் இப்போது செக்போஸ்ட்டுகளை மேம்படுத்த போகிறாரா??
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
19-செப்-201610:34:21 IST Report Abuse
Chandramoulli இப்போது எல்லா திட்டங்களும் ஆயிரக்கணக்கான கோடிகளில் தான் போடுகின்றனர். இப்படி திட்டம் போடும் நீங்கள் உங்கள் மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்கள் ஸ்டார்ட் அப் தொழில் தொடங்க 7 வருட வரி சலுகை என்கிறார். அவர்கள் மூலம் இந்த திட்டத்தை குறைந்த விலையில் செய்ய முயற்சி எடுக்க கூடாதா ?? பயணிகள் வாகனங்களுக்கு எந்த கட்டணங்களும் வசூல் செய்ய வேண்டாம். பொருள்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு வரி விதிப்பு செய்யுங்கள்.
Rate this:
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
19-செப்-201609:37:27 IST Report Abuse
Agni Shiva சோதனை சாவடியில் நடக்கும் திருட்டுத்தனங்களை தடுத்து நிறுத்த வேண்டும். சோதனை சாவடிகளை ஒழுங்காக பராமரிக்காத, மற்றும் சுத்தமான கழிவறை, அசதியாக இருக்கும் ஓட்டுனர்களுக்கு ஓய்வு எடுக்க, என்று போதுமான நிறைவான வசதிகள் செய்து கொடுக்கப்படாத சோதனை சாவடிகளின் உரிமங்கள் நிறுத்தப்படவேண்டும். டெல்லியில் இருந்து கொண்டே அனைத்து சாவடிகளையும் நேரடியாக கண்காணிக்கின்ற வசதியும் செய்யப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X