சங்கரன் சொல்றதை கேளுங்க...சந்தோஷமா வாழுங்க.

Updated : செப் 20, 2016 | Added : செப் 20, 2016 | கருத்துகள் (24)
Share
Advertisement
சங்கரன் சொல்றதை கேளுங்க...சந்தோஷமா வாழுங்க.கும்பகோணம் காய்கறி மார்கெட் மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கிறது, அனைவரது கவனமும் தங்களுக்கு பிடித்த காய்கறிகளை குறைந்த விலையில் வாங்குவதில் இருக்கிறது.இந்த நேரம் மார்கெட்டிற்குள் ஒருவர் இலை தலைகளாலான ஆடை அணிந்து கையில் கட்டிய சலங்கை மணி ஜல் ஜல்லென ஒலிக்க ஆதிவாசி போல நடந்து வருகிறார்.கொஞ்சம் பயத்துடனும்,நிறைய
சங்கரன் சொல்றதை  கேளுங்க...சந்தோஷமா வாழுங்க.

சங்கரன் சொல்றதை கேளுங்க...சந்தோஷமா வாழுங்க.

கும்பகோணம் காய்கறி மார்கெட்
மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கிறது, அனைவரது கவனமும் தங்களுக்கு பிடித்த காய்கறிகளை குறைந்த விலையில் வாங்குவதில் இருக்கிறது.

இந்த நேரம் மார்கெட்டிற்குள் ஒருவர் இலை தலைகளாலான ஆடை அணிந்து கையில் கட்டிய சலங்கை மணி ஜல் ஜல்லென ஒலிக்க ஆதிவாசி போல நடந்து வருகிறார்.
கொஞ்சம் பயத்துடனும்,நிறைய ஆர்வத்துடனும் யார் இவர் என்று மக்கள் காய்கறி வாங்குவதில் இருந்து தங்கள் கவனத்தை சற்றே திருப்புகின்றனர்.

இந்த சிறிய அவகாசம் அவருக்கு போதுமானதாக இருக்கிறது
ஐயா கேளுங்க அம்மா கேளுங்க நான் ஆதிவாசி பேசுறேன் போலியோ தடுப்பு மருந்து போட்டுக்கறது எவ்வளவு அவசியம்னு தெரிஞ்சு நாங்க எங்க குழந்தையோட வந்திருக்கோம். நீங்க உங்க குழந்தைக்கு போலியோ போட தயராகிட்டீங்களா? உங்க குழந்தைங்க மட்டும்னு இல்லை, உங்களுக்கு தெரிஞ்ச குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு மருந்து கொடுக்க உதவுங்க சரிங்களா? என்கிறார். ஜனங்கள் புரிந்துகொண்டதற்கு ஏற்ப தலையை ஆட்டியதும் அவர்களை பார்த்து கும்பிடுபோட்டுவிட்டு 'ஜல் ஜல்' ஒசையுடன் அடுத்த இடத்திற்கு செல்கிறார்.

இதே போல ஆள் உயர சிகரெட்டுடன் எமன் வேடமிட்டு சிகரெட் குடிப்பவர்களாக பார்த்து வேண்டாங்கய்யா விட்டுவிடுங்கய்யா உங்களை நம்பி புள்ள குட்டிங்க இருக்குங்கய்யா சின்ன வயசுல கேன்சர் வந்து அவதிப்படவேண்டாங்கய்யா, நான் எவனோ இல்ல எமன் சொல்றேன் கேளுங்கய்யா என்று பெட்டிக்கடை வாசலில் இருந்து கெஞ்சும் தொனியில் பிரச்சாரம் செய்வார்.
இவரது பிரச்சாரத்தை கேட்டுவிட்டு அந்த நொடியே சிகரெட்டை காலில் போட்டுமிதித்துவிட்டு 'இனி சிகரெட்டை தொடமாட்டேன்யா' என்று சொல்லிவிட்டு நகர்கின்றனர் ஒரிருவர்.இந்த வேடத்திற்கு, இந்த பிரச்சாரத்திற்கு இன்று இரண்டு பேர் திருந்தினார்ளே அதுவே போதும் என்று பெருமையுடன் அடுத்த பெட்டிக்கடை நோக்கி நகர்கிறார்.

மறுவாரம் பான்பாராக் மாலையை போட்டுக்கொண்டு, கேன்சர் வந்து பாதிக்கப்பட்டவர்கள் வாய்பகுதி படத்தை பெரிதாக வரைந்து கொண்டு, எங்கெல்லாம் பான்பராக் விற்கிறார்களோ அங்கெல்லாம் போய் நின்று பான்பராக் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்குகளை சாப்பிடாதீர்கள்,கேன்சரை வலிய வரவழைக்காதீர் என்று சொல்லி ஆதாரமாக துண்டு பிரசுரங்களை நீட்டுகிறார்.படித்துவிட்டு இவரது பிரச்சாரத்தை கேட்டுவிட்டு இனி பான்பராக் போடமாட்டேன் என்று சொல்லி வாயில் போட்டிருந்த பான்பராக்கை துப்பிவிட்டு செல்கையில் கையெடுத்து கும்பிட்டு வணங்கி வாழ்த்துகிறார்.
இது போல குடற்புழு நீக்க பிரச்சாரத்திற்கு ஒரு வேடம்,டெங்கு காய்ச்சலை தவிர்க்கும் பிரச்சாரத்திற்கு ஒரு வேடம் என்று பல்வேறு விதமான வேடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலக்குகிறார்.

நடந்துமுடிந்த மகாமகத்தில் பல லட்சம் பேரை பார்த்து சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது, இதை ஒரு சுமையாக பார்த்தவர்கள் மத்தியில் சுகமாகவும், பாக்கியமாகவும் கருதி செயல்பட்டவர் இவர்.
இவர் யாரோ ஒரு சமூக ஆர்வலர் அல்லர்.

தமிழக அரசின் சுகதார துறையின் கீழ் இயங்கக்கூடிய கும்பகோணம் வட்டார சுகாதரா மேற்பார்வையாளர் சங்கரன் ஆவார்.
நோய்தடுப்பு நடவடிக்கை எடுக்கும் சுகாதார ஆய்வாளர்களின் பணிகளை ஆய்வு செய்தல்,முடுக்கி விடுதல்,மேலதிகாரிகளுக்கு தகவல் சமர்ப்பித்தல் போன்ற சுகாதாரம் தொடர்பான வேலைகளை செய்யும் அரசு அதிகாரி.

ஜீப்பில் ஒரு ரவுண்டு வந்து 'என்னப்பா வேலை எல்லாம் ஒழுங்கா நடக்குதா?' என்று எப்போதவாது கேட்டுவிட்டு போனாலே இவரது பதவிக்கு போதுமானது

ஆனால் இது மக்களின் குறை தீர்க்கும் புனிதமான பணி, இதை பொறுப்புடன் பார்க்கவேண்டும் என்று அவருக்கு அவரே வகுத்துக்கொண்டே கொள்கையின் காரணமாக எப்படி எல்லாம் அரசின் விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களிடம் போய்ச் சேர்க்கலம் என்று சிந்தித்து சிந்தித்து செயல்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.பாட்டு,மிமிக்ரி மற்றும் குரல்வளம் இவரது பணிக்கு கூடுதல் பலம்.

அதுவும் அரசுப்பள்ளி குழந்தைகளிடம் பேசுவதென்றால் கொள்ளைப்பிரியம், பலவிதமான வாத்திய கருவிகளின் ஒசையை வெறும் வாயால் எழுப்பி, பாட்டுப்பாடி மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பார். இதே மாதிரி மிமிக்ரி, பாட்டுப்பாட ஒரே ஒரு ரகசியம் உண்டு, தினமும் இரண்டு வேளை பல்துலக்கி நாக்கை சுத்தம் செஞ்சுக்க, இப்படி ஒரு மாதம் செஞ்சு பாரு பாட்டு பிரமாதமவரும் என்பார். பாட்டு வருகிறதோ இல்லையோ ஒரு மாதம் இரு வேளை பல்துலக்கி பழக்கப்பட்டுவிட்டால் பின் ஆயுளுக்கும் அந்தப்பழக்கத்தை மாணவர்கள் விடமாட்டார்கள்.

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி (வேடமிடும் செலவிற்கு) கைகாசை செலவழித்து, டிவிஎஸ்50 வாகனத்தில் பயணித்து,மக்களை பார்த்த மாத்திரத்தில் வாகனத்தில் இருக்கும் கைமைக்கை எடுத்து பிரச்சாரம் செய்தபடி வலம்வந்து பணியாற்றும் இவரைப் போன்ற உண்மையான, நேர்மையான, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அரசு ஊழியரை அடையாளம் கண்டு அரசு விருது வழங்கி கவுரவிக்கவேண்டும்.

தொடர்புக்கு:9442181878.

படம்,தகவல் உதவி:தஞ்சாவூர் சுந்தர்ராஜன்

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subbiah - chennai,இந்தியா
31-அக்-201611:52:07 IST Report Abuse
subbiah இவரது பணி தெய்வீக பணி . காசு வாங்காத அரசு ஊழியர் உண்மையிலேயே ஒரு லட்சியவாதியாகத்தான் இருக்கவேண்டும்.அதிலேயும் மக்கள் பணி செய்யும் இவர் ஓர் சீர் திருத்த வாதி அல்லது ஒரு தியாகியாதான் இருக்கவேண்டும்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-அக்-201604:28:24 IST Report Abuse
meenakshisundaram அரசாங்க ஊழியர்கள் மக்களின் தேவைகளை காசு வாங்காமல் குறுகிய நேரத்தில் முடித்துக்கொடுத்தாலேயே நாடு வளம் பெரும்.இந்த அளவுக்கு பணி செயதாலோ பொற்காலமே வந்து விடும்.வாழ்க அவரின் சேவை.
Rate this:
Cancel
Bakthavathsalam Vathsalam - Chennai,இந்தியா
18-அக்-201609:54:48 IST Report Abuse
Bakthavathsalam Vathsalam ஐயா உங்களுடைய இந்த சமுதாய சேவைக்கு என் வாழ்த்துக்கள்... செய்யும் வேலையை முழுமனதுடன் செய்வதற்கு ஆக்கபூர்வமாக செய்வதற்கு ஈடு எதுவும் இல்லை.. நன்றி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X