மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், நகரங்களை தேர்வு செய்யும் மூன்றாவது கட்ட போட்டியில், தமிழகத்தை சேர்ந்த மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலுார் ஆகிய நான்கு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக, 'ஸ்மார்ட் சிட்டி' திகழ்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்கள், வளர்ந்த நாடுகளில் உள்ள, அனைத்து வசதிகளும் உடைய, 'ஹைடெக்' நகரங்களை போல் மாற்றப்படும்; இதற்காக, பல லட்சம் கோடி ரூபாய் செலவிட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இதற்கு முந்தைய போட்டிகளில், தமிழக தலைநகர் சென்னை யும், கோவையும் தேர்வு செய்யப்பட்டன. இந்நிலையில், மூன்றாம் கட்டமாக நடந்த தேர்வுக்கு, 63 நகரங்கள் போட்டியில் இருந்தன. இதிலிருந்து, 27 நகரங்கள் தேர்வாகின.
இதில், தமிழகத்தை சேர்ந்த, மதுரை, வேலுார், சேலம், தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம், தமிழகத்தில், ஸ்மார்ட் சிட்டிகளாக உருவெடுக்கப் போகும் நகரங்களின் எண்ணிக்கை, ஆறாக அதிகரித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களின் பட்டியலை, டில்லியில் வெளியிட்ட, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான வெங்கையா நாயுடு கூறியதாவது:
இந்தியாவில் நிகழ்ந்து வரும் பொருளாதார புரட்சியால், நகரங்களில் மறுமலர்ச்சி ஏற்பட்டு
வருகிறது; இருப்பினும், இந்த நகரங்களை, ஒரே
நாளில், ஸ்மார்ட் சிட்டிகளாக உருமாற்றிட முடியாது. மூன்றாவது கட்டத் தேர்வில், 27 நகரங்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளன; இவற்றை, ஸ்மார்ட் சிட்டிகளாக உருமாற்ற, 66 ஆயிரத்து, 883
கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இதில், 42 ஆயிரத்து, 524 கோடி
ரூபாய், பகுதி அடிப்படையிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்;
ஸ்மார்ட் சிட்டியாக, தேவைப்படும் தொழில் நுட்ப வளர்ச்சித் திட்டங்களுக்கு,
11 ஆயிரத்து, 378 கோடி ரூபாய் செலவிடப்படும். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ், இதுவரை, 60 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மோடி தொகுதியும் தேர்வு
தற்போது வெளியான பட்டியலில், மேற்கு வங்கம், பீஹார் மாநிலங்களை சேர்ந்த நகரங்கள் இடம் பெறவில்லை. பட்டியலில் இடம்பெற்ற, 27 நகரங்களில்,10, பா.ஜ., ஆளும் மாநிலங்களை சேர்ந்தவை.
பா.ஜ., ஆட்சியில் உள்ள மஹாராஷ்டிராவை சேர்ந்த, தானே, நாசிக், நாக்பூர், கல்யாண் தொம்பிவாலி, அவுரங்காபாத், ம.பி.,யை சேர்ந்த, குவாலியர், உஜ்ஜயின், ராஜஸ்தானை சேர்ந்த, கோடா, அஜ்மீர், குஜராத்தை சேர்ந்த, வதோதரா ஆகிய நகரங்கள், ஸ்மார்ட் சிட்டிகளாக உருவெடுக்க உள்ளன.
காங்., ஆளும் கர்நாடகாவை சேர்ந்த, ஹூப்ளி - தார்வாட்,மங்களூரு,ஷிவமொகா, துமகூரு ஆகிய நான்கு நகரங்கள், ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரூர்கேலா நகரும், பட்டியலில் உள்ளது. ஆந்திரா வின் திருப்பதி, சிக்கிமை சேர்ந்த, நாம்சி, நாகாலாந்தை சேர்ந்த, கோஹிமா ஆகிய நகரங் களும் தேர்வாகி உள்ளன.
அடுத்தாண்டு, சட்டசபைத் தேர்தலை சந்திக்க வுள்ள, உ.பி.,யில், பிரதமர் மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசி மற்றும் கான்பூர், ஆக்ரா, பஞ்சாபில், அமிர்தசரஸ், லுாதியானா ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
'ஸ்மார்ட் சிட்டி' என்றால் என்ன?
உலகத் தரம் வாய்ந்த தொழில்
நுட்பத்துடன், அனைத்து கட்டமைப்பு வசதிகள் அமைந்த நகரம், ஸ்மார்ட் சிட்டி
எனப்படும். இந்த நகர மக்களின் வாழ்க்கைத் தரம், சர்வதேச நகரங்களுடன்
ஒப்பிடும் வகையில் இருக்கும். சுத்தமான குடிநீர், தடையற்ற மின்சாரம், பளபளக்கும் சாலைகள், மின்னல் வேக இணைய வசதி, தானியங்கி கழிவு அகற்றல் நடைமுறை, சிறப்பான பொது போக்குவரத்து, 'டிஜிட்டல்' மயமான, பொது சேவைகள், குறைந்த விலையில் வீடு ஆகியவை, ஸ்மார்ட் சிட்டியின் கட்டமைப்பு அம்சங்கள்.
தேர்ந்தெடுக்கும் முறை
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான நகரங்கள், இரு கட்ட நடைமுறை மூலம் தேர்வு செய்யப் படுகின்றன. முதல் கட்டமாக, மாநில அரசுகள், ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுக்கத்தக்க நகரங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு பட்டியலை அனுப்பும். அனைத்து மாநிலங் களும் அனுப்பும் பட்டியலில் இடம்பெறும் நகரங்கள், அவற்றின் தற்போதைய கட்டமைப்பு வசதிகளை பொறுத்து, இரண்டாவது கட்டத் தேர்வில் பங்கேற்கும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, மத்திய அரசு, தன் பங்காக, ஐந்து ஆண்டுகளுக்கு, 48 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு நகரத்துக்கும், ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வீதம் செலவிடப்படும். மத்திய அரசு வழங்கும் தொகைக்கு நிகராக, அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து முதலீடு செய்யும்.
அடுத்தாண்டில் 40 நகரங்கள்
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
இதுவரை, 60 நகரங்கள் தேர்வாகி உள்ளன. மீதமுள்ள, 40 நகரங்களை தேர்வு செய்யும் பணி, அடுத்தாண்டு, ஜனவரியில் துவங்கும். வரும், 2022க்குள், இந்தியாவில், 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்பட்டு இருக்கும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (44)
Reply
Reply
Reply