லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..

Updated : செப் 22, 2016 | Added : செப் 22, 2016 | கருத்துகள் (66)
Share
Advertisement
லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..அது ஒரு ஞாயிற்றுக்கிழமை சினிமா,சீரியல்,ஒட்டல் என்று நான்கு சுவருக்குள் மதுரையே முடங்கிக்கிடக்கிறது.அதே நாளில் அதே வேளையில் சுற்றுலா தலமான மதுரை தெப்பக்குளத்தின் பக்கம் ஒரு பஸ்சில் வந்திறங்குகிறார் ஒல்லியான ஒரு இளம் பெண்.கறுப்பு டிசர்ட்டுடன் காணப்பட்ட அவர் ஏதோ ஜாக்கிங் போல தேகப்பயிற்சி செய்யப்போகிறாரோ என்று பார்த்தால் கையில்
 லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..

லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை
சினிமா,சீரியல்,ஒட்டல் என்று நான்கு சுவருக்குள் மதுரையே முடங்கிக்கிடக்கிறது.

அதே நாளில் அதே வேளையில் சுற்றுலா தலமான மதுரை தெப்பக்குளத்தின் பக்கம் ஒரு பஸ்சில் வந்திறங்குகிறார் ஒல்லியான ஒரு இளம் பெண்.கறுப்பு டிசர்ட்டுடன் காணப்பட்ட அவர் ஏதோ ஜாக்கிங் போல தேகப்பயிற்சி செய்யப்போகிறாரோ என்று பார்த்தால் கையில் இருந்த ஒரு பெரிய பையில் அந்த பகுதியில் கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் உள்ளீட்ட குப்பை கூளங்களை பொறுக்க ஆரம்பிக்கிறார்.
பொறுக்கிய குப்பையால் பை நிரம்பியதும் அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் கொண்டு போய் பொறுக்கிய குப்பையை போட்டுவிட்டு அடுத்த இடத்தில் உள்ள குப்பையை அள்ளப்போகிறார்.இப்படியே அங்குள்ள பல பகுதிகளில் உள்ள குப்பைகளை அள்ளி சுத்தம் செய்துவிட்டு நிமிர்கிறார்.

தான் செய்த வேலை தனக்கு திருப்தி என்று தெரிந்தவுடன் அடுத்த பஸ்சில் ஏறி அங்கிருந்து கிளம்பி அடுத்த சுற்றுலா தலமான திருமலை நாயக்கர் மஹால் பகுதிக்கு செல்கிறார்.
அவர் அங்கு போய் சேர்வதற்குள் அவரது சுருக்கமான கதையை படித்துவிடுவோம்.

சத்யா என்கின்ற சத்யாஸ்ரீ
மதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர்

அம்மா குருவம்மா அப்பள கம்பெனியில் வேலை பார்த்து மகள் சத்தயாவை மிகவும் சிரமப்பட்டு படிக்கவைத்தவர்.
சிரமம் என்றால் கொஞ்ச நஞ்ச சிரமமல்ல

நல்ல சாப்பாடோ நல்ல துணிமணியோ கிடையாது, தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகையை எல்லாம் கொண்டாடியது கிடையாது, சினிமா நாடகம் போன்ற பொழுதுபோக்கிறகு எல்லாம் வழிகிடையாது.
இதை எல்லாம் மனதில் நிறுத்தி படிப்பை மட்டுமே கவனித்தார் படிப்பிற்கு தேவையான பணத்தை அப்பளகம்பெனியில் பார்ட் டைம் வேலை பார்த்து சம்பாதித்துக்கொண்டார்.

இப்படியே நல்ல மார்க்குகளுடன் முதுகலை படித்து முடித்தார்.23 வயதில் ஒரு பள்ளியின் முதல்வர் ஆனார்.பள்ளியை பல மடங்கு உயர்த்திகாட்டினார் இதன் காரணமாக மாவட்ட ஆட்சித்தலைவர் துவங்கி மாநில தலைமைவரை சான்றிதழ் பெற்றார்.
இந்த சான்றிதழ் தகுதி திறமை காரணமாக வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் வந்தது, யாராக இருந்தாலும் இருந்த கஷ்டத்திற்கு ஒடிப்போய் வேலையில் உட்கார்ந்திருப்பார்கள் ஆனால் சத்யா போகவில்லை.

அவரது மன ஒட்டம் வேறுமாதிரியாக இருந்தது.
கல்விதான் ஒருவரை உயர்த்தும் ஆகவே அனைவருக்கும் கல்வி என்ற லட்சியத்திற்கு துணை நிற்பது என்று முடிவு செய்தார்.

பள்ளி,கல்லுாரி விழாக்களில் சென்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிவருகிறார்.கல்வியை பாதியில் விட்டவர்களை தேடிப்பிடித்து படிப்பை தொடரச்செய்கிறார். கல்லுாரியில் படித்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு பாதியில் திருமணம் செய்வதை தடுத்து நிறுத்தி முழுமையாக படிக்கவைப்பதில் தீவிரமாக இருக்கிறார்.இதற்காக நகரம் கிராமம் என்று பயணம் மேற்கொள்கிறார்.
தனது இந்த கல்வி விழிப்புணர்வு சேவைக்கு பார்க்கும் வேலைகள் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக பார்த்துக்கொண்டிருந்த முழுநேர கார்ப்பரேட் வேலையை பகுதி நேர வேலையாக மாற்றிக்கொண்டார்.

வறுமை வாட்டிய போது எப்படி இரு வேளை சாதாரண உணவும், சாதாரண உடையும் கொண்டிருந்தாரோ அதே நிலையைத்தான் இப்போதும் தொடர்கிறார். பணத்தை ஒரு காலத்திலும் பொருட்டாக மதித்ததே இல்லை.எந்த கல்வி நிலையத்திற்கு பேசப்போனாலும் குடிக்கும் தண்ணீரைக்கூட இவரே கொண்டு போய்விடுவார்,அங்கு தரப்படும் எந்த பணம் பரிசையும் ஏற்கமாட்டார்.யாரிடமும் எந்த உதவியும் கேட்டது கிடையாது ஆனால் இவரிடம் கல்வி தொடர்பாக யார் வந்த எந்த உதவி கேட்டாலும் முடிந்தவரை உதவுவார்.
கண்கள்,உடல் உறுப்புகள்,உடல் போன்றவைகளை தானமாக எழுதித்தந்துவிட்டார் இது போக ரத்த தானமும் செய்து வருகிறார்,'ஒல்லியா இருந்துகிட்டு உனக்கே ரத்தம் பத்தாது இதில ரத்ததானம் வேறேயே?' என்று அம்மா சத்தமிட்டால் 'என்கிட்டே இருந்து ரத்தம் எடுப்பதா?வேண்டாமா? என ரத்தம் எடுக்கும் அரசாங்க ஆஸ்பத்திரி டாக்டர் முடிவு செய்யட்டும் நீ முடிவு செய்யாதே'என்று சொல்லி தாயின் வாயை அடைத்துவிடுவார்.

பசியின் கொடுமை தெரியும் என்பதால் யாராவது பசி என்றால் கையிலிருக்கும், பையிலிருக்கும் பணத்தை எல்லாம் சாப்பாடாக வாங்கி கொடுத்துவிடும் குணம் கொண்டவர், இப்படி பஸ்சுக்கு வைத்திருந்த பணத்தை கூட கொடுத்துவிட்டு நடந்து வந்த நாட்கள் பல உண்டு.
பெற்ற கல்வியை கற்றுத்தருவதில் ஆர்வம் அதிகம் என்பதாலும், எளிய முறையில் இலவசமாக சொல்லித்தருவார் என்பதாலும் தேர்வு நேரத்தில் விடிய விடிய இவரது வீட்டில் மாணவர் கூட்டம் அலைமோதும்.

ஞாயிற்றுக்கிழமை என்றால் வேலை செய்யாமல் வெட்டியாக துாங்கி சினிமா சீரியல் பார்த்து பொழுது போக்கும் நாள் என்றாகிவிட்ட நிலையில் அன்றைய தினம் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஊரை, குறிப்பாக வெளிநாட்டவர் வந்து போகும் சுற்றுலா தலங்களின் குப்பை கூளங்களை அள்ளி சுத்தம் செய்யக் கிளம்பிவிடுவார்.
அப்படிப்பட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமைதான் அவரை பார்த்தது.

விரைவில் பிஎச்டி முடிக்கப் போகிறார், அவருக்குள் ஒரே ஒரு ஆசை இருக்கிறது சென்னையில் தரமான ஒரு ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து படித்து ஐஏஎஸ் ஆகிவிட வேண்டும் என்பதுதான் அந்த விருப்பம், அவரது விருப்பம் நிறைவேற வாசகர்களும் வழிகாட்டலாம்.
தொடர்புக்கு:9677540323

mail id sathiyaannadurai1992@gmail.com
---எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh - trichy,இந்தியா
20-ஜூலை-201717:50:38 IST Report Abuse
suresh FRIENDS PLEASE CHECK THIS GIRLS BACKGROUND.
Rate this:
Cancel
Pillai Rm - nagapattinam,இந்தியா
15-நவ-201613:32:28 IST Report Abuse
Pillai Rm வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
tamilventhan - Al juabil,சவுதி அரேபியா
27-அக்-201616:17:25 IST Report Abuse
tamilventhan வாழ்த்துக்கள் சகோதரி .இந்த பதிவை படிக்கும் போது மெய் சிலிர்த்து போனேன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X