ஊட்டச்சத்தும் உடல் நலமும்

Added : செப் 22, 2016 | கருத்துகள் (1)
Advertisement
ஊட்டச்சத்தும் உடல் நலமும்

ஒரு நாட்டின் மனித வளம் தான், அந்நாட்டின் முன்னேற்றத்தை நிர்ணயிக்கிறது என்றால் மிகையாகாது. மனித வளம் நன்றாக இருக்க நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சுகாதார முறையில் உண்ண வேண்டும். ஊட்டச்சத்து, சுகாதாரம் இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். உணவை சக்தி தரும் உணவு, வளர்ச்சி தரும் உணவு, பாதுகாப்பு தரும் உணவு, கூடுதல் சக்தி தரும் உணவு என பிரிக்கலாம்.சக்தி தரும் உணவில் (மாவுச்சத்து) அரிசி, கேழ்வரகு, கோதுமை, கம்பு, சோளம், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு அடங்கும். கேழ்வரகு தானியங்களின் ராணி.வளர்ச்சித் தரும் உணவில் (புரதம்) துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு, தட்டை பயறு, மொச்சை, கொள்ளு, சோயா பீன்ஸ் அடங்கும். பாதுகாப்பு தரும் உணவில் கீரைகள், பழங்கள், காய்கறிகள் அடங்கும். தண்ணீரும் இதில் அடங்கும். கூடுதல் சக்தி தரும் உணவில் (கொழுப்பு) எண்ணெய், நெய், வெல்லம், தேன் அடங்கும். மேற்கண்ட உணவுகள் நம் உடலுக்கு தேவையான அளவில் கிடைக்கவில்லை எனில் ஊட்டச்சத்து குறை நோய் ஏற்படும். மாவுச்சத்து குறைவால் நோஞ்சான் நோய், புரதச்சத்து குறைவால் சவலை நோய், கொழுப்பு சத்து குறைவால் தோல் நோய், தவளைச் சோரி நோய் ஏற்படும். பெரும்பாலும் பாதுகாப்பு தரும் உணவு குறைப்பாட்டால் தான், அதிக நோய்கள் ஏற்படுகின்றன.
தாக்கும் நோய்கள் : வைட்டமின் 'ஏ' குறையால் கண்பார்வை குறைபாடு, மாலைக்கண் நோய், வைட்டமின் 'பி' குறையால் தோல்நோய், வைட்டமின் 'சி' குறையால் ஸ்கர்வி (பல் ஈறுகளில் ரத்தம் வழிதல்), வைட்டமின் 'டி' குறையால் ரிக்கெட்ஸ் (எலும்பு, மூட்டுக்களில் குறைபாடு),வைட்டமின் 'இ' குறையால் மலட்டுத்தன்மை, வைட்டமின் 'கே' குறையால் ரத்தம் உறைதல் போன்ற நோய்கள் ஏற்படும். இதில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ரத்தசோகையும், தற்காப்பும் : இரும்புச்சத்து குறைவால் ரத்தசோகை ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் பாலுாட்டும் தாய்மார்கள், குழந்தைகள் இடையே ரத்தசோகை அதிகம் காணப்படுகிறது. ரத்தசோகை ஏற்பட்டால் உடல் வெளிறிப்போதல், எளிதில் களைப்படைதல், பசியின்மை, மூச்சு வாங்குதல், உடல்முழுவதும் வீக்கம் ஏற்படும். இதயம் பலவீனமாகும், கவனக்குறைவு, முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். ரத்தசோகை வராமல் இருக்க காபி, டீ குடிப்பதை தடுக்க வேண்டும். அப்படியே குடித்தாலும் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்பும், குடிக்க வேண்டும். சீனியை உணவில் சேர்க்காமல் அதற்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி சேர்க்கலாம். தினம் ஒரு கீரை உணவில் சேர்க்க வேண்டும். கீரையை பறித்த ஒரு மணி நேரத்திற்குள் சமைக்க வேண்டும். சமைத்த ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்.
உயிர் (சொ)சத்துக்கள் : இரும்புச்சத்து மாத்திரை ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. கர்ப்பக்காலத்தில், தாய் கட்டாயம் 100 இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து உள்ள மாத்திரை சாப்பிடும் நாட்களில் எலுமிச்சை சாறு, நெல்லிக்காய், ஆரஞ்சு உணவில் சேர்க்க வேண்டும்.அயோடின் சத்து குறைவால் குள்ளத்தன்மை, மூளை வளர்ச்சிக் குறைவு, குறை பிரசவம், சிசு இறப்பு, இன விருத்தி குறைபாடு, கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், செவிட்டுத்தன்மை, கை, கால் பலவீனம் அடைதல் போன்ற நோய்கள் ஏற்படும். வராமல் தடுக்க அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். இயற்கையான தண்ணீரிலும், பயிர்களிலும் அயோடின் சத்து கிடைக்கும். அதேபோல் மீன், நண்டு, இறாலிலும் இச்சத்து அதிகம் உள்ளது.அயோடின் உப்பை பாக்கெட்டில்இருந்து பிரித்ததும், காற்று புகாத டப்பாவில் பொட்டு மூடி வைக்க வேண்டும். ஈர கையால் உப்பை தொடக்கூடாது. அடுப்பருகே உப்பு டப்பாவை வைக்க கூடாது. நாம் சமைத்த உணவை அடுப்பிலிருந்து இறக்கிய பிறகே உப்பு சேர்க்க வேண்டும். கால்சியம் சத்து குறைவால் எலும்பு மற்றும் பற்களில் உறுதியின்மை ஏற்படும். தானியங்கள், பால், தயிர், முட்டை, வேர்க்கடலை, கீரை, காய்கறி, சிறுமீன்கள், எண்ணெய் வித்துக்கள் இவற்றில் அதிகம் கால்சியம் சத்து உள்ளது.
சமைத்த உணவுகள் : துத்தநாகம் சத்து குறையும் போது கருச்சிதைவு, குழந்தை பிறப்பதில் சிக்கல், அதிக ரத்தப்போக்கு, வயிற்று போக்கு, தோல் வியாதிகள், உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படும். இதை தடுக்க பருப்பு, பயறு வகைகள், முழு தானியங்கள், பால், பால் பொருட்கள், முட்டை, மாமிசம், மீன், காய்கறி, கீரை, பழங்கள் தினசரி உணவில் சேர்க்க வேண்டும். ஊட்டச்சத்துக்கள் கெடாதவாறு சமையல் செய்ய வேண்டும். கீரைகளை கழுவிய பிறகு சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். சமைத்த உணவுகளை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.காய்கறிகள், பருப்பு வேக வைத்த தண்ணீரை கொட்டாமல், குழம்பு, சூப் வைக்க பயன்படுத்தலாம். ஆவியில் வேக வைத்த உணவுகளே உடலுக்கு நல்லது. கீரை சமைக்கும் போது பாத்திரத்தை மூடாமல் சமைக்க வேண்டும். பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தக் கூடாது. சோடா உப்பு, வைட்டமின்களை அழிக்கும். சோடா உப்பு, சுவையூட்டிகள், நிறப்பொடிகள் உணவில் பயன்படுத்த கூடாது. உருளைக்கிழங்கில் உள்ள பச்சை தன்மையை பயன்படுத்தாதீர்கள். அது நச்சுத்தன்மை கொண்டது. முளைக்கட்டிய தானியங்கள், பயறு வகைகளை சேர்த்து சத்துமாவு தயார் செய்து அவற்றுடன் வெல்லம், உப்பு சேர்த்து கஞ்சி தயாரித்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காலையில் 'காபி, டீ' க்கு பதிலாக குடிக்கலாம்.
சத்துணவு திட்டம் : குழந்தைகளின் மூளை வளர்ச்சி 5 வயதிற்குள் 90 சதவீதம் முடிவடைகிறது. எனவே, அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக மிக அவசியம். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாதவர்களாக வளர வேண்டும் என்பதற்காக அரசு சத்துணவு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள், தாய்மார்கள், பிறப்பு முதல் 5 வயது குழந்தைகள், வளர் இளம்பெண்கள் ஆகியோர் பயன் அடைகின்றனர். குழந்தைகள் கருவில் இருந்தே ஊட்டச்சத்துடன் வளர வேண்டும் என்பதற்காக கர்ப்பம் என்று தெரிந்ததும், தினமும் 160 கிராம் இணை உணவு என்ற ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது. இதில் அமைலேஸ் சத்து உள்ளது.கருவில் இருந்து குழந்தையின் இரண்டு வயது வரை இணை உணவு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகின்றது. இதனை வாங்கி தவறாது பயன்படுத்துங்கள். இணை உணவு தான் உங்கள் குழந்தையின் முதல் உணவாக இருக்க வேண்டும். இரண்டு வயது முதல் 5 வயது வரை அங்கன்வாடி மையத்தில், சத்தான சரிவிகித உணவு மதிய நேரத்தில் விதவிதமாக வழங்கப்படுகிறது. அரசு நல திட்டங்களை பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடில்லாத பெரு வாழ்வு வாழ வேண்டும்.
- -ஆர்.மங்கையர்கரசிகுழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பணி ஓய்வு)

காரைக்குடி. 98424 44120.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayadev - CHENNAI,இந்தியா
23-செப்-201610:32:25 IST Report Abuse
Jayadev ஊட்ட சத்து என சொல்லும்போது நிறைய பேருக்கு SOYA பீன் உணவு வகைகளை பற்றி தெரிவதில்லை. மற்ற எல்லா உணவுகளை காட்டிலும் அதிக கொழுப்புசக்தியும் , அதிக ப்ரோடீன்களும் கொண்டது SOYA BEAN உணவுகள். ப யிரிடுவதில் உலகளவில் இந்தியா 5 வது இடத்தில இருக்கிறது. ஆப்பிரிக்கா இதன் பிறப்பிடம். அதன் அருமை தெரிந்த அமெரிக்கர்கள் தங்களது நாட்டில் முக்கிய உணவாக அங்கேயே விளைவித்து உண்ணுகிறார்கள். உடல் வலிமைக்கு மிகவும் உகந்தது.நமது நாட்டில் சுமார் Rs200/ கோடி சிலவுகள் செயது 300 ஏக்கரா நிலத்தில் ஆராச்சி நிலையம் உள்ளது. விவசயிகளுக்கு பண உதவியுடன் நேரி டையாக படிப்பு சொல்லி தருகிறார்கள் தமிழ்நாட்டில் சூப்பர்மார்கெட்டில் இதன் பல வகை உணவு பொருள்கள் கிடைக்கும் .விபரங்களுக்கு wwwruchifoods com இல் தெரிந்து கொள்ளலாம். விவசாயிகளுக்கு கரும்புக்கு அடுத்தபடியாக அதிக அதிக லாபம் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X