வண்ணக் கோழிகளை புறக்கடையில் வளர்ப்பதன் மூலம் வீட்டில் உள்ள பெண்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், நிலமற்ற விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோர் பொருளாதார வளத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.நாட்டுக் கோழி இனத்தில் இருந்து, கால்நடை பல்கலைக் கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை, வண்ணக் கோழிகள் என்று அழைப்பர். நந்தனம் - 1 மற்றும், 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என, பல்வேறு இனக் கோழிகள், உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வண்ணக் கோழி இனங்கள், பார்ப்பதற்கு நாட்டுக் கோழி போன்று காணப்படும். ஆனால், இவற்றுக்கு நாட்டுக் கோழிகளை விட பல சிறப்பான இயல்புகள் உண்டு.குறிப்பாக, இந்த கோழிகள், கரையான்களை உணவாக பயன்படுத்துவதன் மூலம் அதிக புரதச்சத்தை பெற்று, அதன் எடை வேகமாக அதிகரிக்கும்.இந்த கோழிகளை, புறக்கடையில் வளர்ப்பதன் மூலம் வீட்டில் உள்ள பெண்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், நிலமற்ற விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோர் பொருளாதார வளத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.சிறப்பம்சம்வண்ணக் கோழி வளர்ப்பில் சிறப்பம்சம் என்னவென்றால், நாட்டுக் கோழிகளை விட துரிதமாக எடை கூடும். சுவை மிகுதி. அனைத்து இடங்களிலும், எல்லா தட்ப வெப்ப நிலைகளையும் தாங்கி வளரும். அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.அதி நவீன வளர்ப்பு முறைகளை பயன்படுத்தி வளர்க்க தேவையில்லை. சாதாரண நாட்டுக் கோழி போல் புறக்கடை வளர்ப்பாக வளர்க்க முடியும். அதிக முட்டைகள் இடும் திறனும் கொண்டது.கரையான் உணவுகரையான்களில், 36 சதவீதம் புரதம்; 44 சதவீதம் கொழுப்பு உள்ளது. இவை இரண்டும், கோழியின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் வளர்ச்சி விகிதம், 15 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது.வேலிமசால், குதிரைமசால் மற்றும் அசோலா போன்ற நீலப்பச்சை பாசியை, 5 முதல், 10 சதவிகிதம் அறுவடை செய்து கொடுக்கலாம்.வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களை உற்பத்தி செய்ய பெரிய அளவில் இடவசதி தேவையில்லை. ஒரு தடவை நடவு செய்தால், 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து இவற்றை அறுவடை செய்து பசுந்தீவனம் தயாரிக்கலாம்.வண்ணக் கோழிகளை வளர்க்க முற்படும் போது அவற்றை நோய்களில் இருந்து பாதுகாக்க தகுந்த காலகட்டத்தில், தடுப்பூசி போட வேண்டும் என திருப்பூர் கால்நடை பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
-நமது நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE