தாய் சங்கம் "சைமா'வுக்கு தேர்தல் வருமா... இதனால் சகலமானவர்களுக்கும்! மாற்றத்துக்கான குரல் ஒலிக்கிறது பலமா!

Added : செப் 23, 2016
Advertisement
திருப்பூர் : தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் பதவியேற்க செய்யவேண்டும்; இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்கிற குரல், "சைமா' சங்கத்தில் ஒலிக்க துவங்கியுள்ளது.உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினர் இணைந்து, 1956ல், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தை (சைமா) திருப்பூரில் உருவாக்கினர். மற்ற சங்கங்களுக்கெல்லாம் முன் தோன்றிய, தாய் சங்கம், சைமா. இச்சங்கத்தில்,
 தாய் சங்கம் "சைமா'வுக்கு தேர்தல் வருமா... இதனால் சகலமானவர்களுக்கும்! மாற்றத்துக்கான குரல் ஒலிக்கிறது பலமா!

திருப்பூர் : தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் பதவியேற்க செய்யவேண்டும்; இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்கிற குரல், "சைமா' சங்கத்தில் ஒலிக்க துவங்கியுள்ளது.
உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினர் இணைந்து, 1956ல், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தை (சைமா) திருப்பூரில் உருவாக்கினர். மற்ற சங்கங்களுக்கெல்லாம் முன் தோன்றிய, தாய் சங்கம், சைமா. இச்சங்கத்தில், தலைவர், துணை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், இரண்டு இணை செயலாளர் பதவிகள் மற்றும் 21 நிர்வாக குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன.வைர விழா கொண்டாடிய சங்கத்தின், 2013ல் பொறுப்பேற்ற நிர்வாகிகளின் பதவிக்காலம், வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது பதவி வகிப்போரே, மீண்டும் பதவி வகிக்கலாம் என, செயற்குழு முடிவெடுத்துள்ளது.இந்த முடிவு, இன்று நடைபெறும் மகாசபையில் ஒப்புதலுக்கு வைக்கப்படுகிறது. மாலை, 5:30 மணிக்கு, ஹார்வி ரோட்டில் உள்ள சங்க கூட்ட அரங்கில் நடைபெறும் மகாசபையில், பழைய நிர்வாகிகளே மீண்டும் தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒருதரப்பு அணியினர் முடிவு செய்துள்ளனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி, நிர்வாகிகளை பதவி அமர்த்தவேண்டும் என்கிற கருத்து வலுப்பெற்று வருகிறது.சங்க உறுப்பினர் பொன்னுசாமி கூறியதாவது:ஒரே தலைமை, தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட சிலர் மட்டும் பதவிகளை தக்கவைத்து கொள்வது போன்றவற்றால், "சைமா'வின் செயல்பாடுகள் நாளுக்குநாள் மந்தமாகிவருகிறது. தொழிலில் இருந்து விலகியோரும், சங்க உறுப்பினராகவும், பதவிகளிலும் அமர்ந்துள்ளனர். புதியவர்கள், இளைஞர்கள் பொறுப்பேற்க வாய்ப்பு கொடுப்பது இல்லை.தேர்தல் நடத்தினால், பதவி பறிபோய்விடும் என்பதால், பழைய நிர்வாகிகளே தொடரலாம் என, செயற்குழுவில் முடிவெடுத்துள்ளனர்; இதனை ஒரு போதும் ஏற்கமுடியாது. "தாய்' சங்கம், முழு வீச்சில் செயல்பட, ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.பல்வேறு காரணங்களால், மகாசபையில் எதிர்ப்பை வெளிப்படுத்த பலரும் தயங்குகின்றனர். நாளை (இன்று) நடைபெறும் மகாசபையில், உறுப்பினர்கள் இணைந்து, எதிர்ப்பு குரலை வெளிப்படுத்துவோம். இவ்வாறு, பொன்னுசாமி கூறினார்.மகாசபையில், மெஜாரிட்டி அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படும். பழைய நிர்வாகிகளே தொடரலாம் என்கிற செயற்குழுவின் முடிவு, சபை ஒப்புதலுக்காக வாசிக்கப்படும்.பங்கேற்கும் மொத்த உறுப்பினர்களில், பெரும்பான்மை உறுப்பினர்கள், ஆதரவளித்தால், பழைய நிர்வாகிகளே, தெடரலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். மாறாக, தேர்தல் வாயிலாகத்தான் நிர்வாகிகள் தேர்வு செய்யவேண்டும் என்கிற குரலுக்கு உறுப்பினர்களின் ஆதரவு அதிகரித்தால் மட்டுமே, தேர்தல் நடத்தும் சூழல் உருவாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X