தந்தை சடலத்தை கை வண்டியில் கொண்டு சென்ற மகன்: வைரலாக பரவுது வீடியோ

Updated : செப் 25, 2016 | Added : செப் 25, 2016 | கருத்துகள் (15)
Share
Advertisement
பிலிப்பித் (உ.பி.): தந்தையின் சடலத்தை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் தராததால், கைவண்டியில் வைத்து மகன் கொண்டு சென்ற அவலம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.உத்தரபிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் பிலிபித் மாவட்டம் மதினாஷா பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துளசிராம் 70, உடல்நலக்குறைவால் நேற்று அரசு
தந்தை சடலத்தை கை வண்டியில் கொண்டு சென்ற மகன்: வைரலாக பரவுது வீடியோ

பிலிப்பித் (உ.பி.): தந்தையின் சடலத்தை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் தராததால், கைவண்டியில் வைத்து மகன் கொண்டு சென்ற அவலம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் பிலிபித் மாவட்டம் மதினாஷா பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துளசிராம் 70, உடல்நலக்குறைவால் நேற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகன் சூரஜூடன் வந்தார். காலை 8 மணிக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் தாமதம் செய்ததால், காலை 11 மணியளவில் இறந்தார். சூரஜ், தனது தந்தை சடலத்தை வீட்டிற்கு எடுத்துச்செல்ல மருத்துவமனை ஆம்புலன்ஸ் தருமாறுகேட்டார். மருத்துவமனை நிர்வாகம் அவரை 2 மணி நேரம் அலை கழிக்க வைத்து கடைசியில் எந்த வாகனமும் இல்லை என கூறியது. வேறு வழியின்றி தந்தை சடலத்தை கை வண்டியில் வைத்து தனது நண்பர்கள் உதவியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றார். இக்காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு ஒடிசாவில் மனைவி சடலத்தை தோளில் சுமந்து10 கி.மீ.சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பினைஏற்படுத்தியது. அதே போன்று நேற்று உ.பி.யில் அவலம் அரங்கேறியுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், சம்பவம் நடந்ததாக புகார் யாரேனும் அளித்தால் உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
25-செப்-201617:59:21 IST Report Abuse
Rajendra Bupathi இதுல என்ன புதுசு இருக்குன்னே தெரியில? இன்னும் தமிழ் நாட்டுல கை படையா தான் பிரேதத்த தூக்கிகிட்டு போறாங்க? இன்னும் சொல்ல போனா ஏகபட்ட இட்டத்துல ஒத்தை அடி பாதையிலதான் தூக்கிகிட்டு போறாங்க?
Rate this:
Cancel
ச.சேதுராமன்மின்னல்கொடி - குவைத்(பர்வானியா),குவைத்
25-செப்-201616:14:17 IST Report Abuse
ச.சேதுராமன்மின்னல்கொடி இந்த நாடு எங்கே செல்கிறது.மோடி தலைமையிலான ஆட்சி நல்லாட்சி என்று கூறும் மோடியின் கைக்கூலி களே இந்த மாதிரி சம்பவங்களை பாருங்கள்.இது போன்று இன்னும் ஊடகங்களில் வெளிவராத எத்தனை சம்பவங்கள் இருக்குமோ?என புரியவில்லை எப்பொழுதுநடவடிக்கை எடுப்பீர்கள்?
Rate this:
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா
25-செப்-201616:45:59 IST Report Abuse
குறையொன்றுமில்லைமின்னல், மோடி நாட்டின் பிரதமர் அது நினைவில் இருக்கட்டும். காரண காரியமே இல்லாமல் மோடி னு கூவ வேண்டாம். குவைத்தில் இருப்பதால் எது மாநிலத்தின் கீழ் வரும் எது மத்திய அரசின் கீழ் வரும் என தெரியலை போல...
Rate this:
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
25-செப்-201614:09:01 IST Report Abuse
Murugan புரட்டி எடுக்கும் பிரசனை வந்தால் மட்டுமே மனித நேயம் புயலாக புறப்படும்.தனி ஏழை மனிதன் என்றால் இந்தியாவில் மனிதநேயம் அடியோடு செத்துவிடும்......................................................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X