வேகமாக கரையும் கிரீன்லாந்து பனிப்பாறைகள்: இயற்கை ஆர்வலர்கள் கவலை

Added : செப் 25, 2016 | கருத்துகள் (4) | |
Advertisement
கோபன்ஹேகன்: நாள்தோறும் பெருகி வரும் வாகனப் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வௌியேறும் புகையால் உலகம் வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பருவநிலை மாற்றம் , கடல் மட்டம் உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் டென்மார்க் நாட்டின் ஆர்கஸ் பல்கலை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில்
 வேகமாக கரையும் கிரீன்லாந்து பனிப்பாறைகள்: இயற்கை ஆர்வலர்கள் கவலை

கோபன்ஹேகன்: நாள்தோறும் பெருகி வரும் வாகனப் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வௌியேறும் புகையால் உலகம் வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பருவநிலை மாற்றம் , கடல் மட்டம் உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் டென்மார்க் நாட்டின் ஆர்கஸ் பல்கலை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் உலகில் மிகப் பெரிய பனித்தீவாக இருக்கும் கிரீன்லாந்து பனிப்படலம் மிக வேகமாக கரைந்து வருவதாக எச்சரித்துள்ளனர்.
சுமார் 23 லட்சம் சதுர கிலோமீ்ட்டர் அதாவது நம் இந்திய நாட்டின் முக்கால்வாசி பரப்பளவை கொண்ட கிரீன்லாந்து உலகில் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றாக இருக்கிறது. கிரீன்லாந்தில் இருக்கும் மொத்த பனிப்படலமும் உருகிவிடும் பட்சத்தில் உலகின் கடல் மட்டம் சுமார் 23 அடி வரை உயர்ந்து விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த அளவுக்கு பெரிய பனிப்படலத்தை கொண்டுள்ள கிரீன்லாந்து தீவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பாறைகள் மற்றும் பனிப்படலங்கள் உருகுகின்றன. முன்பு உருகியதை காட்டிலும் எட்டு சதவிகிதம் அதிக அளவு உருகிவருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது சாட்டிலைட் புகைப்படங்கள் மூலமாக நிரூபணமாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பனிப்பாறைகள் மற்றும் பனிப்படலங்கள் உருகும் சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தால் இன்னும் சில ஆண்டுகளிலேயே பல கடற்கரை நகரங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
25-செப்-201610:37:19 IST Report Abuse
Chandramoulli ஓரளவுக்கு உருகும் வாய்ப்பு உள்ளது , மொத்தமாக உருக வாய்ப்பு குறைவு. ஒரு நாள் செய்தி ஆர்ப்பாட்டம்.
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
25-செப்-201606:00:03 IST Report Abuse
K.Sugavanam இதெல்லாம் மக்களை காப்ரா பண்ணத்தான்..ஆர்க்டிக் கூட உருகுதுன்னு பீதி கிளம்பினாங்க.உருகுவதும்,மீண்டும் பனிப்படலம் உருவாவதும் இயற்கை நிகழ்வு..காலம் காலமாக இதுதான் நடக்கிறது..இந்த இயற்கை ஆர்வலர்கள் அப்பப்போ இப்படி ஏதாவது சொல்லியே செய்திகளில் வருவார்கள்,பிராணிப் பேணிகள் போல..
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-செப்-201610:55:33 IST Report Abuse
Kasimani Baskaranதல... நீங்கள் சொல்வது தவறான தகவல்... சூரியனின் வெட்பம் வரலாறு காணாத அளவுக்கு இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது... சூரியனின் வெட்பம் அதிகரித்தால் பனிப்பாறைகள் முழுவதும் உருகி விடும்... helios என்று தேடிப்பாருங்கள் - வெப்ப நிலை உயர்வு புரியும்......
Rate this:
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
25-செப்-201614:40:14 IST Report Abuse
Muruganஉண்மைதான் எதையும் நாம் அலட்சியமாக எடுக்கிறோம்.சூரியனின் வெட்பம் வரலாறு காணாத அளவுக்கு இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது என்பது மிக மிக உண்மையே.ஏன் அனைத்து கண்டங்களின் தட்பவெப்ப நிலையின் வரலாற்றை படித்துப்பாருங்கள்.நாம் எந்த அளவு ஆபத்தில் உள்ளோம் என்று தெரியும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X