பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் வன்முறையால் சுற்றுலா வருவாய் ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு

Updated : செப் 25, 2016 | Added : செப் 25, 2016 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுதில்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டரை மாதங்களாக நீடித்து வரும் வன்முறையால் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் சுற்றுலா வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக காஷ்மீர் மாநில சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து கடந்த ஜூன் 10-ஆம் தேதி முதல் அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு இதுவரை 81 க்கும்
 காஷ்மீர் வன்முறையால் சுற்றுலா வருவாய் ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு

புதுதில்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டரை மாதங்களாக நீடித்து வரும் வன்முறையால் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் சுற்றுலா வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக காஷ்மீர் மாநில சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து கடந்த ஜூன் 10-ஆம் தேதி முதல் அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு இதுவரை 81 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, பதற்றத்தை தணிக்க ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது பள்ளத்தாக்கு பகுதிகளில் படிபடியாக அமைதி திரும்ப தொடங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பொருளாதரத்தில் சுற்றுலா வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதால் உணவு விடுதிகள், சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஜம்முவிற்கும் வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 84 நாட்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் சுற்றுலா வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக காஷ்மீர் மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
25-செப்-201610:35:28 IST Report Abuse
Chandramoulli இனிமேல் காஷ்மீரில் வருமானம் என்பதே இருக்காது . சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு . எல்லா நாடுகளும் அங்கு செல்ல கூடாது என்று அறிவுரை வழங்கி உள்ளது . தீவிரவாதிகளின் வருமானம் குறைய வாய்ப்பு அதிகம் . திண்டாட்டம் தான் .
Rate this:
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
25-செப்-201607:54:11 IST Report Abuse
Raj Pu கன்னட கோவை வன்முறைகளால் எவ்வளவு இழப்பு என்ற கணக்கு எதுவும் உள்ளதா?
Rate this:
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
25-செப்-201607:26:15 IST Report Abuse
தங்கை ராஜா வன்முறைக்கான காலம் எங்கெல்லாம் அமைக்கப்படுகிறது அங்கெல்லாம் அழிவு நிச்சயம். ரொட்டிக்கு கையேந்த வேண்டிய கட்டாயமும் ஏற்படும். ஆணவத்தின் உச்சிலிருந்த சிரிய மக்கள் தங்களில் லட்சக்கணக்கானோரை பழி கொடுத்துவிட்டு உலகமெங்கும் அகதிகளாக ஆதரவற்றவர்களாக திரிவது நம் கண் முன்னே உள்ள எடுத்துக்காட்டு. .காஷ்மீர், பெங்களூரு, கோவை என்று குறிப்பிடட சிலரின் வெறியாடடத்திற்கு அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் தீயவைகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணமும் விழிப்புணர்வும் மக்களிடமும் இல்லாததே இதற்கு காரணம். ரத்த வெறி பிடித்து அலையும் கூடடம் தட்டிக்கேட்கப்படா விடடால் தேசிய பொருளாதாரமும் சின்னாபின்னமாகும் அபாயமும் உண்டு. ஓன்று படடால் உண்டு வாழ்வு. .
Rate this:
SALEEM - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
25-செப்-201609:28:02 IST Report Abuse
SALEEMஆணவத்தின் உச்சியில் இருந்தது சிரியா மக்களா அல்லது அந்நாட்டு அதிபரா? என்னய்யா உன் அரைகுறை அறிவு, நாட்டு நடப்பை முழுமையாக கவனியும்.......
Rate this:
ganapathy - khartoum,சூடான்
25-செப்-201616:41:16 IST Report Abuse
ganapathyகாஷ்மீரில் தீவிரவாதத்துக்கு துணை போவது மக்களே... தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை பத்திரமாய் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்கவைக்கின்றனர்.. ஏழை அப்பாவிகள் ஒன்னும் அறியாமல் இவர்கள் பேச்சு கேட்டு தீவிரவாதிகளை மாறுகின்றனர். சரி பாக்கிஸ்தானுடன் இவர்களை சேர்த்து விட்டாலும் சந்தோசமாய் இருக்க முடியுமா... அந்த நாட்டில் அக்ரம் என்னும் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது..(தப்பித்தார்..) ஆனால் அவர் இங்கு ஐ.பி.எல் டீமுக்கு கோச் ஆகா இருக்க முடிந்தது...அவர் மனைவிக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது...பாகிஸ்தான் பயங்கரவாத நாடுதான்... அது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை தலைவர்களை கொண்டு இருக்க வில்லை...இஸ்லாமிய லஞ்ச வாதிகளை (நம்ம ஊரு அரசியல் வாதி மாதிரி தான்) தலைவர்களை பெற்று தன்னுடைய வளர்ச்சியை இழந்து கொண்டு இருக்கிறது......
Rate this:
ganapathy - khartoum,சூடான்
25-செப்-201620:47:13 IST Report Abuse
ganapathyதலைவனின் தப்போ, மக்களின் தப்போ இப்போ அகதிகளை அலையும் சிரியா முஸ்லிம்களுக்கு மற்ற இஸ்லாமிய நாடுகள் அடைக்கலம் ஏன் தரவில்லை...காஷ்மீர் இஸ்லாமியர்களுக்கு நீலி கண்ணீர் நடிப்பவர்கள்... பாகிஸ்தானின் மக்கள் படும் அவஸ்தையை ஏன் உணரவில்லை...(பலுசித்தான், ஆப்கானிஸ்தான்..போன்ற நாடுகளில் பாகிஸ்தான் தீவிரவாதம்...இவர்கள் இந்துக்கள் அல்ல....பா.ஜா.காவும் அல்ல...) பின் எதற்கு இவர்களின் கொலைவெறி...அவர்கள் தோற்றுவிட்த்த தீவிரவாதம், அவர்களின் பள்ளி குழந்தைகள் கொல்லப்பட காரணம் ஆனதே......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X