கருக்கலைப்பும் சட்டமும்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

கருக்கலைப்பும் சட்டமும்

Added : செப் 25, 2016
 கருக்கலைப்பும் சட்டமும்

கருக்கலைப்பை ஒழுங்கு படுத்துவதன் மூலம், சட்டப்பூர்வமற்ற முறையில் அதற்கு முயன்று, அதில் தோற்று, பெண் உயிரும், ஊனமுற்ற பிறப்பு உருவாவதைத் தடுக்கும் நோக்கத்தோடும், அப்படியான முயற்சியில் நொய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும், மக்கட் தொகையைக் கட்டுக்குள் வைக்கும் முறையை ஊக்குவிக்கும் நோக்கிலும் கருக்கலைப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது.இந்திய பீனல் கோடு 312 ஆர்டிக்கிலின் படி, “ தாயின் உயிரைக் காப்பதான காரணம் அன்றி வேறெந்த காரணத்திற்காகவும் கருக்கலைப்பு கூடாது. அப்படி மீறி கருக்கலைப்பு செய்யப்பட்டால் அப்படிச் செய்தவருக்கு மூன்று வருடம் வரையான சிறைத் தண்டனை அல்லது தண்டத்தொகை அல்லது இரண்டுமே தண்டனையாகக் கிடைக்கும். ஒரு வேளை அப்பெண்ணே கருக்கலைப்பு செய்து கொண்டால் ஏழு வருடம் வரையான சிறை மற்றும் தண்டத்தொகை கட்டுதல் இவை தண்டனையாகக் கிடைக்கும்.”


முடிவை எடுக்க யாருக்கு அனுமதி

இந்தச் சட்டப்படி பார்த்தால், கர்ப்பமடைந்த, பிள்ளை பெற்றுத் தர முடிந்த பெண்ணால், பிள்ளை பெறும், அல்லது பெறாமல் இருக்கும் முடிவை எடுக்க இயலாது. இந்தக் குழப்பத்தை, பெண் தன் உடல் மீது கொண்டுள்ள உரிமைக்கும், இன்னும் பிறவாத பிள்ளையின் வாழ்வுரிமைக்கு நடக்கும் போராட்டமாகவே அவளை உணரச் செய்து, அதற்கு சமூகம் தரும் ஆதரவுக் கரம் போல, அவளது உடல் நலத்தில் அக்கறை இருப்பதாலேயே, கர்ப்பத்தைக் கலைக்கும் முடிவானது மருத்துவர்களிடம் விடப்படுவதாக அவளிடம் சொல்லப்படுகிறது. உண்மையில் அது பெண் தன் உடல் மீது கொண்ட உரிமைக்கும், இன்னும் பிறவா பிள்ளையின் உயிர் வாழும் உரிமைக்கும் இடையே உள்ள போராட்டம் தானா?உருவான ஒரு உயிர் சுயம் பெறும் முன்பே களைந்து, கலைத்து விடுவதே கருக்கலைப்பு ஆகும்.The Medical Termination of Pregnancy Act 1971 எனும் சட்டம் 71-ல் வந்த்து.


சட்டம் கூறுவதென்ன

அந்தச் சட்டப்படி, கரு உருவாகி 12 வாரங்களுக்கும் குறைவானதெனில் கருக்கலைப்பு செய்யலாம். தாயின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம், போன்ற மருத்துவக் காரணங்களுக்காக செய்யப்படும் அந்த கருக்கலைப்புகளும், கரு உருவாகி 12 வாரங்களுக்கு மேல் ஆனால், 20 வாரங்களுக்குள் ஆகி இருந்தால், மற்றொரு மருத்துவரின் மருத்துவ ஆலோசனையுடனேயே(second opinion) கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும்.இந்த விதிகளைப் பின்பற்றுவதோடு கூட, ஒரு கருவைக் கலைக்க அத்தாயின் அனுமதி அவசியம். அந்த்த் தாய் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 18 வயதுக்குக் குறைவானவர் எனில், மன நிலை சரி இல்லாதவர் எனில், அவரது பொறுப்பாளரின் அனுமதி அவசியம். அதே சமயம், அந்தக் கரு பலாத்காரத்தினால் உருவாகி இருந்தால், அக்கருவைப் பெற்றெடுப்பது என்பது அப்பெண்ணின் மன, உடல் நிலைக்கு ஊறு விளைவிக்கும் எனில், 18 வயதுக்குக் குறைவானவருக்கும் கூட, 20 வாரங்களுக்குள்ளான கருவை கலைக்க அனுமதி உண்டு.


ஊனமுற்ற குழந்தையானால்...

கரு ஊனமுற்ற குழந்தையாகப் பிறக்கும் என மருத்துவர் எண்ணினாலும், கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். ஆனால் இன்று இருக்கும் சட்டப்படி 20 வாரங்களுக்கு உட்பட்ட கருவை மட்டுமே இது போன்ற மருத்துவக் காரண்ங்களுக்காக கலைக்க இயலும். ஒரு கருவில் ஊனம் இருக்கிறதா இல்லையா என்பதை அக்கருவின் 22 முதல் 24 வாரங்களிலேயே நிச்சயமாகச் சொல்ல முடியும் என மருத்துவ துறை சொல்கிறது. அதைக் கண்டுபிடித்த பிறகே கருவைக் கலைப்பது பற்றிய முடிவை எடுக்க முடியும் என்பதால், கருக் கலைப்பிற்கான உச்ச பட்ச கால வரையறையாக 24 வாரங்களைக் கொள்ளலாம் என சட்டத்திருத்தம் கொண்டு வரும் வகையிலும், இன்னும் வேறு சில மாற்றங்களைக் கொண்டு வரும் நோக்கிலும் 2014ம் ஆண்டு The Medićal Termination of Pregnancy (Amendment) Bill 2014, எனும் மசோதா கொண்டு வரப்பட்ட்து. இம்மசோதா, இந்த கால வரையறை தவிர இன்னும் சில சட்டத் திருத்தங்களைக் கொண்டுள்ளது.இந்த திருத்தச் சட்டத்தின் வரைவு வடிவை மக்கள் முன் வைத்து, மக்கள், மருத்துவர்கள், பெண்கள் அமைப்புகள் போன்ற பலரிடமிருந்தும் கருத்துக்களைக் கேட்டிருந்த்து.அதை ஒட்டி, இந்த சட்ட்த்திருத்த மசோதாவிற்கு எதிரான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.அதன் படி,இந்த சட்டமும் சரி, திருத்தச் சட்ட மசோதாவும் சரி, கருக்கலைப்பு எனும் ஒன்றை பிறக்காத உயிரின் வாழும் உரிமையாக மட்டுமே பார்க்கின்றன. அல்லது, பெண்ணின் உடல் நலனில் உள்ள அக்கறையாகப் பார்த்து, பிள்ளை பெறும் அல்லது கருக்கலைப்பு செய்யும் முடிவை மருத்துவர் கையில் கொடுக்கின்றன.இந்தச் சட்ட வரைவு Health Minister -ன் அனுமதியைப் பெறவில்லை. The Indian Medical Council -ன் ஆலோசனையையும் கூட பெற்று வரையப்படவில்லை. 1971ம் ஆண்டின் சட்டத்திலிருந்து என்ன காரணத்திற்காக இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது எனவும் அரசு தரப்பில் இருந்து பதில் ஏதும் இல்லை.திருத்தச் சட்ட வரைவில், மெடிகல் அபார்ஷனும், சர்ஜிகல் அபார்ஷனும் இரண்டிற்குமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெடிகல் அபார்ஷன் என்பது மருந்து கொடுத்து கருக்கலைப்பு செய்வது. சர்ஜிகல் அபார்ஷன் என்பது, ஆபரேஷன் செய்து கருக்கலைப்பது. இவ்விரண்டிற்குமே இந்த சட்ட்த்திருத்த வரைவு அனுமதி அளிக்கிறது.பதிவு செய்யப்பட்ட மருத்துவர் (Registered Medical Practioner) மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம் என சொல்லப்பட்டுள்ளது. இதில் மிகப் பெரும் குழப்பமும் தெளிவின்மையும் உள்ளது. (Dr. Mukhtiar Chand & Others Vs State of Punjab & Others)ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவங்களில் கருக்கலைப்பிற்கான மருந்துகள் இல்லை. இந்நிலையில், அந்த மருத்துவர்கள் மருத்துவமோ, மருந்துச் சீட்டு தருவதோ இயலாது. இந்நிலையில், அவர்கள் அலோபதி மருந்திற்கான மருத்துவமோ, மருந்துச் சீட்டோ அளிக்க இயலாது. ஆக, பதிவு பெற்ற மருத்துவர் எனும் சொல்லாடலிலேயே குழப்பம் உள்ளது.ஆக, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மற்ற மருத்துவம் பயின்றவர்கள் இதில் சேர்க்கப்படக்கூடாது. ஆனால் ஒரு மருத்துவர், இரு வகை மருத்துவமும் பயின்றிருந்தால், அதாவது ஹோமியோபதி/ஆயுர்வேதம் மற்றும் அலோபதி படித்திருந்தால், அலோபதி அறிந்தவர் எனும் வகையில் அவர் மருத்துவம் பார்க்கலாம். ஆனால் அதே மருத்துவத்தில், ஒரு வகை மருத்துவத்தில் அனஸ்தீஷியாவும், மற்றொரு மருத்துவத்தில் கருக்கலைப்பும் செய்யப்பட்டால், எந்த மருத்துவ கவுன்சில் இதற்கு தீர்வு சொல்லும் எனும் வினாவும் எழுகிறது.அலோபதி மருத்துவர் அல்லாத, மற்ற healthcare practitioners, நர்சுகள், midwives இவர்களை கருக்கலைப்புக்குப் பயன்படுத்துவதையும், இந்திய மருத்துவக் கழகம் எதிர்க்கிறது.பதிவு பெற்ற மருத்துவர் எனும் பதம் மட்டுமே இந்த திருத்தச் சட்ட வரைவில் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில், பதிவு பெற்ற மருத்துவர், பெண்கள் மருத்துவத்தில் அதாவது Gynaecology ல் நல்ல அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பதிவு பெற்ற மருத்துவத்தின் வேறு பிரிவில் அனுபவம் உடைய வேறொரு மருத்துவர், MTP செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. இதைப் பற்றி Poona Verma Vs Ashwin Patel and Others எனும் வழக்கில், உச்ச நீதிமன்றம் சொன்ன கருத்தைக் கருத்தில் கொண்டு இந்த வரைவு தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.இதைச் சொல்லி இந்திய மருத்துவக் கழகம் (The Indian Medical Association) இந்த சட்ட வரைவை எதிர்க்கிறது. The Indian Journal of Clinical Practice, Vol.25, No. 6, November 2014 (http://medind.nic.in/iaa/t14/i11/iaat14i11p506.pdf) ம் இதை ஆமோதிக்கிறது.சமீபத்தில் பலாத்காரத்தினால் உண்டான 24 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் ஒரு 24 வயது பெண்ணுக்கு அனுமதி அளித்தது. காரணம், அந்தக் கருவில் ஊனம் இருந்த்தும், கருவைப் பெற்றேடுத்தல் என்பது அப்பெண்ணுக்கு, உடல் மனநல தொந்தரவுகளை ஏற்படுத்தும் என்பதால்.மிகச் சமீபத்தில் 18வயதுக்குக் குறைவான பெண் ஒருத்தி, பலாத்காரத்தினால் கரு உண்டாகி இருந்தார். அவர் மைனர் என்பதால் அவர் சார்பில் அவரது தந்தை, கருக்கலைப்புக்கு மனுச் செய்திருந்தார். சட்டப்படி 20 வாரங்களுக்குள் உள்ள கருவை மட்டுமே கலைக்க இயலும். ஆனால், அவர்கள் நீதிமன்றத்திற்கு வருகையில் அந்தக் காலக் கெடு முடிவடைந்திருந்தது. இந்நிலையில், வழக்கு நடந்து கொண்டிருக்கும் காலத்தில் அப்பெண் 18 வயதைப் பூர்த்தி செய்திருந்தாள். இதன் காரணமாக அவளே தன் கரு குறித்து முடிவெடுக்கலாம் எனவும், தந்தையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கண்ட வழக்கில், MTP Act மட்டும் தலையிடவில்லை. குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து தடுக்கும் சட்டமும் ஈடுபட்டிருப்பதால், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியான அதன் செல்லுதன்மை குறித்த கேள்வியோடு, ஹை கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவின் பேரில் நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இறுதியில் அப்பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் முடிவை எடுத்திருந்தாள். ஆனால் அந்த முடிவை எடுக்காமல், அவளும் கருக்கலைப்பு முடிவை எடுத்திருந்தால்?சட்டத்தின் பதில் என்னவாக இருந்திருக்கும்?
-ஹன்ஸா (வழக்கறிஞர்)legally.hansa68@gmail.com9994949195

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X