பதிவு செய்த நாள் :
'முஸ்லிம்களை சமமாக நடத்துங்கள்!'
பிரதமர் மோடி வேண்டுகோள்

கோழிக்கோடு:''முஸ்லிம்களை, பாகுபாடின்றி, சமமாக நடத்த வேண்டும்; அவர்களை ஓட்டு வங்கியாக கருதக்கூடாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

'முஸ்லிம்களை சமமாக நடத்துங்கள்!':பிரதமர் மோடி வேண்டுகோள்

கேரள மாநிலம், கோழிக்கோட்டில், பா.ஜ., தேசிய கவுன்சிலின், மூன்று நாள் கூட்டம் நடந் தது. இதன் ஒரு பகுதியாக, ஜனசங்கம் உருவாக காரணமானோரில் ஒருவரான, மறைந்த தலை வர், பண்டித தீன்தயாள் உபாத்யாயாவின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் நடந்தது; இதில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

முஸ்லிம்களை, ஓட்டு வங்கியாக மட்டும் கருதக்கூடாது. அவர்களை, சமமாக நடத்த

வேண்டும்; நம்மில் ஒருவராக பார்க்க வேண்டும். தற்காலத்தில், மதச்சார்பின்மையின் அர்த்தம் உருமாற்றப்பட்டுள்ளது. தேசியமும், தவறான பொருளில் பேசப்படுகிறது.

'முஸ்லிம்களை இழிவாக பேசக்கூடாது; அவர் களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும்' என, 50 ஆண்டுகளுக்கு முன், தீன்தயாள் கூறினார். 'அனைவரும் சமநிலைக்கு வரவேண்டுமானால், மேல்நிலையில் உள்ளோர், கீழே இருப்போருக்கு உதவி, மேலே வரச் செய்ய வேண்டும்' என, தீன்தயாள் கூறினார்.

மக்கள் நலன் சார்ந்து, பா.ஜ.,வின் கொள்கை அமைந்துள்ளது. எதற்காகவும், எங்கள் கொள்கை களை விட்டுத் தரமாட்டோம். சமூகத்தின் அடித் தட்டில் உள்ளோரையும் உயர்த்துவதில், பா.ஜ., அரசு உறுதியாக உள்ளது. பா.ஜ.,தொண்டர்கள், மக்க ளுக்கு சேவையாற்றவே, அரசியலில் சேர்ந்துள்ள னர்; அவர்களுக்கு, வேறு லாபநோக்கு கிடையாது.

இளைஞர்கள் அதிகளவில் உள்ள நம் நாட்டில், இளமை உணர்வுடனான கனவுகள், இளமைக்குரிய வேகத்துடன் உதித்திட வேண்டும். இன்று, நாம்

Advertisement

இவ்வாறு இருப்பதற்கு, நம் மூத்த தலைவர் களே காரணம். புவி வெப்பமயமாதல் பற்றி, சமீப காலமாக பேசுகிறோம். இதை உணர்த்தும் வகையில், 'நம் இயற்கை வளங்களை மதிக்க வேண்டும்' என, அன்றைக்கே, தீன்தயாள் கூறினார்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த மாநாட்டில், உரு வான தீர்மானத்துக்கு, அக்., 2ல், மகாத்மா காந்தி யின் பிறந்த தினத்தில், இந்தியா ஒப்புதல் அளிக் கும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
fire agniputhran - jakarta,இந்தோனேசியா
01-அக்-201620:17:01 IST Report Abuse

fire agniputhranநல்ல கருத்து .ஒற்றுமையை எதிர் நோக்கி இந்த நாடே இருக்கிறது. எல்லோரும் தேசிய ஒருங்கிணைப்பில் ஒருங்கிணைந்து செயல் படவேண்டும்.

Rate this:
MOGANDOSS RAO - New Delhi,இந்தியா
26-செப்-201623:13:11 IST Report Abuse

MOGANDOSS RAOமோடி க்கு பயம் வந்து விட்டது போல இருக்கே .. சபாஷ் அப்படி வா வழிக்கு. போக போக பிஜேபி காங்கிரஸ் 2 ஆக மாறிக்கொண்டு வருகிறது .

Rate this:
Mani Mani - sivagangai,இந்தியா
26-செப்-201616:37:46 IST Report Abuse

Mani Maniமொதல்ல ஹிந்து மதத்துல இருக்குறவங்கள ( பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் ) சமமா நடத்துங்க அப்புறமா ... ஹிந்து - முஸ்லீம் ஒற்றுமையை பேசலாம் .......

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X