சினிமா, டிவிஎதில் திறமை காட்டலாம்?- ஷாமிலி| Dinamalar

சினிமா, 'டிவி'எதில் திறமை காட்டலாம்?- ஷாமிலி

Added : செப் 26, 2016 | |
“இயற்கையிலேயே பெண்கள் அழகு; கரியவிழியில் மையிட்டு சிமிட்டுவது அழகு; மூக்குத்தி அணிந்து முகர்வதும் அழகு; சிவந்த உதட்டை சுளிப்பதும் அழகு; பஞ்சுக் கன்னங்களின் காதோரம் தாலாட்டு பாடும் ஜிமிக்கியும் அழகு; கை வளையலும் கால் கொலுசும் போடும் தாளம் அழகோ அழகு... இத்தனையுடன் நடிப்பிலும் பேரழகி நடிகை ஷாமிலி... படுபிசியிலும் சினிமாவில் தினமலர் வாசகர்களுக்காக பேசியது... 'பிறந்தது,
சினிமா, 'டிவி'எதில் திறமை காட்டலாம்?- ஷாமிலி

“இயற்கையிலேயே பெண்கள் அழகு; கரியவிழியில் மையிட்டு சிமிட்டுவது அழகு; மூக்குத்தி அணிந்து முகர்வதும் அழகு; சிவந்த உதட்டை சுளிப்பதும் அழகு; பஞ்சுக் கன்னங்களின் காதோரம் தாலாட்டு பாடும் ஜிமிக்கியும் அழகு; கை வளையலும் கால் கொலுசும் போடும் தாளம் அழகோ அழகு... இத்தனையுடன் நடிப்பிலும் பேரழகி நடிகை ஷாமிலி... படுபிசியிலும் சினிமாவில் தினமலர் வாசகர்களுக்காக பேசியது... 'பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். படிப்பு பி.எஸ்சி.,. இப்போ எம்.பி.ஏ., பார்ட் டைம்ல படிக்கிறேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, ஒரு பங்க்ஷனில் என்னைப் பார்த்தவங்க, நீ அழகா, அம்சமா இருக்கே. 'டிவி', சினிமாவுக்கு முயற்சி பண்ணலாமேன்னாங்க. அப்புறம், ஒரு நகைக்கடை விளம்பர வாய்ப்பு வந்தது... அப்படியே சினிமாவுக்கு வந்துட்டேன். பாசமலர், பொன்னுாஞ்சல், வாணி ராணின்னு தொடர்கள், படங்கள் பாண்டிய நாடு, மேகா அப்படின்னு படங்கள் செய்திருக்கேன். எனக்கு வில்லி கேரக்டர் தான். 'வாணி ராணி'யில் வில்லியாக நடிக்கிறேன். ஆனா, நிஜத்துல ரொம்ப சாது. பாசமலர் சீரியலில் தங்கச்சியாக நடித்திருப்பேன். அண்ணனை விட்டுக் கொடுக்காத 'தங்கச்சி'னு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தெல்லாம் போன் பண்ணி வாழ்த்துறாங்க. அப்படியே சிலிர்த்துப் போனேன்.ஒரு நாள் முழுக்க சினிமாவில் ஒரு 'சீன்' மட்டுமே எடுப்பாங்க. 'டிவி'யிலோ எட்டு 'சீன்கள்' கூட எடுப்பாங்க. சினிமாவை விட 'டிவி'யில நடிப்பதுதாங்க எளிது. அதில்தான் நடிப்பு திறமையை முழுவதுமாக வெளிக் காட்ட முடியும். சினிமாவில் இளமை இருக்கும் போது தான் நடிக்க முடியும். 'டிவி'யில் எந்த வயதிலும், எந்த கேரக்டரிலும் நடிக்கலாம். அதில் தான் நிலைத்து நிற்க முடியும். கலைத்துறையில் நிச்சயம் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. ஆண்களுக்கு சமமாக பெண்களையும் மதிப்பவர்கள் இங்குதான் இருக்கின்றனர். தினமும் எங்கேயாவது வன்முறை நடந்துட்டு தானே இருக்கு. நாகரிகங்கிற பேருல பெண்களோட ஆடை கலாசாரம் மாறிட்டே போகுது. பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு அவசியம். எங்க போனாலும் வீட்ல சொல்லிட்டு போகணும். நேரத்திற்கு வீட்டுக்கு வரணும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X