பொது செய்தி

தமிழ்நாடு

விரல் அசைவில் மரம் வளர்ப்போம்

Updated : செப் 28, 2016 | Added : செப் 27, 2016 | கருத்துகள் (1)
Advertisement
விரல் அசைவில் மரம் வளர்ப்போம்

மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க, மரம் வெட்டுபவர்கள் குறித்த புகார்களை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் தெரிவிக்க, உயிர் நிழல் - 'கிரீன் ஷேடோ' என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை, மேரி ஆன் சேரிட்டி டிரஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு உருவாக்கி உள்ளது.

சுற்றுச்சூழலை காப்பதில், மரங்களை பேண வேண்டியதன் அவசியத்தை, பொதுமக்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டு உள்ளது. எந்தப் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டாலும், அதுகுறித்த விபரங்களை, உயிர் நிழல் அப்ளிகேஷனை பயன்படுத்தி, 'டேக் ஆக் ஷன்' என்ற பகுதியில் புகார்களை தெரிவிக்கலாம்.
மேரி ஆன் அமைப்பிற்கு வரும் அந்தப் புகார்களின் அடிப்படையில், அருகில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு தகவல் கொடுக்கப்படும். உடனடியாக, மரம் வெட்டப்படும் இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பதற்கு ஆவன செய்யப்படும். புகார் அளிக்கும் போது, அதில் புகார் அளிப்பவரின் பெயர், தொலைபேசி எண், மரம் அமைந்துள்ள தெரு, நகரம், மாநிலம், என்று முழு விபரங்களையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இதுதவிர, வெட்டப்பட்ட மரத்தின் படம், வீடியோ காட்சிகளையும் புகாரோடு, 'அப்லோடு' செய்து அனுப்பும் வசதி, இந்த அப்ளிகேஷனில் உள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மரம் வெட்டப்படுவது குறித்த புகாரை, இந்த அப்ளிகேஷனில் தெரிவிக்கலாம். ஆண்ட்ராய்டு வெர்ஷன் - 4.0 அல்லது அதற்கு மேலுள்ள ஆண்ட்ராய்டு வெர்ஷனில், இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தலாம். 2.9 'எம்பி' அளவுள்ள இந்த அப்ளிகேஷனை, 'கூகுள் - பிளே ஸ்டோரில்' இருந்து, இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vincent Jayaraj - salem,இந்தியா
28-செப்-201616:59:19 IST Report Abuse
Vincent Jayaraj மனிதனின் மூத்த குடிகள் மரங்கள் . மூத்தவர்களை ஏளனமாக பார்க்கும் சமூக சூழல் நிலவும் காலம். நமது முன்னோர்கள் தமது வாரிசுகளுக்கு 50 ஆண்டுகள் கழித்து பயன் அடையும் வழிகளில் மரங்களை நட்டு வளர்த்தார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாய் தனது 3 மகன்களுக்கும் 3 புளிய கன்றுகளை நட்டு வைத்தார். அவர் மறைந்தாலும் அவரது மகன்கள் வழி வந்த வாரிசுகள் இன்றும் பயன் அடைந்து வருகின்றனர் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. மரம் அறம் சார்ந்த சமூகத்தை உருவாக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X