பதிவு செய்த நாள் :
பழிக்குப்பழி: யூரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி: பாக்., பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்தது

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் நுழைந்து, பயங்கரவாதிகள் முகாம்களை, இந்திய ராணுவம் அதிரடியாக அழித்தது.

தாக்குதலைத் தொடர்ந்து, பதற்றம் நிலவுவ தால், எல்லை மாநிலங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப, சம்பந்தப் பட்ட மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரியில் உள்ள ராணுவ முகாம் மீது, 18ல், பாகிஸ்தான் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில், 18 வீரர்கள் கொல்லப்பட்டனர்; இது, நாடு முழுவ தும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

'பாக்., பயங்கரவாதிகளை தாக்குங்கள்' என, பிரதமர் பச்சைக்கொடி காட்டினார்.மேலும், பாகிஸ் தானை தனிமைப்படுத்தும் வகையில்,

பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. பாகிஸ்தானில் நடக்க உள்ள, 'சார்க்' எனப்படும், தெற்காசிய நாடுக ளின் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை, புறக்கணிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் நேற்று, எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள், 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' எனப்படும், அதிரடி தாக்குதல் நடத்தி, அழிக்கப்பட்டன; இதில், பயங்கரவாதிகளும், அவர்களுடன் இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

நேற்று அதிகாலை, 12:30 முதல், 4:30 மணி வரை இந்த தாக்குதல் நடந்தது. இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டத் தில்

Advertisement

உடனடியாக நேற்று விவாதிக்கப்பட்டது.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,வெளியுறவு அமைச் சர் சுஷ்மா சுவராஜ், ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோச கர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் ஜெய்சங்கர், ராணுவத் தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக், ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல், ரன்பீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குவிகிறது பாராட்டு:

நீண்ட காலமாக, பாகிஸ்தானின் அத்து மீறல் கள் நடந்து வந்தபோதும், முதல்முறை யாக, அதன் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி யுள்ள ராணுவத்துக்கும், பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும், போன் மூலமா கவும், சமூக வலைதளங்களி லும் பாராட்டுகள் குவிகின்றன. எல்லையில் பதற்றம் உருவாகி உள்ளதால், இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, 10 கி.மீ., சுற்றளவில் உள்ள மக்களை வெளி யேற்றும்படி, ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (139)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tm sundaram. - bhavani,erode.  ( Posted via: Dinamalar Windows App )
01-அக்-201600:57:24 IST Report Abuse

tm sundaram.சகோதரர்களே உங்கள் தேசப்பற்றை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால் எல்லா வற்றுக்கும் முன்னே வந்து கருத்து எழுதும் பலரை இங்கே கானோம். அது ஏன் என்பது மட்டுமே எங்களின் ஐயம். வேறொன்றும் இல்லை...Jai hindu

Rate this:
Suresh Sampath - MD,யூ.எஸ்.ஏ
30-செப்-201623:39:19 IST Report Abuse

Suresh SampathA reminder that Surgical Strike hasn't been done for the first time. Only difference is that UPA/Congress didn't hype the issue. Indian army conducted at least two surgical strikes between 2007 and 2013 and they were reported too. But unlike this time around, Manmohan Singh did not stay awake or even if he did, he chose not to leak the information to favourable media outlets to seek cheap publicity or felt the need to prove any other point. Dr Singh also did not employ any Twitter army to build a narrative to project an imaginary image so that this could help him extract the much-needed electoral mileage in the forthcoming elections. Here are the detail on previous surgical strikes conducted by Indian army under Manmohan Singh regime. The following two were reported by media while on other occasions the military strategy of that time simply may not have allowed the army to announce the measures. 2007: Titled as “Surgical Strikes: Indian army's new method to deal with sub-conventional operations” India Today journalist Sandeep Unnithan wrote in January 2014, “Surgical strikes is how the army hopes to fight low-intensity conflicts or 'sub-conventional operations' (SCO) in the new doctrine unveiled by Army Chief General J.J. Singh. It faces its acid test in the recent massacre of over 50 people in Assam by the ULFA. The army has rushed in 3,000 soldiers, but it will certainly not use fighter aircraft to pop smart bombs into insurgent homes or call for artillery strikes on militant hideouts, like other armies in South Asia, because the SCO doctrine says civilians' hearts and minds-and not dead terrorists- are at the centre of the entire operation.” In the same piece, Unnithan went on to describe how a surgical strike by Indian army in November 2006 had helped the troops to eliminate terrorists with considerably less damage to its soldiers. January 2014 Addressing the annual Army Day press conference, the then Indian army chief Gen Bikram Singh admitted killing of 10 Pakistani soldiers in a surgical strike. Gen Singh warned Pakistan that India would respond in equal measure if Pakistan violated any rules. He rejected the perception that the Indian military had not retaliated against the beheading of its soldiers by Pakistani troops last year. He had said, “Let me assure you that action has been taken…If I can invite the attention to the Geo TV report on December 23 which talked of their one officer and nine jawans being killed with 12-13 being wounded. This has happened due to firing of your soldiers on ground.”

Rate this:
krishnan - New York,யூ.எஸ்.ஏ
30-செப்-201621:49:56 IST Report Abuse

krishnanJay hind

Rate this:
மேலும் 136 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X