முதல்வர் உடல் நிலை முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் உடல் நிலை முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்

Added : செப் 30, 2016 | கருத்துகள் (55)
Advertisement
முதல்வர் உடல் நிலை முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை முன்னேற்றமடைந்துள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி இரவு சுமார் 10.30 மணிக்கு சிறுநீரக தொற்று, மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 1 வார காலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் செய்தி குறிப்பு வெளியிட்டு வருகிறது. தற்போது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ‛‛உடல் நல குறைவு சம்மந்தமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Advertisement


வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
01-அக்-201604:54:14 IST Report Abuse
meenakshisundaram யாராவது தள்ளுவண்டியில் முக வை அப்பல்லோ ஹாஸ்பிடல் கூட்டிக்கொண்டு போய் அனுமதி பெற்று அம்மாவை காண்பிக்கவும்.அப்போதுதான் முக நம்புவார்.
Rate this:
Share this comment
Cancel
லாரல் - மதுரை,இந்தியா
30-செப்-201622:20:21 IST Report Abuse
லாரல் அவர் தினமும் காலை 4 மணிக்கே எழுந்து, ஆஸ்பத்திரிக்கு உள்ளேயே வாக்கிங் போகிறார். பின்னர் காலை பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் படித்து விட்டு அதிகாரிக்கு உத்தரவிடுகிறார். பின்னர் குளித்து காலை டிபன் சாப்பிட்ட பின் அலுவலக வேலை பார்க்கிறார். பின்னர் மதிய சாப்பாட்டுக்கு பின் சிறிது ஓய்வெடுக்கிறார். பின்னர் அலுவலக பணி கட்சி பணி ஆற்றுகிறார். இரவு சாப்பாட்டுக்கு பின்பும் ஆட்சிப்பணி தான் செய்கிறார். இரவு படுக்க போகும் வரை ஏதாவது பணியாற்றிக் கொண்டே இருக்கிறார், அவ்வப்போது அதிகாரிகளுக்கு உத்திரவும் கொடுக்கிறார். - இப்படியும் சொல்லுங்களேன் அப்பல்லோ டாக்டர்களே.... நாங்கள் என்ன நம்பிக்கை இல்லாமல் உள்ளே வந்து பார்க்கவா போகிறோம்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-அக்-201601:46:56 IST Report Abuse
தமிழ்வேல் அப்பல்லோ வையே வாங்கி இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
30-செப்-201622:01:50 IST Report Abuse
மணிமேகலை  இதைப்பற்றியெல்லாம் யாருக்கும் கவலை இல்லைங்க பஞ்சாயத்து தேர்தல்ல ஓட்டுக்கு எவ்ளோ கொடுப்பாங்கன்னு கேட்டு சொல்லுங்க .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X