'உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை விட, கூடுதல் ஓட்டுகளைப் பெற வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், காங்கிரசை விட கூடுதல் பலம் பெற வேண்டும்; திராவிட கட்சிகளுக்கு மாற் றாக வளர வேண்டும் என, பா.ஜ., தலைவர்கள் விரும்புகின்றனர். அந்த எண்ணத்தில், கடந்த லோக்சபா தேர்தலுக்கு, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் தனி அணி அமைத்து, தேர்தலை சந்தித்தனர்; ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. இருப்பினும், 19 சதவீத
ஓட்டுகளை கூட்டணி பெற்றது.
அடுத்து நடந்த சட்டசபை தேர்தலுக்கும்,
தனி அணி அமைத்து, பா.ஜ., போட்டியிட்டது; ஆனால், 10 சதவீத ஓட்டுகளை கூட பெற
வில்லை. உள்ளாட்சி தேர்தலிலும், சிறிய கட்சிகளுடன்கூட்டணி அமைத்து, பா.ஜ., தனி அணியாக போட்டியிடுகிறது. இம்முறை, தேசிய கட்சியான காங்கிரசை விட, கூடுதலான ஓட்டுகளை வாங்க வேண்டும் என, தமிழக தலைவர்களுக்கு, பா.ஜ., தேசிய தலைவர் கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மாநிலத் தலைவர்களுக்கு கூறியுள்ள தாவது: உள்ளாட்சி தேர்தலில், குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு பா.ஜ., வெற்றி பெற வேண்டும். காங்கி ரசை விட, கூடுதல் இடங்களில் வெற்றிபெறுவ தோடு, கூடுதல் ஓட்டுகளையும் பெற வேண்டும். அதற்கு, மத்திய அரசின் செயல்பாடுகளை, மக்கள் மத்தியில் பிரசாரமாக வைக்க வேண்டும்.
தலித்
மக்களின் தோழனாக, பா.ஜ.,வும், மத்திய அரசும் இருப்பதை, அவ்வின மக்கள்
மத்தியில்
கொண்டு செல்ல வேண்டும். இதையெல்லாம் செய்தால், தமிழக உள்ளாட்சி
தேர்தலில், பா.ஜ., குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும். அப்படி செய்தால் மட்டுமே, அடுத்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமித் ஷாவின் அறிவுரையை ஏற்று, தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள, தமிழக பா.ஜ., தலைவர்கள் களம் இறங்கி உள்ளனர்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (26)
Reply
Reply
Reply