புதுடில்லி: 'பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு குறித்து, மறுபரிசீலனை செய்யப்படும்' என இந்தியா அறிவித்திருந்த நிலையில், இந்தியாவுக்குள் வரும் பிரம்மபுத்திராவின் கிளை நதியை, சீனா, தடுத்து நிறுத்தியுள்ளது.
சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியா வின் வட கிழக்கு மாநிலங்களுக்கு, முக்கிய நீராதாரமாய் விளங்குகிறது. பிரம்மபுத்திரா நதியின் வழித்தடத்தில், ஐந்து புதிய அணை களை கட்ட, சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஷாங்மூ என்ற இடத்தில், முதல் நீர்மின் நிலையத்தை கட்டி முடித்துள்ள சீனா, அதை விட பெரிய அணையை, 'ஜியாபுக்கு' என்ற கிளை நதியின் குறுக்கே கட்டி வருகிறது. இந்த
அணை அமைக்கப்படும் ஷிகாட்சே பகுதியில் இருந்து தான், அருணாச்சல பிரதேசத்துக்குள் தண்ணீர் பாய்கிறது.
இந்தியாவுக்குள் பாயும் பிரம்மபுத்திராவின் நீர் வரத்து பாதிக்கும் என்பதால், சீனாவின் அணை கட்டும்முயற்சிக்கு, இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவுக்குள் பாயும், பிரம்ம புத்திராவின் முக்கிய கிளை நதியை, தற்போது, சீனா தடுத்துநிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
நீர்மின் நிலையத்துக்கான அணை வேலைகள், முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதால், கிளை நதி யின் தண்ணீர் வரத்தை தடுத்து நிறுத்தியுள்ள தாக, சீனஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாக்.,கிற்கு ஆதரவா? : காஷ்மீரில், பாக்., பயங்கர வாதிகள், யூரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தி, 19 வீரர்களை கொன்றனர். இதையடுத்து, பாக்., உடனானசிந்து நதி பங்கீடு விஷயத்தில், இந்தியா, தன் நிலைப்பாட்டை மறுபரீசிலனை
செய்யு மென, மத்திய அரசு அறிவித்தது. இந் நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக,
இந்தியா வை சீண்டும் விதமாக, பிரம்மபுத்திரா கிளை நதியை, சீனா தடுத்து
நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒப்பந்தம் உண்டா? :
இந்தியா - சீனா இடையே
நதி நீரை பங்கிடுவது தொடர்பாக, இதுவரை, முறையாக எந்த ஒப்பந்த மும் செய்யப்பட வில்லை. 2013ல், சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, இரு நாடுகளிடையே புரிந்து ணர்வு ஒப்பந்தம் மட்டும் மேற்கொள்ளப்பட்டது.
என்ன பாதிப்பு?:
இந்தியாவுக்குள் பாயும், பிரம்மபுத்திரா நீர் வரத்து பாதிக்கப்பட்டால், சிக்கிம், அருணாச்சல் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களின் குடிநீர் மற்றும் உணவுத்தேவை, மிகக் கடுமையாக பாதிக்கும் ஆபத்து உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (36)
Reply
Reply
Reply