பெங்களூரு: காவிரி நீர் திறப்பில், உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத கர்நாடகா அரசு மீது நடவடிக்கை எடுத்தால், மாநில எம்.பி., - எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.,க்கள் அபிடவிட் தாக்கல் செய்ய தயாராக இருக்க வேண்டும் என, அனைத்து கட்சி கூட்டத்தில், ம.ஜ.த., வலி யுறுத்தியுள்ளது.
சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தவும், முதல்வர் சித்த ராமையா முடிவு செய்துள்ளார்.
காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவுக்கு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டதை அடுத்து, பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம், நேற்று மாலை, 3:00 மணியிலிருந்து, மாலை, 6:30 மணி வரை நடந்தது.
மத்திய அமைச்சர்கள் சதானந்த
கவுடா, ரமேஷ் ஜிகஜினகி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்
ஜெகதீஷ் ஷெட்டர்,
மாநில பா.ஜ., தலைவர் எடியூரப்பா, மாநில ம.ஜ.த., தலைவர் குமாரசாமி உட்பட எதிர்க்கட்சியினர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், ''சட்டசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, தண்ணீர் திறந்து விட கூடாது. கர்நாடக வக்கீல் பாலிநாரிமன், ஏன் வாதாடவில்லை என்று தெரியவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, கர்நாடக பா.ஜ., எதிர்ப்பு தெரிவிக்கிறது. வாரியம் அமைக்க கூடாது என்று மத்திய அரசிடம் வலியுறுத்தும். தற்போதுள்ள தண்ணீரை, குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசிடம், பா.ஜ., கூறியுள்ளது,'' என்றார்.
ம.ஜ.த., - எம்.எல்.ஏ., தத்தா கூறியதாவது: வரும், 6ம் தேதி உச்ச நீதிமன்றம்விசாரணை நடத்தும் போது, கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு அல்லது அரசு
டிஸ்மிஸ் அல்லது ராணுவத்தை வரவழைத்து தண்ணீர் திறந்து விட்டாலோ, அரசுக்கு
ஆதரவாக, ம.ஜ.த., இருக்கும்.
இவ்வாறு நடந்தால், கர்நாடகத்தில், 225
எம்.எல்.ஏ., க்கள், 75 எம்.எல்.சி.,க்கள், 28 எம்.பி.,க்கள் என, 328 பேரும்
ராஜினாமா அபிடவிட் தாக்கல் செய்ய வும் தயாராக இருக்கும்படி கேட்டுக்
கொண்டுள் ளோம்.
இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக் கும்படி,
அரசுக்கு ஆலோசனை வழங்கி உள் ளோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்
தால், முதல்வர், தலைமை செயலர் மீது மட்டும்
வழக்கு போடாமல், எங்கள் மீதும் வழக்கு தொடரட்டும்.
எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்துக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடக் கூடாது. மாநில மக்கள் நலன் தான் முக்கியம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று மத்திய அமைச்சர்கள், பா.ஜ., - எம்.பி.,க்களிட மும் வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (11)
Reply
Reply
Reply