'நெட்' இருந்தால், சட்டென்று 'க்ளிக்' செய்து, ஒரு பட்டுப்
புடவை 'ஆர்டர்' கொடுக்கலாம்; ஒரு சைக்கிள், ஒரு வீடியோ கேம், டிரஸ் மெட்டீரியல், ஷூ, ஹேண்ட் பேக்...எல்லாம் சரி. இதெல்லாம் இப்போது என் தேவையில்லை; எனக்கு இப்போ, தொக்கு சாப்பிடணும் போல இருக்கு...கிடைக்குமா?
யாராவது ஒரு பழமைவாதி, நேற்று வரை, இப்படிக் கிண்டலாய் உங்களைக் கலாய்த்திருந்தால், அவரைக் கூப்பிட்டு வந்து, மொபைலில் 'catchdrona.com' க்குள் நுழைந்து, ஒரு தொக்கு பாக்கெட்டை 'ஆர்டர்' செய்யுங்க. ஆமா பாஸ்... நம்புங்க. இப்போ, கோயம்புத்துார்ல தொக்கு, இட்லி தோசை மாவுக்கும் 'ஆன்லைன்' வந்தாச்சு.
தரமான நுகர்பொருட்களை தயாரித்து விளம்பரப்படுத்த போதுமான நிதி வசதியின்றி தவிக்கும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காகவே உருவானது இந்த 'ஆன்லைன்'.
'ஒன்லி ஸ்டேப்ஸ்' நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரிகள், ஆன்டனி, ஸ்ரீராம் சொல்கின்றனர்...
கோவையை தலைமையகமாக கொண்ட எங்கள் நிறுவனம், 'ஆன்லைன்' முறையில், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வருகிறது. குறுந்தொழில் முனைவோர், குடிசை தொழில்துறையினர் சிறந்த தரத்துடன் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யவும், அதிக வாடிக்கையாளரை சென்றடையவும் உதவும் நோக்கில், 'catchdrona.com' என்ற புதிய 'ஆன்லைன்' விற்பனை திட்டத்தை துவக்கியுள்ளோம்.
பொருட்களின் தரம், நம்பகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை ஆய்வு செய்த பின், எங்கள் நிறுவனத்தின் ஒரு பிரிவாக செயல்படும் இந்த இணையதளத்தில், பிரபல நிறுவனங்களின் பொருட்களுடன் இந்த பொருட்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.
துவக்க விழாவை முன்னிட்டு, கல்லுாரி மாணவியரின் இட்லி, தோசை மாவு, ஹேர் ஆயில் தயாரிப்புகள் உள்பட தொக்கு, ஷாம்பூ, தேங்காய் எண்ணெய், மூலிகை எண்ணெய் உள்ளிட்ட ஐந்து புதிய பொருட்கள் அறிமுகம் செய்துள்ளோம். இந்த சேவையை முற்றிலும் இலவசமாக பெறலாம். முதல்கட்டமாக இரு மாதங்களுக்கு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள தொழில்முனைவோர் மட்டும் இதில் பயன் பெறலாம்.
விரைவில், தமிழகம் முழுவதும் சேவை விரிவுபடுத்தப்படும். மேலும் விபரங்களுக்கு, 'catchdrona.com' என்ற இணையதள முகவரியிலும், 0422 - 4031 333 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அப்படி என்றால்....இனி கோவையில் இணையத்திலும்
வாங்கலாம் இட்லி, தோசை மாவு.