தனிக்குடித்தனத்திற்கு கட்டாயப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்
தனிக்குடித்தனத்திற்கு கட்டாயப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்

தனிக்குடித்தனத்திற்கு கட்டாயப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்

Updated : அக் 09, 2016 | Added : அக் 09, 2016 | கருத்துகள் (52) | |
Advertisement
புதுடில்லி: தன் வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்க சம்மதிக்காமல் தனிக்குடித்தனம் செல்ல கட்டாயப்படுத்தும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்து
தனிக்குடித்தனத்திற்கு கட்டாயப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: தன் வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்க சம்மதிக்காமல் தனிக்குடித்தனம் செல்ல கட்டாயப்படுத்தும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி அனில் ஆர் தவே வெளியிட்டார்.


அதில் கூறியிருப்பதாவது:




மகனின் கடமை



பெற்றோரால் வளர்க்கப்பட்ட மகனுக்கு, வருமானம் இல்லாத அல்லது குறைவான வருமானம் உடைய பெற்றோரை பராமரிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு இருக்கிறது. இது சட்டபூர்வமான கடமையாகவும் கருதப்படுகிறது.




குடும்பத்தை பிரிக்க கூடாது



வெளிநாடுகளில் திருமணம் முடிந்ததும் அல்லது குறிப்பிட்ட வயது வந்ததும் பெற்றோருக்கும் மகனுக்கும் தொடர்பில்லாத கலாச்சாரம் நிலவி வருகிறது. ஆனால் இந்தியாவில் இந்து சமூகத்தில் பிறந்த ஆண், அவரது பெற்றோரை பிரிந்து வாழ்வது கலாச்சாரத்திற்கு எதிரானது. பணம் சம்பாதிக்க முடியாத அல்லது குறைவாக சம்பாதிக்கும் நிலையில் உள்ள பெற்றோர் அவர்களது மகனின் தயவில் வாழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. அவர்களை பிரிப்பது சரியான செயல் அல்ல. எனவே சரியான காரணமின்றி பெற்றோரிடம் இருந்து கணவனை பிரிக்க மனைவி நினைப்பது கொடுமையாகவே கருதப்படும், இது போன்ற சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் '' என கூறப்பட்டுள்ளது.


இன்றைய சூழலில் மாமியார்-மருமகள் சண்டையால் பல கூட்டு குடும்பங்கள் சிதறி தனிக்குடித்தனமாக வாழும் குடும்பங்கள் அதிகமாகி வருகிறது. இது இந்தியாவின் எதிர்கால சந்ததியினருக்கு குடும்பங்கள் மற்றும் உறவுகள் மீதுள்ள பாசம் பற்றிய புரிதல் இல்லாமலேயே போய் விட கூடிய நிலை ஏற்படும் என பேச்சு அடிபட்டு வருகிறது. இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட் தற்போது தீர்ப்பில் வெளியிட்டுள்ள கருத்து குடும்பநல ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (52)

SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
11-அக்-201622:54:03 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஊடகங்களில் இதுபோன்ற கருத்துகளை படம் எடுத்து பண்பாட்டை கெடுக்காமல் இருக்கணும். எல்லாம் படம் பார்த்து தானே நடக்குகிறது.குற்ற செயல்களைத்தானே படமாக்குகிறார்கள்.நல்லவன் வாழ்வதாக படம் எடுக்கவில்லையே.குற்றவாளி தப்பிக்க அட்டூழியங்கள் செயவதை தடுத்து நல்லவன் வளர்வதாக மட்டுமே படமெடுக்கனும் இதற்கு ஓர் சட்டம் கொண்டு வரனுங்க. கற்பனை குற்றங்களால் விபரீத நிகழ்வுகள் நிகழ்வதை தடுக்கலாமே>
Rate this:
Cancel
Sathya Dhara - chennai,இந்தியா
10-அக்-201619:24:14 IST Report Abuse
Sathya Dhara கணவன் என்பவர் உயர்ந்த ஸ்தானம்தான். அதைவிட அந்த கணவரை பெற்று தந்த மாமனார் மாமியாரை ராகு கேது என்று கிண்டல் செய்து. மொத்தமாக ஒதுக்கி விட்டு விட்டார்கள். மிக சில குடும்பங்களில் மட்டும் புண்ணிய வசத்தினால் நல்ல மருமகள்கள் கிடைத்து இருக்கிறார்கள். காலத்தின் கோலம்.
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
09-அக்-201619:46:50 IST Report Abuse
Gnanam இந்த தீர்ப்பு, இன்றய இந்திய பெண்களின் மனநிலைக்கு ஒரு நல்ல மருந்தாகவும், பிள்ளைகளை பேணி வளர்த்த பெற்றோர்களுக்கு விருந்தாகவும் அமைகிறது. வாழ்த்துக்கள் - ஞானம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X