சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒருதலை காதலால் பெண் கொலை உறவினர் கைது; நகைகள் பறிமுதல்

Added : அக் 10, 2016
Share
Advertisement

பண்ருட்டி: ஒருதலை காதல் நிறைவேறாத ஆத்திரத்தில், வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை, கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரைச் சேர்ந்தவர் சுலைமான் மனைவி யாஸ்மின்,19; நேற்று முன்தினம், உடலில் பல இடங்களில் கத்தி வெட்டு காயங்களுடன் யாஸ்மின் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில், யாஸ்மினை கொலை செய்ததாக, அவரது உறவி னர் அனிபா,22; என்பவர், நேற்று முன்தினம் எல்.என்.புரம் வி.ஏ.ஓ., சையத் இப்ராகிம் முன்னிலையில் பண்ருட்டி போலீசில் சரணடைந் தார். அவரிடம், டி.எஸ்.பி., முரளிதரன், இன்ஸ்பெக்டர் கங்காதாரன் விசாரித்தனர். விசாரணையில் தெரிய வந்ததாவது:அனிபா, யாஸ்மினை ஒருதலையாக காலித்து வந்த நிலையில், அவரை சுலைமான் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், யாஸ்மினை அடைய, அனிபா முயன்று வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம், யாஸ் மின் வீட்டிற்கு சென்ற அனிபா, 'நீ பேஸ்புக்கில் இன்னொருவருடன் தொடர்பில் உள்ளது தெரியும்' என கூறி மிரட்டி உள்ளார். ஆத்திரமடைந்த யாஸ்மின், அனிபாவை கன்னத்தில் அறைந்தார். அனிபா, தான் கொண்டு சென்ற மிளகாய் துளை யாஸ்மின் மீது துாவி, அங்கிருந்த உளியால் யாஸ்மினை பல இடங்களில் குத்தினார். அதில் படுகாயமடைந்த அவர் இறந்ததும், நகைகளை கழற்றி வீட்டின் அருகில் உள்ள புதருக்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.புதரில் வீசப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அனிபாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X