அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ராசியில்லாத ராஜாக்கள் விஜயகாந்த் கல்தா?

கட்சிக்கு ராசியில்லாத நிர்வாகிகளின் பதவியைப் பறிக்க அல்லது மாற்றி அமைக்க, விஜயகாந்த் திட்டமிட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.

 ராசியில்லாத ராஜாக்கள் விஜயகாந்த் கல்தா?


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும், ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர்கள். ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைபடியே, கட்சி நிகழ்ச்சிகளுக்கு தேதி கொடுக்கின்றனர். வெளியூர்களுக்கு சுற்றுப்பயணம் செல்வதும், ஜோதிடர் ஆலோசனைபடியே நடக்கிறது.

ஜோதிடர் சால்ஜாப்பு

அத்துடன், விஜயகாந்த் வீட்டில், அவ்வப்போது யாகங்களும்; பூஜைகளும் நடந்து வருகின்றன. இருப்பினும், சட்டசபை தேர்தலில், கட்சிபடுதோல்வி அடைந்தது. ஆனால், அதற்கு ஜாதக பலன்களை மேற்கோள்காட்டி, ஜோதிடர் சால்ஜாப்பு சொல்லிவிட்டார்.
அதேநேரத்தில், தேர்தல் தோல்வியால் துவண்ட, கட்சித் தொண்டர்கள் பலரும், நிர்வாகிகளும், மாற்றுக் கட்சிகளுக்கு சென்று விட்டனர். அதனால், கட்சியில், 90 சதவீத பதவிகள் காலியாக உள்ளன.

கட்சிக்கு கெட்ட நேரம்





இந்நிலையில், 'கட்சியின்முக்கிய பதவிகளில் உள்ள ராசியில்லாத நபர்களால் தான், கட்சிக்கு பெரும் பின்னடைவு' என, ஜோதிடர் கூறியுள்ளார். எனவே, அவர்களது பதவிகளை பறிப்பது அல்லது மாற்றி அமைப்பது என, விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார்

Advertisement

தே.மு.தி.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'மாநிலத்தின் ஈசானி மூலையான, திருவள்ளூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட நிர்வாகிகளால், கட்சிக்கு கெட்ட நேரம் என, முடிவெடுத்துள்ள விஜயகாந்த், அவர்களை மாற்ற முடிவெடுத்துள்ளார். இதே போல, தமிழகத்தின் பல பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளும், விரைவில் மாற்றப்படுவர்' என்றார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
11-அக்-201617:30:50 IST Report Abuse

Sridhar Rengarajanபொண்டாட்டியும் மச்சானும் கூடத்தான் ராசியில்லாதவர்கள். அவிங்க ரெண்டு பேத்தயும் கழட்டிவிட்டால் எல்லாமே நல்லதாக நடக்கும்னு யாராவது நம்ம கேப்டனிடம் சொல்லுங்கப்பா.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
11-அக்-201617:18:55 IST Report Abuse

Balajiஏற்கனவே 90 சதவிகித கட்சி பொறுப்புகளுக்கு ஆளில்லாமல் இருக்கும் நிலையில் இருப்பவர்களையும் ராசி அது இது என்று பார்த்து எடுத்துவிட்டால் யார் கட்சியில் இருப்பார்கள்???? இப்போது இருப்பவர்களும் எப்போது கிளம்பலாம் என்று நேரம் பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த செய்தி மிகவும் இனிப்பான செய்தியாக இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை...... இவர் கட்சியை காப்பாற்றப்பார்க்கிறாரா இல்லை கலைக்கப்பார்க்கிறாரா என்று தெரியவில்லையே.......

Rate this:
amalan - thanjavur,டிஜிபௌசி
11-அக்-201618:45:58 IST Report Abuse

amalanவிஜயகாந்த், பிரேமலதா மற்றும் விஜயகாந்த் மைத்துனர். இவர்கள் மூன்று பேரும் தான் இருப்பார்கள். ...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11-அக்-201617:13:53 IST Report Abuse

Endrum Indianராசியில்லாத ராஜா விஜயகாந்த் கட்சிக்கு மூடு விழா நடத்துவது தான் சரியானது.

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X