சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாமிரபரணியில் இன்ஜினியரிங் மாணவர்கள் 3 பேர் உள்பட 7 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி

Added : அக் 11, 2016 | கருத்துகள் (14)
Advertisement
தாமிரபரணியில் இன்ஜினியரிங் மாணவர்கள் 3 பேர் உள்பட 7 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி

திருநெல்வேலி : நெல்லை அருகே இரு இடங்களில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏழு பேர் லியாகியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பிரபாகரன் மகன் கிருபாகரன் வயது 21, செங்கல்பட்டை சேர்ந்தவர் உஸ்மான் மகன் தமீம் அன்சாரி வயது 21, குமாரவேல் மகன் சோபன்பாபு வயது 21. மூவரும் சென்னை ஆண்டாள் அழகர் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ இறுதியாண்டு பயின்று வந்தனர். மூவரும் நண்பர்கள் என்பதால்,தற்போதைய விடுமுறையில் ஆலங்குளத்தில் உள்ள பிரபாகரன் வீட்டுக்கு வந்தனர். நேற்று காலை 11 மணி அளவில் மூவரும் முக்கூடலில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றனர். அங்கு முத்துமாலையம்மன்கோயில் பின்புறம் ஆழமான இடத்தில் குளித்தபோது சுழலில் சிக்கிக் கொண்டனர். நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கி இறந்தனர். தீயணைப்பு படையினர் மற்றும் பாப்பாக்குடி போலீசார் மூவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


4 பேர் பலி:

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தலையணை உள்ளது. அங்கு பொதுமக்கள் குளிப்பது வழக்கம். நேற்று மாலையில் வாலிபர் ஒருவரது <உடல் மிதப்பதை அங்கு குளித்தவர்கள் பார்த்துள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் வாலிபரின் உடலை மீட்டனர். இதனிடையே அதே இடத்தில்அடுத்தடுத்து நான்கு பேர் இறந்திருப்பது இன்று காலை தெரியவந்தது. அடுத்தடுத்து மேலும் மூன்று பேர்களின் உடல்களை மீட்டனர். இறந்தவர்களில் வசந்தராஜ், சீனிவாசன் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள் எனவும் நக்கீரன், சதீஷ்குமார் ஆகியோர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. இவர்கள் கடந்த 8ம் தேதி இங்கு வந்ததாக தெரிகிறது. வழக்கமாக மக்கள் குளிக்காத இடத்தில் இறங்கியதால் இவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என தெரிகிறது. நெல்லை, தாமிரபரணி ஆற்றில் அடுத்தடுத்து ஏழு இளைஞர்கள் இறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் யார் என்பது குறித்து விபரம் தெரியவில்லை. விக்கிரமசிங்கபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paramuk - kumari,இந்தியா
12-அக்-201603:38:59 IST Report Abuse
Paramuk பிரமாதமான அறிவுரை வெறுமனே அறிவிப்பு பலகைக்கு நீச்சல் தெரியாதவர்களும் கூட அந்த வெள்ளத்தை பார்த்த நிமிடத்தில் மெய்மறந்து நேரில் இறங்குவர். அதற்கு பதிலாக அந்த பலகைக்கு அருகில் இன்னுமொரு பலகையில் இதுவரை மூழ்கி இறந்தவர்களின் படங்கள் மற்றும் மூழ்கிய தேதி போன்ற குறிப்புகளை அதில் தெரியப்படுத்தினால், நிச்சயமாக நீச்சல் தெரியாதவர்கள் கொஞ்சம் யோசிப்பார்கள். முயன்று பார்க்கலாமே
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
11-அக்-201620:23:54 IST Report Abuse
மதுரை விருமாண்டி //சென்னை ஆண்டாள் அழகர் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ இறுதியாண்டு பயின்று வந்தனர். // அம்ம்மா மட்டும் உடல் நலத்தோட இருந்திருந்தால், நல்ல வாய்ப்புன்னு இந்த விபத்துக்கு காரணமான அந்த கல்லூரி தாளாளரை கைது செய்து உள்ளே வைத்திருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
Xavier - Muscat,ஓமன்
11-அக்-201616:41:52 IST Report Abuse
Xavier பள்ளிகளில் நீச்சல் கட்டாய பாடம் ஆகவேண்டும்.தண்ணிலே விழுந்து தப்பிச்சவனுக்குதான் அது புரியும் என்னைப்போல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X