'சொகுசு கார் வேண்டாம்': ஜிம்னாஸ்டிக் தீபா முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'சொகுசு கார் வேண்டாம்': ஜிம்னாஸ்டிக் தீபா முடிவு

Updated : அக் 14, 2016 | Added : அக் 12, 2016 | கருத்துகள் (18)
Advertisement
'சொகுசு கார் வேண்டாம்': ஜிம்னாஸ்டிக் தீபா முடிவு

புதுடில்லி: ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த தீபா கர்மாகர், தனக்கு வழங்கப்பட்ட பி.எம்.டபிள்யூ., சொகுசு காரை திருப்பி வழங்க முடிவு செய்துள்ளார். பராமரிப்பு செலவு அதிகமாக இருப்பதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.


பரிசு:

ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் சிறப்பாக செயல்பட்டார். அவர் நூலிழையில் பதக்கத்தை தவற விட்டார். ஒலிம்பிக் முடிந்த பின்னர், சாதனை படைத்த வீராங்கனைகள், தீபா கர்மாகர், பிவிசிந்து, சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு பி.எம்.டடிள்யூ., சொகுசு கார்கள் பரிசாக வழங்கப்பட்டன. கர்மாகருக்கு ஐதராபாத் பாட்மின்டன் சங்க தலைவர் வி.சாமுண்டேஸ்வரநாத் சார்பில் சச்சின் டெண்டுல்கர் காரை பரிசாக வழங்கினார்.


பராமரிப்பில் சிக்கல்:

இந்நிலையில் இந்த காரை திருப்பி கொடுக்க கர்மாகர் முடிவு செய்துள்ளார். பராமரிப்பு செலவு அதிகம் இருப்பதன் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல், அகர்தலா போன்ற நகரில், குறுகிய மற்றும் சரியில்லாத சாலைகளில் காரை பராமரிப்பதில் சிக்கல் உள்ளது.


குடும்பத்தினர் முடிவு:

இது தொடர்பாக தீபா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவரது பயிற்சியாளர் பிசேஸ்வர் நந்தி கூறுகையில், இது தீபாவின் முடிவு மட்டுமல்ல. இது அவரது குடும்பத்தினர் மற்றும் எனது முடிவு. இதற்கு முக்கியமாக, பி.எம்.டபிள்யூ., கார் பராமரிப்பு மையங்கள் அகர்தலாவில் இல்லை.காரை இயக்குவதற்கு தேவையான சாலை வசதி இல்லை. இது தொடர்பாக காரை வழங்கிய ஐதராபாத் பாட்மின்டன் சங்க தலைவருடன் பேசியுள்ளோம். இதனை அவர் ஏற்றுக்கொண்டார். இதற்கு பதில், காரின் விலையை பணமாக தீபா வங்கிக்கணக்கில் செலுத்தலாம் என யோசனை கூறியுள்ளோம். இல்லாவிட்டால், அவர்கள் எவ்வளவு பணம் வழங்கினாலும் ஏற்றுக்கொள்வோம் எனக்கூறினார்.வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BalaG - Doha,கத்தார்
13-அக்-201600:07:16 IST Report Abuse
BalaG இதுவும் ஒரு வகையில் இந்தியாவுக்கு அவமானம் தான்...
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
12-அக்-201620:46:03 IST Report Abuse
LAX சபாஷ்.. சரியான முடிவு.. தங்கள் வசிப்பிடம் மற்றும் பயணத் தடம் உள்ளிட்டவைகளை பற்றி சிந்திக்காமல் இன்று பலரும் பகட்டுக்கு பெரிதும் அகன்றதுமான கார்களை வைத்துக் கொண்டு/ வாங்கிக் கொண்டு, முக்கியமாக காலை மாலை அலுவலக மற்றும் பள்ளிகளுக்கு/ கல்லூரிகளுக்கு செல்லும் அவசர நேரங்களில், சிறிய சந்துகளிலும் தெருக்களிலும் தங்கள் கார்களை நுழைத்துவிட்டு செல்லவும் முடியாமல், திரும்பவும் முடியாமல், நடந்து செல்லும், மற்றும் பிற வாகனங்களில் செல்லும் மற்றவர்களையும் செல்லவிடாமல், தொல்லை கொடுப்பார்கள்.. அட்லீஸ்ட் அதுபோன்ற கார்களை வைத்திருப்பவர்கள் ஷார்ட்கட்டில் செல்லவேண்டும் என்ற எண்ணத்தையாவது விடுத்து, மற்றவர்களுக்கு தொல்லை தராமல், மெயின் ரோடுகளில் செல்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-அக்-201617:42:06 IST Report Abuse
Natarajan Ramanathan எனக்கு RK நாராயணனின் கதை தான் நினைவு வருகிறது. அந்த கதையில் முதல் பரிசாக ஒருவருக்கு ROAD ENGINE கொடுத்து விடுவார்கள். (நல்ல வேளை இங்கே கார் தான் கொடுத்தார்கள்) அதேபோல சன் டிவியில் ஒருமுறை முதல்பரிசு என்ற அறிவிப்பு மட்டுமே பெற்ற ஒருவர் குடும்பத்துடன் திருப்பூரிலிருந்து சென்னை வந்து, முதல் பரிசு 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு காப்பர் பாட்டம் கடாய் என்று அறிந்து நொந்து போனார்.
Rate this:
Share this comment
Sekar KR - Chennai,இந்தியா
12-அக்-201621:05:15 IST Report Abuse
Sekar KRமன்னிக்க வேண்டும், ரோடு என்ஜின் பராமரிப்பு சிலவு உபயோகப்படுத்தினால் மட்டும் தான். மேலும் ரோடு என்ஜின் சாலை போடும் கான்ட்ராக்ட்ராக்டருக்கு வாடகைக்கு விடலாம். அது நல்ல வருமானத்தை ஈட்டும். ஆனால் இந்த காரை T - போர்டு ஆக மாற்றினால் மட்டுமே வாடகைக்கும் விடமுடியும். வாடகை அதிகம் என்பதால் அதுவும் கஷ்டம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X