அரசியல் செய்தி

தமிழ்நாடு

10 லட்சம் "டிவி'கள் கொள்முதல் செய்ய அரசு முடிவு

Updated : ஜன 11, 2011 | Added : ஜன 09, 2011 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை : இலவச "டிவி' கிடைக்காதவர்களுக்கு வழங்குவதற்காக, மேலும் பத்து லட்சம் கலர் "டிவி'க்களை கொள் முதல் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. இலவச கலர் "டிவி'க்கள் வழங்கும் திட்டத்தை நடை முறைப்படுத்த அமைக்கப்பட்ட சட்டசபை கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் குழுவின் 21வது கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில், துணை முதல்வர்

சென்னை : இலவச "டிவி' கிடைக்காதவர்களுக்கு வழங்குவதற்காக, மேலும் பத்து லட்சம் கலர் "டிவி'க்களை கொள் முதல் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.


இலவச கலர் "டிவி'க்கள் வழங்கும் திட்டத்தை நடை முறைப்படுத்த அமைக்கப்பட்ட சட்டசபை கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் குழுவின் 21வது கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஸ்டாலின், யசோதா, அப்துல் பாசித், ஜெகன் மூர்த்தி, ரவிக்குமார், கோவிந்தசாமி கலந்து கொண்டனர்.தமிழக மக்களுக்கு தேர்தல் அறிக்கை மூலம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஐந்து கட்டங்களில் ஒரு கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் "டிவி'க்கள் ஒளிவு மறைவற்ற முறையில் கொள் முதல் செய்யப்பட்டு, இது வரை ஒரு கோடியே 52 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டங்களில் வழங்குவதற்கு கூடுதல் "டிவி'க்கள் தேவை என, அளித்துள்ள கோரிக்கைகளை பரிசீலித்து, இது வரை வழங்கப்படாமல் உள்ள தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க, நடப்பாண்டில் ஆறாம் கட்டமாக, மேலும் 10 லட்சம் "டிவி'க்கள் கொள் முதல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில், அமைச்சர் பூங்கோதை, தலைமை செயலர் மாலதி, நிதித்துறை முதன்மைச் செயலர் கே.சண்முகம், தகவல் தொழில் நுட்பவியல் முதன்மைச் செயலர் டேவிதார், வருவாய்த் துறை முதன்மைச் செயலர் ஜெயக்கொடி, வருவாய் நிர்வாக கமிஷனர் சுந்தரதேவன், மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குனர் டாக்டர் சந்தோஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.K.LOGANATHAN - Chennai, Red hills,இந்தியா
11-ஜன-201111:53:26 IST Report Abuse
V.K.LOGANATHAN தேர்தல் நெருங்கும் நேரத்தில் பத்து லட்சம் டி.வி தேவையா ? மக்களின் தேவைகளில் முக்கியமானது விலைவாசி குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது .அரசு தினம் ஒரு திட்டம் அறிவிப்பதோடு சரி .அவை தொடங்கப்பட்டதா ,அல்லது எதுவரை முடிக்கப்பட்டது என்பதை கவனிப்பதே கிடையாது .தேர்தல் வர நன்கு மாதங்களே உள்ளன .பிறகு மூன்று லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்படும் என்று சொல்வது மக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஒட்டு கேட்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் .
Rate this:
Cancel
rahma, dubai - chidambaram,இந்தியா
10-ஜன-201117:34:06 IST Report Abuse
rahma, dubai அந்த டிவி 3 மாதங்கள் வரை தான் தெரிகிறது. சிர்காழி பக்கத்தில் (குருமுர்த்திபுரம்- செம்பதனிருப்பு அருகில்) ஒரே நாளில் 6, 7 வீடுகளில் டிவி வெடித்தது. உடையாளூரில் டிவி இலவச வெடித்து ஒரு குழந்தை இறந்து விட்டதாக கேள்வி பட்டோம். சென்னை அசோக் பில்லர் பகுதிகளில் இலவச டிவியை மக்கள் 1000 ரூபாய்க்கு விற்கிறார்கள். எங்கள் டிவி ரிப்பேர் செய்ய நாள் ஆனதால் 1000 ரூபாய்க்கு வாங்கினோம். 2 மாதங்கள் கூட வரவில்லை. அதனுடைய வொர்த் பற்றி, பயன்படுவது பற்றி பத்திரிக்கைகள் தான் தெரியபடுத்த வேண்டும்.
Rate this:
Cancel
Mohd. Rias - Kuala Lumur,மலேஷியா
10-ஜன-201113:16:13 IST Report Abuse
Mohd. Rias "You don't have to burn books to destroy a culture. Just get people to stop reading them." Mohandas Gandhi . DMK follows another strategy to destroy Tamilian culture. By giving free TV to most of the people they intend to destroy the Tamilians' reading habits and hence the culture. This is the right time we Tamilians should be aware of these people and their intentions.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X