பொது செய்தி

இந்தியா

ரயிலில் தனியாக பயணம் செய்த கேரள 'மாஜி' முதல்வர்

Added : அக் 12, 2016 | கருத்துகள் (36)
Advertisement
ரயிலில் தனியாக பயணம் செய்த கேரள 'மாஜி' முதல்வர்

திருவனந்தபுரம் வி.ஐ.பி., சலுகைகளை அனுபவிக்க விரும்புவோர் மத்தியில், எந்தவித பந்தாவும் இன்றி, ரயிலில் பயணம் செய்த, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் எளிமை, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கேரளாவில், இரண்டு முறை முதல்வராக இருந்தவரும், காங்., மூத்த தலைவருமான உம்மன் சாண்டி, 74, மிகவும் எளிமையான அரசியல்வாதி என பெயர் பெற்றவர். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கார்கள் புடைசூழ செல்லும், வி.ஐ.பி.,கள் மத்தியில், மிகவும் எளிமையாக ரயிலில் பயணம் செய்த உம்மன் சாண்டியின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
'வி.ஐ.பி., பயணத்தை விட, சாதாரண படுக்கை வசதி உடைய ரயிலில் பயணம் செய்வது பிடிக்கும் என்றும், கூட்டம் அதிகமில்லாத தொலைதுார ரயில்களில் பயணம் செய்யும்போது, பயணிகளின் அறிமுகமும் கிடைக்கும்' என்றும் கூறிய உம்மன் சாண்டி, இதற்கு முன், திருவனந்தபுரத்துக்கு, பஸ்சிலும் பயணம் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-அக்-201623:18:55 IST Report Abuse
மலரின் மகள் கேரளாவின் காமராஜர். உம்மன் சாண்டி என்று ஒரு குழந்தை பெயர் சொல்லி அழைத்தது. தன்னுடன் பயிலும் மற்றொரு குழந்தைக்கு வீடில்லை என்று குறைப்பட்டது. உடனே அந்த குழந்தையின் கோரிக்கை நிறைவேற்றப் பட்டது. தனித்த முதல்வர். சிறப்பு வாய்ந்தவர். தனிப்பட்ட வாழ்வில் மிக நல்லவர்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
13-அக்-201622:19:36 IST Report Abuse
மதுரை விருமாண்டி தனி விமானத்தில் பறந்தால் தான் கெத்து. நாட்டை முன்னேற்றுகிறார் என்பார்கள்.. மீடியாவைக் கூப்பிட்டு அம்மாவுக்கு அல்வா தர்றதை போட்டோ போட்டு ஆளு சிம்பிள்ன்னு பிலிம் காட்டிடலாம்.
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
13-அக்-201620:36:12 IST Report Abuse
Vaduvooraan கேரளத்தில் இது ஒன்றும் புதியதில்லை. காலஞ்சென்ற நம்பூதிரிபாட், அச்சுத மேனன் போன்றவர்கள் சாமானிய மக்களுடன் சர்வ சாதரணமாக பயணம் செய்வார்கள். ஹூம் தமிழ் நாட்டின் கதையே வேறு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X