பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்சா இது... பயணிகள் ஆச்சரியம்! : ஓட்டுனர், நடத்துனருக்கு குவியுது சபாஷ்

Updated : அக் 13, 2016 | Added : அக் 12, 2016 | கருத்துகள் (115)
Share
Advertisement
திருப்பூர்: கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள், 'சிக்ஸ் டிராக் ஆடியோ சிஸ்டம், எல்.இ.டி., டிவி' என, திருப்பூருக்கு வரும் அரசு பஸ்சை, பயணிகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.அரசு பஸ் என்றால் திறக்க முடியாத ஜன்னல், கிழிந்த இருக்கைகள், ஓட்டை, உடைசல் என, கற்பனை விரியும். மேலும், டீசல் சிக்கனம் என்று கூறி, பஸ்சை உருட்டுவதால், பயணிகள் தனியார் பஸ்களை நாட துவங்கினர். இந்நிலையில்,
அரசு பஸ்சா இது... பயணிகள் ஆச்சரியம்! : ஓட்டுனர், நடத்துனருக்கு குவியுது சபாஷ்

திருப்பூர்: கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள், 'சிக்ஸ் டிராக் ஆடியோ சிஸ்டம், எல்.இ.டி., டிவி' என, திருப்பூருக்கு வரும் அரசு பஸ்சை, பயணிகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
அரசு பஸ் என்றால் திறக்க முடியாத ஜன்னல், கிழிந்த இருக்கைகள், ஓட்டை, உடைசல் என, கற்பனை விரியும். மேலும், டீசல் சிக்கனம் என்று கூறி, பஸ்சை உருட்டுவதால், பயணிகள் தனியார் பஸ்களை நாட துவங்கினர். இந்நிலையில், திடீர் மாற்றாக, தேவகோட்டையில் இருந்து, திருப்பூருக்கு வந்து செல்லும் ஒரு அரசு பஸ், தனியார் பஸ்களை மிஞ்சும் வகையில் ஜொலிப்பது,பயணிகள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


அக்கறை :

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருந்து, காலை, 8:00 மணிக்கு புறப்படும், அரசு பஸ், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வழியாக மாலை, 5:00 மணிக்கு திருப்பூர் வந்தடைகிறது. பஸ்சில், இரண்டு, 'எல்.இ.டி., டிவி' 5.1, எம்.பி., 'டிவிடி' எட்டு இடங்களில், 'ஸ்டீரியோ, வூபர்' பொருத்தப்பட்டு, சினிமா திரையிடப்படுகிறது. இதற்காக, 10, 'பென் டிரைவ்' வைக்கப்பட்டு உள்ளன; தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் பயணிகளுக்கு ஏற்படுகிறது. பஸ்சின் முன் கண்ணாடியில், புறப்படும் நேரம், சென்றடையும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஸ் சக்கரங்களில், 'கிளாசிகல் வீல் கப்' நான்கு புறமும், அலங்கார வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. பஸ் புறப்படுகையில், விளக்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்து, பயணிகளை திரும்பி பார்க்க வைக்கிறது. அரசு பஸ் தானே என்று அலட்சியம் காட்டாமல், அக்கறையோடு, பஸ்சில் இவ்வளவு வசதிகளை செய்து, தினமும் பராமரிப்பது, வேறு யாருமல்ல... பஸ்சில் பணிபுரியும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தான்.


திருப்தி :

பஸ் ஊழியர்கள் கூறுகையில், 'எங்களது சம்பளத்தின் ஒரு தொகை மற்றும் ஊக்கத்தொகையை சேர்த்து, அதிகாரிகளின் அனுமதியோடு, பஸ்சை அழகுபடுத்தி உள்ளோம். தினமும், பஸ் ஸ்டாண்டில் பஸ்சை நிறுத்தியவுடன், சுத்தம் செய்கிறோம்; இவ்வாறு செய்வதால், வேலையில் ஒரு திருப்தி கிடைக்கிறது' என்றனர்.
அரசு பஸ், 'பளபள'வென காட்சியளிப்பதால், பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது; இந்த பஸ்சின் வருகைக்காக காத்திருப்போர் ஏராளம். அரசு பஸ்களை, பயணிகள் புறக்கணித்து வந்த நிலையில், ஓட்டுனர், நடத்துனர்களின் செயல்பாடு பாராட்டும் வகையில் இருக்கிறது.


அந்த பாராட்டுக்குரிய ஊழியர்கள்:முருகேசன் - தேவகோட்டை, ரங்கராஜ் - மணப்பாறை, கண்ணன் - தேவகோட்டை,-
பாரதிதாசன் - சிவகங்கை.

Advertisement
வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ɥʇıɾ∀ - Chennai ,இந்தியா
20-அக்-201615:06:17 IST Report Abuse
ɥʇıɾ∀ /// இந்த பஸ்சின் வருகைக்காக காத்திருப்போர் ஏராளம்.//// இதிலிருந்தே தெரிகிறது எவ்வளவு சுத்தமாக பராமரிக்கிறார்கள் என்று ..வேகமும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் ...இல்லை என்றால் இந்த பஸ்சில் ஏறினால் மாட்டு வண்டி மாதிரி ஓட்டுவார்கள் என்று புறக்கணிப்பார்கள் .
Rate this:
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
19-அக்-201613:42:25 IST Report Abuse
Ramaswamy Sundaram நல்ல செய்தி...பாராட்டுவோம்....அதோடு இந்தமாதிரியான வசய்திகளை செய்யவேண்டும் என்ற ஊக்கம் அற்றார் அழி பசி தீர்த்த அன்ன பூரணியின் ஆட்சியில் தான் பிறந்தது என்பதையும் நினைவில் கொள்ளுவோம். உருப்படாத டுபாக்கூர் திருட்டு கூட்டம் நாதஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்றபோது தினம் தினம் தில்லுமுல்லு திருட்டுத்தனம் ஊழல் அராஜகம் இவைதான் பஸ் தொழிலார்களுக்கு கிடைத்தன? பொதுமக்களுக்கும் வெறுப்பை வழங்கின?
Rate this:
Cancel
Shanthosh - Trichy,இந்தியா
19-அக்-201611:13:06 IST Report Abuse
Shanthosh வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பனி. இது இவர்களை பாராட்டும் நேரம் மட்டும் இல்லை. இவர்களை போல் அனைத்து ஊழியர்களுக்கும் எண்ணம் இருப்பது நான் அறிந்த்த்தை ஒன்று. இருந்தாலும் அனைத்து ஊழியராலும் இதுபோல் சொந்த காசில் செலவு செய்ய முடியாது என்பது உண்மை. எனவே இதனை அரசு கவனத்தில் எடுத்து அதனை செயல் படுத்தினால் கண்டிப்பாக போக்குவரத்து கலக்கம் முன்னேறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X