அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொல்லியல் துறை சட்டத்தில் மாற்றமில்லை : மத்திய அமைச்சர் நாராயணசாமி திட்ட வட்டம்

Added : ஜன 10, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement
மாமல்லபுரம் : "" தொல்பொருள் ஆய்வுத் துறைக்கான, புதிய சட்டத்தில் மாற்றம் செய்ய இயலாது,'' என, மத்திய கலாசார துறை இணையமைச்சர் நாராயணசாமி பேசினார். நம் நாட்டில் தொல்பொருள் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டில், ஏராளமான புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. புராதன சின்னங்களுக்கு அருகில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், கட்டுமானங்களை தடை செய்யவும், உலக கலாசார அமைப்பான,
தொல்லியல் துறை சட்டத்தில் மாற்றமில்லை : மத்திய அமைச்சர் நாராயணசாமி திட்ட வட்டம்

மாமல்லபுரம் : "" தொல்பொருள் ஆய்வுத் துறைக்கான, புதிய சட்டத்தில் மாற்றம் செய்ய இயலாது,'' என, மத்திய கலாசார துறை இணையமைச்சர் நாராயணசாமி பேசினார். நம் நாட்டில் தொல்பொருள் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டில், ஏராளமான புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. புராதன சின்னங்களுக்கு அருகில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், கட்டுமானங்களை தடை செய்யவும், உலக கலாசார அமைப்பான, "யுனஸ்கோ' வழிகாட்டுதலின்படி, பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.


இதன்படி, புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் எவ்வித கட்டுமானங்களும் இருக்கக் கூடாது. அதற்கு அப்பாற்பட்ட தொலைவிற்குள் உரிய அனுமதி பெற்று கட்டடங்கள் கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. புராதன சின்னங்களுக்கு அருகில் வசிப்போர், இந்த விதிமுறைகளை பின்பற்றாமலும், உரிய அனுமதி பெறாமலும் கட்டடங்களை கட்டி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், மத்திய அரசு கடந்த ஆண்டு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கான புதிய சட்டத்தை கொண்டு வந்தது.

இச்சட்டப்படி, வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கட்டடங்களை விரிவுபடுத்துவது, புதிய மின் இணைப்பு பெறுவது போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோரை தண்டிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. இதனால், புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கட்டுமான பணிகள் தடைபட்டுள்ளன. எனவே, இச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய கலாசார துறை இணையமைச்சர் நாராயணசாமி, இச்சட்டம் குறித்து மாமல்லபுரத்தில், நேற்று நடந்த கருத்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இதில், மாமல்லபுரம், திருபோரூர், பல்லாவரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் தான், இந்திய தொல்பொருள் ஆய்வு துறைக்கான புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. புராதன சின்னங்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத்தில் மாற்றம் செய்ய இயலாது. புராதன சின்னத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் மட்டுமே கட்டடங்கள் கட்ட தடை செய்யப்பட்டுள்ளது. 100 மீட்டருக்கு அப்பாற்பட்ட தொலைவிற்குள் உரிய அங்கீகாரம் பெற்று கட்டடங்கள் கட்டலாம்.

இவை குறித்து ஆய்வு செய்ய, மாநில அரசு ஒரு குழு அமைத்துள்ளது. மத்திய அரசும் தேசிய புராதன சின்ன குழுமம் அமைத்துள்ளது. இக்குழுமத்தில் 10 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவரை அடுத்த மாதம் பிரதமர் நியமிப்பார். புதிய சட்டத்தில் மாற்றம் செய்ய இயலாது. பொதுமக்கள் இச்சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள், கடற்கரை கோவிலில் இருந்து கடற்கரைக்கு நேரடியாக செல்ல வழி ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளேன். இச்சட்டத்தால், திருபோரூர், பல்லாவரம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

பின்னர், நிருபர்களிடம் நாராயணசாமி கூறும்போது, ""மாமல்லபுரத்தில், கடற்கரை கோவில் மட்டுமே, "யுனஸ்கோ'வின் அங்கீகாரம் பெற்றுள்ளது. தற்போது, இங்குள்ள ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உட்பட அனைத்து புராதன சின்னங்களையும் உலக கலாசார சின்னங்களாக அங்கீகரிக்க வேண்டுமென "யுனஸ்கோ' அமைப்பிடம் பரிந்துரை செய்துள்ளோம்'' என்றார்.

இந்த கூட்டத்தில், தொழிலாளர் துறை அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் எம்.பி., விஸ்வநாதன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., ஆறுமுகம் மற்றும் பலர் பங்கேற்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saraswathi.r - new delhi ,இந்தியா
10-ஜன-201118:15:05 IST Report Abuse
saraswathi.r பல்லாவரம் மற்றும் கீழ்கட்டளை சார்ந்த பகுதிகளில் தொல்லியல் துறை வீடுகள் மற்றும் மனைகளை கையகபதுடுவதாக வந்த செய்தி உண்மையா? எனக்கு தெரிந்து பல்லாவரத்தில் ஒரு குகைக்கோவில் இருக்கிறது என்று கேள்விபட்டேன் . விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X