பொது சிவில் சட்டம் கூடாது: முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு | பொது சிவில் சட்டம் கூடாது: முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பொது சிவில் சட்டம் கூடாது:
முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு

புதுடில்லி:''பொது சிவில் சட்டம், இந்தியாவுக்கு உகந்தது அல்ல; பல்வேறு கலாசாரங்களையும் மதிக்க வேண்டும்,'' என, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் வாரிய தலைவர் வாலி ரெஹ்மானி தெரிவித்தார்.

 பொது சிவில் சட்டம் கூடாது: முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு

முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படும், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் நடைமுறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

'ஆண், பெண் பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ள தலாக் முறையானது, ஒரு மதத்துக்கு தேவையில்லாத நடைமுறை' என, சுப்ரீம் கோர்ட்டில் அளித்த பதில் மனுவில், மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'இந்த பிரச்னை குறித்து, பொதுமக்கள் கருத்தை கேட்க வேண்டும்' என, உத்தரவிட்டது. அதன் படி, மத்திய சட்டக் கமிஷன், பொதுமக்கள் கருத்தை அறியும் வகையில், இணையதளத் தில் கேள்வித்தாள் ஒன்றை வெளியிட்டு உள்ளது; அதில், 'தலாக் முறை வேண்டுமா; பொது சிவில் சட்டத்தை கொண்டு வரலாமா' என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப் பட்டு உள்ளன.


இந்நிலையில், இதுகுறித்து, அகில இந்திய முஸ் லிம் தனிநபர் வாரிய தலைவர், வாலி ரெஹ்மானி கூறியதாவது:

சட்டக் கமிஷன், ஒரு தன்னிச்சை அதிகாரமுள்ள அமைப்பாக செயல்படவில்லை; மத்திய அரசின் ஒரு அமைப்பு போல் செயல்படுகிறது.பொது சிவில் சட்டத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ள, பொதுமக்கள் கருத்துக் கேட்பை, எங்கள் அமைப்பு புறக்கணிக்கிறது.

பொது சிவில் சட்டமானது, அரசியலமைப்பு சட்டத் திற்கும், அவரவர் தாங்கள் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கு உள்ள உரிமைக்கும் எதிரானது. பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு உகந்தது அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தி யாவின் பலம்.அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட, அவரவர் தங்கள் மதத்தை பின்பற்றுவதற்கு உரிமை உள்ளது. இந்தியா மட்டும் அதற்கு எதிராக இருப்பது ஏன்?

கடந்த, 30 மாதங்களாக ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்வி களை மறைப்பதற்காக, பொது சிவில் சட்டம் பிரச் னையை எழுப்பியுள்ளனர். எல்லை யை பாதுகாக்க முடியாதவர்கள், உள்நாட்டில் மக்களிடையே உரசல்களைஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முஸ்லிம் களை விட, இந்துக்கள் தான் அதிக அளவில் விவாகரத்து கோரி வருகின்றனர். இந்நிலை யில், பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும்வகையில், சட்டக் கமிஷன் செயல்படுவதை கண்டிப்பதுடன், பொது கருத்துக் கேட்பையும் புறக்கணிக்கி றோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


பெண்கள் வரவேற்பு


'பெண்களுக்கு சம உரிமை அளிக்காத, பெண் களுக்கு எதிரான தலாக் முறை நீக்கப்பட வேண்டும்' என, முஸ்லிம் பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.

இது குறித்து,சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர் ந்துள்ள முஸ்லிம் பெண்கள் அமைப்பை சேர்ந் தவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்த கருத்தை முழுமையாக வரவேற்கிறோம். தலாக் முறை, பெண்களுக்கு எதிரானது; சம உரிமையை மீறுவதாக உள்ளது என, மத்திய அரசு மிகவும் திடமாகக் கூறியுள்ளது.

தலாக் முறை, அரசியலமைப்புச் சட்டம், சமூக நீதிக்கு எதிரானது. ஆண், பெண் பாகுபாடு ஒழி யும் வரை, வளர்ச்சியை அடைய முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (186)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
20-அக்-201608:39:11 IST Report Abuse

Rajendra Bupathiஇந்தியாவுல இருந்துகிட்டு இந்திய சட்டத்த மதிக்கலன்னா எப்படி?அந்த மதம் எங்க உருவாச்சோ, எந்த கால நிலமையில உருவாக்கபட்டதோ அதற்குதான் பொருந்தும். நல்லபண்பாடுள்ள நாகரீகம் உள்ள உலகிலேயே பெண்களை அதிகமாக மதிக்கும் இந்தியாவுக்கு தேவை இல்லை ? கண்டிப்பாக வேண்டும் என்றால் அவர்கள் பாகிஸ்தானுக்கோ இல்லை வேறு முஸ்லீம் நாட்டிற்கோ செல்வதற்கு தடை எதுவும் இருப்பதாக தெரியவிலை ? அதை செய்யலாம்? தேவை இல்லாமல் இங்கு கூவி கொண்டு இருக்க கூடாது? வர வர உங்கள் நடவடிக்கையும் சரி இல்லை இந்து மக்களை கொலை செய்வதும் அவர்கள் சொத்துகளை அழைப்பதுமாக இருப்பது இந்திய இறையாண்மைக்கு மாறானது? உங்கள் நிலைபாட்டை நீங்கள் மாற்றி கொள்ளவிடில் மாற்ற வேண்டிய கட்டாயமேற்படும். இது யாருக்கும் நல்லது அல்ல? ஆண்ணன் தம்பிகளாகவும், மாமன் மச்சானாகவும் உறவுகளின் பெயரில் அழைத்துகொண்டு அமைதியாக வாழும் வாழ்க்க்கையை தேவை இல்லாமல் மதத்தின் பெயரால் சீர் குலைக்க வேண்டாம்? இது மத ஒற்றுமைக்கும் நல்லதல்ல?நமக்கும் நல்லது அல்ல? நாட்டிற்கும் நல்லது அல்ல?

Rate this:
anbu - London,யுனைடெட் கிங்டம்
20-அக்-201602:50:36 IST Report Abuse

anbuஇஸ்லாமிய பெண்களுக்கு சுதந்திரம்,கருத்துரிமை ,சமவுரிமை ,பாதுகாப்பு, சட்ட உரிமை இருப்பதாக கூறுபவர்கள் முதலில் அவர்களை வெளியில் வந்து மாநாடு நடத்தவும் சுதந்திரமாக பேசவும் தங்கள் அவலங்களை எடுத்துக்கூறவும் தேவைகளை பகிரங்கமாக பிரச்சாரம் செய்யவும் விடுங்கள். ஆண்கள் பதில் எழுதுவதை நிறுத்தி அவர்களை சுதந்திரமாக எழுத விடுங்கள்.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-அக்-201613:45:02 IST Report Abuse

Malick Rajaமனநோயாளிகள் இருக்கும்வரை மருத்துவமும் இருக்கும்.. மருத்துவம் இருக்கும்வரை மனநோயாளிகளும் இருப்பர்.. அறிவிழந்து செயலிழக்குமுன் அவனவன் திருந்தவேண்டும்..இல்லையெனில் திருந்தாமலே தீரும் நிலை வரும்.. முதலில் மணிதனாக சிந்திக்கவேண்டும்.. சாதிகள் ஒழியவில்லை.. வறுமை ஒழியவில்லை.. குற்றங்கள் குறையவில்லை.. ஒற்றுமைக்கு வேட்டு.. வேற்றுமைக்கு ஒட்டு இதையெல்லாம் திருத்தாமல்.. திருந்தாமல்.. பொது சிவில் சட்டம் என்பது வைக்கோல் போரில் ஏறிநின்று தீ கொளுத்தினால் என்ன கிடைக்குமோ ?

Rate this:
மேலும் 183 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X