‛நரசிம்மராவ் ஒரு உண்மை சீர்திருத்தவாதி': ஆர்.பி.ஐ., முன்னாள் கவர்னர்

Added : அக் 15, 2016 | கருத்துகள் (32)
Advertisement
ஐதராபாத் : முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஓர் உண்மையான சீர்திருத்தவாதி என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவருமான சி.ரங்கராஜன் தெரிவித்தார்.வளர்ச்சிக்கு உதவிய சீர்திருத்தங்கள் :ஐதராபாத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது: பொருளாதாரச்
‛நரசிம்மராவ் ஒரு உண்மை சீர்திருத்தவாதி': ஆர்.பி.ஐ., முன்னாள் கவர்னர்

ஐதராபாத் : முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஓர் உண்மையான சீர்திருத்தவாதி என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவருமான சி.ரங்கராஜன் தெரிவித்தார்.


வளர்ச்சிக்கு உதவிய சீர்திருத்தங்கள் :

ஐதராபாத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது: பொருளாதாரச் சீர்திருத்தங்களை வகுப்பதில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில், மத்திய நிதியமைச்சராக மன்மோகன் சிங் முக்கியப் பங்காற்றினார். அவரது முயற்சிகளுக்கான அங்கீகாரம் அப்போது அவருக்குக் கிடைக்கவில்லை. நரசிம்மராவ் ஒரு உண்மையான சீர்திருத்தவாதி. நாடு சிறந்த பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு அவரது சீர்திருத்தங்கள் உதவியது.


புகழ் கிடைக்கவில்லை :

காங்., கட்சியினர் ஏற்றுக்கொள்ளாத போதிலும், பொருளாதாரச் சீர்திருத்தங்களை காங்., கட்சி ஏற்றுக் கொள்ளுமாறு செய்தனர் நரசிம்மராவ். பொருளாதாரத்தில் இருந்த கட்டுப்பாடுகள் ஒழிக்கப்பட்டதோடு, உரிமங்கள் வழங்குவதில் இருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. ஆனால், செய்திகள் உரிய வகையில் மக்களுக்குத் தெரிவிக்கப்படாததால், நரசிம்மராவுக்கு கிடைக்க வேண்டிய புகழ் கிடைக்காமல் போய்விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
15-அக்-201622:39:03 IST Report Abuse
adalarasan உண்மைதான் இவர் காலத்தில் அந்நிய செலாவணி நெருக்கடியை சாமர்த்தியமாக சமாளித்தார் மௌனமாக தன் வேலையை செய்தார்? ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் இருந்தது? ராஜீவ் காலத்திலிருந்து, இன்று 2g, காங்கிரஸ் பத்திரிக்கை சொத்துக்கள் கைமாறல், வரை ஊழல் மேல் ஊழல் குற்றச்சாட்டுக்கள், சகிக்கவில்லை
Rate this:
Cancel
S.S.JAHUFER SADIK - Jeddah,சவுதி அரேபியா
15-அக்-201621:24:07 IST Report Abuse
S.S.JAHUFER SADIK இவரது காலத்திய பாபரி மஸ்ஜித் உடைப்பு பாரதத்தின் மறைக்க முடியாத கரும்புள்ளி
Rate this:
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
15-அக்-201616:02:10 IST Report Abuse
Ambika. K ஹர்ஷத் மேத்தாவின் 65 கோடி பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை. திரு ரங்கராஜன் இவ்வளவு நல்லவரா கொஞ்சம் கூட தெரியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X