போலீசார் ஊழலுக்கு இரையாகக் கூடாது: பினராயி விஜயன்| Police should be corruption-free: Kerala CM Pinarayi Vijayan | Dinamalar

போலீசார் ஊழலுக்கு இரையாகக் கூடாது: பினராயி விஜயன்

Added : அக் 15, 2016 | கருத்துகள் (9)
திருவனந்தபுரம் : போலீசார் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.கேரளாவிலுள்ள, திருவனந்தபுரத்தில் சிறப்பு ஆயுதப் படை முகாமில் பயிற்சி முடித்த போலீசாருக்கு நடந்த வழியனுப்பு விழாவில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: போலீசார், ஊழலுக்கு ஒருபோதும் இரையாகக் கூடாது. வேலியே பயிரை
போலீசார் ஊழலுக்கு இரையாகக் கூடாது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம் : போலீசார் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.

கேரளாவிலுள்ள, திருவனந்தபுரத்தில் சிறப்பு ஆயுதப் படை முகாமில் பயிற்சி முடித்த போலீசாருக்கு நடந்த வழியனுப்பு விழாவில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: போலீசார், ஊழலுக்கு ஒருபோதும் இரையாகக் கூடாது. வேலியே பயிரை மேயும் சூழலை அனுமதிக்க முடியாது. ஊழலற்ற காவல்துறையே நாட்டுக்கு அவசியம். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் போலீசார்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X