பிரணாப்பிற்கு மீண்டும் ஜனாதிபதி பதவி: சிவசேனா

Added : அக் 15, 2016 | கருத்துகள் (23) | |
Advertisement
புதுடில்லி : அடுத்த ஜனாதிபதியாக மீண்டும் பிரணாப் முகர்ஜியையே தேர்ந்தெடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சிவசேனா கட்சியின் ராஜ்யசபா தலைவர் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்ததாவது: சர்ச்சயைில் சிக்காத பிரணாப் :ஜனாதிபதியாக மீண்டும் பிரணாப் முகர்ஜியைத் தேர்வு செய்ய வேண்டும்.
பிரணாப்பிற்கு மீண்டும் ஜனாதிபதி பதவி: சிவசேனா

புதுடில்லி : அடுத்த ஜனாதிபதியாக மீண்டும் பிரணாப் முகர்ஜியையே தேர்ந்தெடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சிவசேனா கட்சியின் ராஜ்யசபா தலைவர் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்ததாவது:


சர்ச்சயைில் சிக்காத பிரணாப் :

ஜனாதிபதியாக மீண்டும் பிரணாப் முகர்ஜியைத் தேர்வு செய்ய வேண்டும். அவரது திறமையை யாராலும் சந்தேகிக்க முடியாது. உள்நாட்டு விவகாரம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து நன்கு தெரிந்து வைத்துள்ள அவர், கடந்த 5 ஆண்டுகளாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல், தனது பணியை மிகச் சிறப்பாக மேற்கொண்டிருக்கிறார்.


பிரணாப்புடன் சந்திப்பு :

பிரணாப்பை மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்ய பிற கட்சிகளிடம் ஆதரவு கோருவது குறித்து, கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்வார். மரியாதை நிமித்தமாக பிராணாப்பை அடுத்த வாரம் சந்திக்க உள்ளேன். அப்போது, சிறந்த ஜனாதிபதியாக நிரூபித்து விட்டீர்கள் என அவரிடம் தெரிவிக்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


2017 ஜூலையுடன்..

பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூலையுடன் (2017, ஜூலை 25ம் தேதி) நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
15-அக்-201623:08:42 IST Report Abuse
மலரின் மகள் இப்போதே வயதாகி விட்டது. இன்னும் 5 ஆண்டுகள் அடுத்த ஆண்டிற்கு பிறகு என்றால் எப்படி இருக்கும். ஓய்வு பெறட்டும். நிம்மதியாக வாழட்டும்.
Rate this:
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
15-அக்-201620:18:42 IST Report Abuse
Sridhar Rengarajan ஏன் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட காங்கிரஸ்காரர்தான் ஜனாதிபதியாக இருக்க வேண்டுமா? அல்லது நாட்டில் திறமையானவர்கள் இல்லையா? அத்வானி ஜனாதிபதியாக வேண்டும்.
Rate this:
Cancel
Balaji - Khaithan,குவைத்
15-அக்-201617:26:32 IST Report Abuse
Balaji பாஜகவின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை வெளிக்காட்டவே இதுபோல குண்டக்க மண்டக்க செயல்படுகிறது சிவசேனா கட்சி.....அநேகமாக பாஜகவின் ஜனாதிபதிக்கான தேர்வு அத்வானியாகத்தான் இருக்கும் என்று தெரிந்துகொண்டே இப்படியொரு விருப்பத்தை தெரிவித்துள்ளது அக்கட்சி........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X