பதிவு செய்த நாள் :
பாராட்டு!
தமிழக திடக்கழிவு திட்டத்துக்கு மத்திய அரசு
மற்ற மாநிலங்களும் பின்பற்ற அறிவுரை

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு, மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழக திடக்கழிவு திட்டத்துக்கு மத்திய அரசு பாராட்டு!:மற்ற மாநிலங்களும் பின்பற்ற அறிவுரை

'தமிழக அரசு பின்பற்றும் நடைமுறையை, பிற மாநிலங் களும் பின்பற்ற வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக் கில், 'துாய்மை இந்தியா' இயக்கத்தை, 2014ல், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நாடு முழு வதும், 4,000 நகரங்களில், தெருக்களை சுத்தப் படுத்துவதும், சுகாதார கட்டமைப்பை மேம் படுத்துவதும் இதன் நோக்கம்.

இந்த திட்டத்தை மக்களிடம் பிரபலப்படுத்தும் விதமாக, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்ட பல்துறை சார்ந்த, 27 பேர், துாதர்களாக செயல்
படுகின்றனர்.

இதைத் தொடர்ந்து, நாடு தழுவிய அளவில், கிராமபுறங்களில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில், விரிவான திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதுதொடர்பாக, டில்லியில் ஆய்வுக் கூட்டம்

நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில், 2013 முதல் செயல் படுத்தப்பட்டு வரும் நவீன திடக்கழிவு மேலாண்மை திட்டம் பற்றி ஆய்வு செய்யப் பட்டது; இதில் பங்கேற்ற, மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ராம் கிரிபால் யாதவ் கூறியதாவது:

தமிழகத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் திடக் கழிவுகளை அகற்றுவதுடன், குப்பைகளில் இருந்து தமிழக கிராமங்கள் வருவாயும் ஈட்டுகின்றன.

பாராட்டுக்குரிய இத்திட்டத்தை, பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். 'தீனதயாள் உபாத்யாயா வாழ்வாதார திட்டத்தின்' கீழ், மற்ற மாநிலங்களிலும் இதை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

ஒரு மாநிலத்திற்கு, 50 கிராமங்கள் வீதம், முதற் கட்டமாக, 10 மாநிலங்களில் இந்த திட்டம் செயல் படுத்தப்படும்; இதற்கு தேவையான நிதியை மத்திய அரசு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல், 'தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, பிற மாநிலங் களும் பின்பற்ற வேண்டும்' என, மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையும் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம் சாதனை!


தமிழகத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை, மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உதவியுடன், 'துாய்மை காவலர்கள்' என்ற பெயரில் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் சேகரித்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தனித்தனியாக பிரிக்கப் படுகின்றன. மக்கும் குப்பை, ஓரிடத்தில் கொட்டி

Advertisement

மக்கச் செய்து, உரமாக மாற்றப்படுகிறது; பின்னர் இவை, ஊராட்சிகள் மூலம் உரமாக விற்பனை செய்கின்றன.

மறுசுழற்சி செய்யக் கூடிய குப்பையும் பிரிக்கப் பட்டு, விற்பனை செய்யப் படுகிறது; இதன் மூலம் கிராம ஊராட்சிகள் வருவாய் ஈட்டுகின்றன.

திருவண்ணாமலை


தமிழகத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், 2015ல், திருவண்ணாமலை மாவட்டத்தில், உர விற்பனை மூலம், 86 கிராமங்கள், 60 லட்சம் ரூபாய், வருவாய் ஈட்டியுள்ளன; மறு சுழற்சி செய்யும் குப்பை மூலம், 36 லட்சம் ரூபாய் சம்பாதித்து உள்ளன.

9,000 கிராமங்கள்


தமிழகத்தில், 2013ல்,3,000 கிராமங்களில் நவீன திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவக்கப் பட்டது; பின் இது, 9,000, கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
16-அக்-201619:24:36 IST Report Abuse

மஸ்தான் கனிஉள்ளாட்சி தேர்தல் முடியும் வரை மத்தியரசின் பாராட்டு மழையில் தமிழகம் குளிரும்.

Rate this:
M.Rajkumar - chennai/ abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-அக்-201617:02:56 IST Report Abuse

M.Rajkumarமொதல்ல மெட்ராசுல பண்ணுங்கோப்பா... மகா ஜனங்களே நீங்களும் தினமலரையும் மாநகராட்சியையும் குறைசொல்லாமல் உங்கள் பங்குக்கு குப்பைகளை குறையுங்கள் . கிச்சன் கார்டன் (36 வயதினிலே படம் பார்த்துட்டு எத்தனை பேர் செய்தீர்கள்?) உங்கள் வீட்டில் வையுங்கள். ஒரு தொட்டி போதும். polythene ஐ அறவே ஒழியுங்கள். கடைக்கு பை கொண்டு போங்கள். நாடு என்ன செய்தது ... என்று கேளுங்கள்............... ................ ............. நோ பிராப்பளம் ................. ........ நீங்களும் நானும் என்ன செய்தோம்? யோசியுங்கள் .... please .....

Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
16-அக்-201615:35:01 IST Report Abuse

Swaminathan Chandramouliதமிழகம் தலைநகரில் சென்னையில் வந்து பாருங்கள் . எந்த சாலையை , எந்த தெருவை பார்த்தாலும் ஒரே குப்பை கூளம் தான் . . கிராமப்புறத்தில் எங்கோ ஒரு மூலையில் சுத்தத்தை பார்த்து விட்டு பாராட்டுகிறார்கள் . தினமலர் பத்திரிக்கை ஆய்வாளர்களை அனுப்பி சென்னை மாநகரத்தை முழுவதுமாக மூலை முடுக்குகளில் புகைப்படம் எடுத்து உங்கள் செய்தி தாளில் போடுங்கள் . நகரத்தின் அவலம் தெரிய வரும் .

Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
16-அக்-201621:39:49 IST Report Abuse

சுந்தரம் கோவையில் பல தெருக்கள் ( எல்லா தெருக்களும் என்று நான் சொல்லவில்லை) சுத்தமாகத்தான் இருக்கின்றன. ...

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X