பதிவு செய்த நாள் :
 சபாஷ்!பாக்.,கிற்கு பாடம் புகட்ட ரஷ்யாவுடன் கைகோர்த்தார் மோடி:புதியவர்களை விட பழைய நண்பர்களே மேல் என உருக்கம்

பெனாலிம்:பயங்கரவாதிகளை ஊக்குவித்து அட்டூழியம் செய்து வரும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில், ரஷ்யாவுடன் கைகோர்த்துள்ளார் பிரதமர் மோடி. கோவாவில் நடக்கும்,'பிரிக்ஸ்' மாநாட்டில், ''இரண்டு புதிய நண்பர்களை விட, பழைய நண்பரே சிறந்தவர்,'' என, உருக்கமாக பேசி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஈர்த்தார்.

 சபாஷ்!பாக்.,கிற்கு பாடம் புகட்ட ரஷ்யாவுடன் கைகோர்த்தார் மோடி:புதியவர்களை விட பழைய நண்பர்களே மேல் என உருக்கம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்த, 'பிரிக்ஸ்' கூட்டமைப் பின், எட்டாவது மாநாடு, கோவா மாநிலத்தின் பெனாலிம் பகுதியில் நேற்று துவங்கியது.

இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் மோடி யுடன் இரு நாட்டு உறவு, ராணுவ தளவாட விற்பனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

இதன் இறுதியில், அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு தளவாடங்கள்,ரோந்து மற்றும் பாது காப்பு பணிக்கு பயன்படும்,இலகுரக போர் கப்பல்கள் வாங்குதல், ஹெலிகாப்டர்களை கூட்டாக சேர்ந்து தயாரித்தல் உள்ளிட்ட, 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வர்த்தகம், முதலீடு, ஹைட்ரோகார்பன், விண்வெளி ஆராய்ச்சி, 'ஸ்மார்ட் சிட்டி' ஆகியவை தொடர் பாக, மூன்று முக்கிய அறிவிப்புகளை, ரஷ்ய

அதிபரும், பிரதமர் மோடியும் கூட்டாக வெளியிட்டனர்.

இதன்பின், புடின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக,
இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவது பாராட்டுக்கு உரியது. பயங்கரவாதிகள், அவர்களின் ஆதர வாளர்கள் விஷயத்தில், துளிகூட பொறுக்க முடியாது என்பதில், ரஷ்யாவும், இந்தியாவும் உறுதியாக உள்ளன.

ரஷ்யா அளித்து வரும் ஆதரவு, இந்தியாவுக்கு பெரும் ஊக்க சக்தியாக திகழ்கிறது. இந்தியா - ரஷ்யா நட்புறவின் வௌிப்பாடாக, கூடங்குளத் தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அணு உலைகளும், புதிதாக நிறுவப்பட உள்ள, மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளும் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடி,தன் பேச்சின் முக்கியஅம்சமாக, ''இரண்டு புதிய நண்பர்களை விட, ஒரு பழைய நண்பரே சிறந்தவர்,''என, உருக்கமாக கூறினார்.

ரஷ்யாவுடன்,இந்தியா நீண்டகாலமாக நெருங் கிய நட்புறவை பேணிவருகிறது.சமீபமாக, அமெரிக்காவுடன் நட்புறவு பலப்படுத்துவதில், இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.இதனால், ரஷ்யாவை விட்டு, இந்தியா விலகி வருவதாக உலக அரங்கில் பேச்சு எழுந்தது.

திடீர் திருப்பமாக,சமீபத்தில்,பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து, ரஷ்ய ராணுவம் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது.இதை ரஷ்ய
அதிபருக்கு மறைமுகமாக விளக்கும் வகை யில், 'புதிய நண்பர்கள், பழைய நண்பர்' என்ற வாதத்தை,மோடி, அழுத்தமாக கூறினார்.

அவரது அருகில் நின்ற ரஷ்ய அதிபர் புடின்,

Advertisement

இதை உடனடியாக புரிந்து கொண்டு, புன்னகைத்ததுடன், தன் பேச்சின்போது, ''பயங்கரவாதத்தை, ரஷ்யா, ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், ரஷ்யா, இந்தியா வுடன் இணைந்து செயல்படும்,'' என கூறி, பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார்.

பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப் படுத்தும் முயற்சியின் அடுத்த கட்டமாக, கோவா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை யும், பிரதமர் மோடி, நேற்று இரவு சந்தித்து பேசினார்.

ரூ.33 ஆயிரம் கோடி


ரஷ்யாவிடமிருந்து, ராணுவ தற்காப்பு தள வாட ங்களை, 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டது.'பிரை கேட்ஸ்' எனப்படும் இலகுரக போர்க் கப்பல்களையும், 'கமோவ்' வகை ஹெலிகாப்டர்களை யும், இரு நாடுகளும் சேர்ந்து கூட்டாக தயாரிக்கும் ஒப்பந்தத்தில், ரஷ்ய அதிபர் புடினும், பிரதமர் மோடியும் கையெழுத்திட்டனர்.

என்.ஐ.ஐ.எப்., எனப்படும், தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியமும், ரஷ்யா வின் ஆர்.டி.ஐ.எப்., எனப்படும், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமும் சேர்ந்து, நவீன உள்கட்ட மைப்பு கூட்டு முயற்சியாக, ௭,௦௦௦ கோடி ரூபாய் மதிப்பில், புதிய முதலீட்டு நிதியம் உருவாக்க உள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shame on you - Chennai,இந்தியா
17-அக்-201609:27:41 IST Report Abuse

shame on youஇங்குள்ள மோடி சொம்புகள் மோடி எதை செய்தாலும் இரண்டாம் புலிகேசியை புகழ்வது போல் புகழ்கின்றனர் , சற்று வரலாறை திரும்பி பார்த்தால் இவர்களுக்கு புரியும், அமெரிக்காவின் பின் சென்ற தென் கொரியாவின் வளர்ச்சியும், ரஷ்யாவின் பின் சென்ற வடகொரியாவின் வீழ்ச்சியும்.

Rate this:
Thanjai puthiyavan - Jeddah,சவுதி அரேபியா
17-அக்-201615:47:23 IST Report Abuse

Thanjai puthiyavanமோடி என்ன இரண்டாம் புலிகேசியா அல்லது 23 ஆம் புலிகேசியா? ...

Rate this:
shame on you - Chennai,இந்தியா
17-அக்-201623:28:24 IST Report Abuse

shame on youமன்னிக்கவும் 23 ஆம் புலிகேசி :) ...

Rate this:
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா
18-அக்-201613:39:46 IST Report Abuse

குறையொன்றுமில்லைபழசு சார் நல்ல காமெடியா எழுதுறீங்க கலக்குங்க சார் ...

Rate this:
Thanjai puthiyavan - Jeddah,சவுதி அரேபியா
16-அக்-201619:37:07 IST Report Abuse

Thanjai puthiyavanமோடி ஜால்ராக்களே. காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த பழைய நண்பன் ரஷ்யா. நீங்கள் எல்லாம் 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை திட்டி தீர்க்கும்போது, மோடி பாராட்டுகிறார். புதிய நண்பன் யாராம்? கோபம் வந்துவிட போகிறது.. பிறகு இந்தியாவின் நிலைமை ரெண்டும் கெட்டானாகி விடும்.

Rate this:
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
16-அக்-201619:30:17 IST Report Abuse

மஸ்தான் கனிஇதயம் இல்லாத ஆயுத வியாபாரிகளிடம் கைகோர்ப்பது தனக்கு தானே சூடு வைத்துக் கொள்வதற்கு சமம். தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் ஆயுதம் விற்கும் நாடுகளை புறக்கணிக்கப்படுவதில்லை. ஏன் எல்லாம் திருட்டுப்பசங்க.

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X