இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம்

Added : அக் 15, 2016 | கருத்துகள் (13) | |
Advertisement
கோபி: கோபி அருகே, சாலை விரிவாக்க பணியின் போது, வேருடன் அகற்றி இடம் மாற்றி நடப்பட்ட புளிய மரங்கள், பசுமையாக துளிர் விட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், கோபி - குன்னத்துார் சாலை, ஒட்டவலவு அருகே, 'எஸ்' வடிவில் குறுகிய திருப்பமாக இருந்தது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, இச்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவானது. இதற்கு இடையூறாக, பழமை வாய்ந்த, 33 புளிய மரங்கள் இருந்தன.
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம்

கோபி: கோபி அருகே, சாலை விரிவாக்க பணியின் போது, வேருடன் அகற்றி இடம் மாற்றி நடப்பட்ட புளிய மரங்கள், பசுமையாக துளிர் விட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், கோபி - குன்னத்துார் சாலை, ஒட்டவலவு அருகே, 'எஸ்' வடிவில் குறுகிய திருப்பமாக இருந்தது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, இச்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவானது. இதற்கு இடையூறாக, பழமை வாய்ந்த, 33 புளிய மரங்கள் இருந்தன. மரங்களை வெட்டி அகற்ற மனமில்லாத நெடுஞ்சாலைத் துறை, அம்மரங்களை ஆணி வேருடன் பிடுங்கி, வேறிடத்தில் நட திட்டமிட்டது; ஆக., 27ல், மரங்கள் அகற்றப்பட்டன. ஒட்டவலவு - கொளப்பலுார் சாலையில், லிங்கப்ப கவுண்டன்புதுார் முதல் கல்லுமடை வரை, சாலையோரத்தில், புளிய மரங்கள் நடப்பட்டன. மழை பெய்யாததால், மரங்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டது. இதனால் விலைக்கு தண்ணீர் வாங்கி, மரங்களை பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர், 1,600 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி, நெடுஞ்சாலைத் துறையினர் ஊற்றினர். ஊற்றிய தண்ணீரின் ஈரப்பதத்தை தக்க வைக்க, மரத்தின் நடுத்தண்டு பகுதியில், நார்ச்சாக்கு கட்டப்பட்டது. ஆணி வேர் விரைவில் வளர்ச்சி பெற, 15 நாளைக்கு ஒரு முறை, 'ரூட் மேக்கர்' என்ற உரமிடப்பட்டது. இதன் விளைவாக, ஓரிரு மரங்களை தவிர, அனைத்து மரங்களும் தற்போது துளிர் விட்டு வியக்க வைத்துள்ளன. அதே சமயம் வளைவாக இருந்த, ஏழு மீட்டர் சாலை, 90 லட்சம் ரூபாய் செலவில், 15.20 மீட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டு, தார்சாலையாக மாற்றும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்தப் பணி முழுமை பெறும்.திட்டம் முழுமை பெற்றதும், விபரங்கள் அனைத்தும், 'சக்சஸ் ஸ்டோரி'யாக தயாரிக்கப்பட்டு, தலைமை அதிகாரிகளுக்கு அனுப்ப, நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sardar papparayudu - nasik,இந்தியா
16-அக்-201620:28:38 IST Report Abuse
sardar papparayudu மரங்களும் , சாலை எங்கும் இருந்த சுமை தாங்கி கற்களும் இந்தியா ஒரு சமூக சிந்தனை கொண்ட நாடு என ஒரு எடுத்துக்காட்டை திகழ்ந்து ஒரு காலத்தில் . சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நிழலுக்கு கூட ஒதுங்க முடியாத ஒரு நிலைமை இன்று . வாகனங்களில் உணவினை கொண்டு சென்று மர நிழலில் அமர்ந்து உண்ணமுடியாது இன்று . தலையில் மூட்டையினை நெடுந்தூரம் சுமக்கமுடியாது ஏன் என்றால் சுமைதாங்கி கற்கள் பிடிங்கி எறியப்பட்டு விட்டன இன்று .
Rate this:
Cancel
sardar papparayudu - nasik,இந்தியா
16-அக்-201620:23:32 IST Report Abuse
sardar papparayudu செடிப்பேடு அடுத்து சவிதா காலேஜ் அருகில் பிரியும் மண்ணூர் - பேரம்பாக்கம் ரோடில் உளுந்தை அருகில் பிரமாண்டமான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது மிக கொடுமை . அனைத்திற்கும் மேலை நாடுகளை உதாரணம் காட்டும் நாம் , அவர்கள் இம்மாதிரி பெரிய மரங்களை எடுத்து வேறு இடங்களில் நட அருமையான மிஷின்களை வைத்துள்ளதை பார்த்து அதனை இறக்குமதி செய்து நாம் இம்மரங்களை காப்பாற்ற வேண்டாமா ?? இந்த இடத்தில இப்போது இவர்கள் செய்த காரியம் இவர்கள் 4 தலைமுறைகளை சீரும் சிறப்பாக வாழ வைக்கும் .
Rate this:
Cancel
tshajahan - Vellore,இந்தியா
16-அக்-201619:33:25 IST Report Abuse
tshajahan This is the regular duty in Developed Nations. No need to be proud in this case. The biggest criminal mistake is we are not did the same type of plants shifting from the National High Way other places while expanding the roads in width wise.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X