குட்டி யானைக்கு தனி அறை கண்காணிப்புடன் சிகிச்சை

Added : அக் 15, 2016 | |
Advertisement
கூடலுார்: சிறுமுகை வனப்பகுதியில், மீட்கப்பட்ட யானை குட்டிக்கு, முதுமலை வளர்ப்பு முகாமில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதி, பவானி நீர்தேக்கம் பகுதியில், தாயை பிரிந்து, தவித்த ஆண் யானை குட்டியை வனத்துறை மீட்டு, முதுமலைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு, 10.30 மணிக்கு அங்கு வந்த குட்டி யானைக்கு தனியறை அமைத்து, சிகிச்சை


கூடலுார்: சிறுமுகை வனப்பகுதியில், மீட்கப்பட்ட யானை குட்டிக்கு, முதுமலை வளர்ப்பு முகாமில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதி, பவானி நீர்தேக்கம் பகுதியில், தாயை பிரிந்து, தவித்த ஆண் யானை குட்டியை வனத்துறை மீட்டு, முதுமலைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் இரவு, 10.30 மணிக்கு அங்கு வந்த குட்டி யானைக்கு தனியறை அமைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு, 'லாக்டோஜென் பவுடர் பால், எலக்ரோ பவுடர்', இளநீர் மற்றும் சத்து உணவுகள், இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

அதனை, முதுமலை கால்நடை டாக்டர் விஜயராகவன் தலைமையில் மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கால்நடை டாக்டர் விஜயராகவன் கூறியதாவது, “பிறந்து ஒரு வாரம் உள்ள, ஆண் யானை குட்டியின் உடல் எடை சாதாரண யானையை குட்டியை விட குறைவாக உள்ளது. உடல் பலவீனமாக உள்ளது. இதனால், கிருமி தொற்றாத வகையில், தனி அறையில் அதனை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X