பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பத்திரம் வெளியிட்டு நிதி திரட்டலாம்:
நகராட்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி

மாநில அரசுகளைப் போல நகராட்சிகளும், கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்ட, மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளது.

 பத்திரம் வெளியிட்டு நிதி திரட்டலாம்:நகராட்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி

இதற்கான வழிமுறைகளை உருவாக்கும் கூட்டம், டில்லியில், வரும், 24ல் நடக்கிறது. வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை திரட்ட, மாநில அரசுகள் கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. இதன்படி, பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட, ரிசர்வ் வங்கி சில வழிமுறைகளை வகுத்து உள்ளது.
அதே வழியில், நகராட்சிகளும் நிதி திரட்டி

கொள்வதற்கான அனுமதி வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத் தில்,12 மாநகராட்சி கள், 124 நகராட்சிகள் உள்ளன.

இவற்றில், வருவாய் அடிப்படையிலேயே வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படுவதால், தேவை அடிப்படையில் நகராட்சிகளால், முழுமையான நிதியை பெற முடியவில்லை. வளர்ச்சி திட்டங்களுக் காக, மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதியையும் தாண்டி, நகராட்சிகளின் தேவை அதிகமாக உள்ளது.

எனவே, நகராட்சிகளும் கடன் பத்திரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம்இருந்து முதலீடாக நிதி திரட்ட, மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. முதற் கட்டமாக, தமிழ கம், ஆந்திரா, குஜராத் மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

Advertisement

இதற்கான வழிமுறைகளை வகுக்க, வரும், 24ல், டில்லியில் கூட்டம் நடக்கிறது. இதில், பங்கேற்க, மூன்று மாநிலங்களின் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர்களுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகம் உட்பட, பல மாநிலங்களில், நகரங்களின் வளர்ச்சி இன்னும் மேம்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாமி - மதுரை,இந்தியா
18-அக்-201602:53:31 IST Report Abuse

சாமிஇன்னைக்கு இருக்கும் அரசை நம்பி பேங்ல பனம் போடவே முடியலை. இதுல நகராச்சிய எங்க நம்புறது

Rate this:
Balaji - Khaithan,குவைத்
17-அக்-201614:55:25 IST Report Abuse

Balajiஇது நகராட்சி உறுப்பினர்களை நேரடியாக ஊழல் செய்யவே வழியாக அமையும்....... வளர்ச்சி என்பதெல்லாம் ஒன்றுமிருக்காது....... ஊராட்சி உறுப்பினர்கள் பெரும்பாலும் ஒரு திட்டம் வருகிறது என்றால் அதை தனது பினாமிக்கு வாங்கி கொடுத்து விட்டு திட்டம் செய்யாமலேயே செய்ததாக பில் மட்டும் போட்டு வலமாக இருக்கிறார்கள்..... இப்போது கூடுதலாக இதுபோன்ற முறையையும் ஏற்படுத்திவிட்டால் ஒரு முறை கவுன்சிலராக இருந்தால் போதும் அடுத்த முறை தனது செல்வத்தை வைத்து MLA இல்லாம MP தேர்தலில் கூட சீட் வாங்கிவிடலாம்...... டப்பு இருக்கிறவங்களுக்கு தானே சீட் என்று பெரிய கட்சிகளே எழுதப்படாத கொள்கை வகுத்துள்ளது.......

Rate this:
சூத்திரன் - Madurai,இந்தியா
17-அக்-201613:29:56 IST Report Abuse

சூத்திரன்ஊராட்சி தலைவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்... அவர்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X