தமிழ் சினிமா ஹீரோ, ஹீரோயின்களின் அழகிற்கு, அழகு சேர்க்கும் ஆடைகளை வடிவமைத்து வரும் இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் மனைவி, 'சூப்பர் ஸ்டார் காஸ்டியூம் டிசைனர்' அனுவர்த்தன், 'தினமலர்' வாசகர்களுக்காக மனம் திறந்து பேசி மகிழ்ந்த நிமிடங்கள்...* கபாலி படத்தில்...கபாலி பட வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம், பெருமையா இருக்கு. இயக்குனர் ரஞ்சித் கேட்டதும் உடனே ஓ.கே., சொல்லிட்டேன்.* ரஜினியின் காஸ்டியூம் ரகசியம்..மகிழ்ச்சி... ரஜினி, பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாம, இயல்பாக பழகக்கூடிய அருமையான மனிதர். இயக்குனர் என்ன சொல்றாறோ அதுக்கு மறுபேச்சு பேச மாட்டாரு. இந்த படத்தில் ரஜினியின் இளமை, முதுமை என, இருவேறு விதமான கெட்டப்புகளுக்கு ஏற்ற காஸ்டியூம்களை டிசைன் பண்ணினேன்.* அஜித் - விஷ்ணு நட்பு...அஜித் நடித்த 'அசோகா' படத்திற்கு நான் தான் காஸ்டியூம் டிசைனர். அதனால அப்போ இருந்தே எனக்கு அஜித்தை நல்லா தெரியும். அப்புறம், விஷ்ணு இயக்கத்தில் 'பில்லா', 'ஆரம்பம்' படத்தில் நடித்த பின் பேமிலி பிரண்ட் ஆயிட்டாரு.* அஜித்திற்கு அழகான ஆடைகள்...அவரு இயற்கையாகவே அழகு தான், நான் புதுசா எதுவும் செய்யல. அவரோட அழகை குறைக்காத வகையிலான ஆடைகளை வடிவமைக்க தான் அதிக கவனம் செலுத்துகிறேன்.* அடுத்த படமும்...ஆமா... 'வேதாளம்' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'ஏ.கே.57' (அஜித்குமார் 57) படத்திற்கு டிசைனிங் பண்றேன்.* உங்கள் காஸ்டியூமில் ஹீரோயின்கள்...'ஏழாம் அறிவு' - சுருதி ஹாசன், 'நானும் ரவுடி தான்' மற்றும் 'இருமுகன்' - படங்களில் நயன்தாராவுக்கு காஸ்டியூம் பண்ணிருக்கேன். நெக்ஸ்ட் நயன் நடிக்கும் 'காஸ்மோரா' படத்திலும் டிசைனரா இருக்கேன்.* விஷ்ணுவின் ஐடியா, அட்வைஸ் ?அவரோட படத்தில் வேலை செய்யும் போது மட்டும் தான் ஐடியா, அட்வைஸ் கொடுப்பாரு. அவர் கொடுத்த உற்சாகம் தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கு.* இளைஞர்களுக்கு டிரசிங் டிப்ஸ்...ஒவ்வொருத்தருக்கும் ஒரு 'பெர்சனாலிட்டி' இருக்கும், அதை வெளியே காமிக்குற மாதிரி சிம்பிளா டிரஸ் பண்ணினாலே போதும்.