மஞ்ச முகத்தழகிமனைவிக்காக பாட்டெழுதி

Added : அக் 17, 2016 | கருத்துகள் (1) | |
Advertisement
வெள்ளைச் சிரிப்பும்,வெண்கல குரலுமாக, 'மக்க கலங்குதப்பா… மடி பிடிச்சு இழுக்குதப்பா…' என, சமீபத்தில் வெளிவந்த 'தர்மதுரை' படத்தில் பாட்டெழுதி பாடியும், நடித்தும் அசத்தியவர் நம் மதுரைக்காரர், மதிச்சியம் பாலா.அப்பா பெத்து என்ற கோபால், கிளாரினெட் இசைக்கலைஞர். தந்தை வழியில் பயணிக்க விரும்பிய போது, அப்பாவின்அன்புக் கட்டளையால் பி.ஏ., வரை முடித்தார், பாலா. கல்லுாரி
மஞ்ச முகத்தழகிமனைவிக்காக  பாட்டெழுதி

வெள்ளைச் சிரிப்பும்,வெண்கல குரலுமாக, 'மக்க கலங்குதப்பா… மடி பிடிச்சு இழுக்குதப்பா…' என, சமீபத்தில் வெளிவந்த 'தர்மதுரை' படத்தில் பாட்டெழுதி பாடியும், நடித்தும் அசத்தியவர் நம் மதுரைக்காரர், மதிச்சியம் பாலா.அப்பா பெத்து என்ற கோபால், கிளாரினெட் இசைக்கலைஞர். தந்தை வழியில் பயணிக்க விரும்பிய போது, அப்பாவின்அன்புக் கட்டளையால் பி.ஏ., வரை முடித்தார், பாலா. கல்லுாரி படிப்பின் போதே, உடன் பயின்றமாணவி ஜானகியை கண்டார். கண்டதும் காதல்…. ஜானகிக்காக கவிஞராக, பாடகராக தன்னை மாற்றிக்கொண்டார்.மஞ்ச புடவை கட்டி…மல்லிகைப்பூ தலையில் வச்சு … என, ஜானகிக்காக உருகி உருகி எழுதிப் பாடிய பாடல்கள் தான்…பாலாவின் திரையுலக பிரவேசத்திற்கு, காரணமாக அமைந்தன. அது ஒரு பிரமிப்பான, அனுபவம் என்று தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் பாலா.நான் 8ம் வகுப்பு படிக்கும் போது, கோயில் திருவிழாவில் ஒரு பாட்டி முளைப்பாரி, தெம்மாங்கு பாடல் பாடுவார். இரண்டாண்டுகளாக அந்த பாட்டியுடன் கூட சேர்ந்து கேலி செய்து பாடிக் காட்டினேன். மூன்றாம் முறை சென்ற போது, அந்த பாட்டி இறந்து விட்டார். அப்போது கோயிலில் முளைப்பாரி பாட்டை, அடுத்து யார் பாடுவது என்ற கேள்வியெழுந்தது. அத்தை என்னை காட்டினார்.அப்படித் ஆரம்பித்தது என் பாட்டுப் பயணம்.கல்லுாரிக்குள் காலடி எடுத்து வைத்த போது எனது உயிரை (ஜானகி) கண்டேன். அவளின் முகம், கண், தலைமுடி, நிறத்தை வைத்தே… இட்டுக்கட்டி பாட்டெழுதினேன். என் காதலை ஆரம்பத்தில் மறுத்தவள், தொடர்ந்து எனது பாடல்களிலும், குரலிலும் மயங்கினாள். இனிதாய் இல்லறம் புகுந்தோம்.அதற்கு சாட்சியாக இரண்டு வயதில் ஆணும், பெண்ணுமாக இரட்டை குழந்தைகள்.பறையாட்ட கலைஞர் வேலு, ஒருநாள் என்னை போனில் கூப்பிட்டார். அவர் தான் எனது ஆசான். 'நல்லா பாட்டெழுதி, அப்படியே பாடுற கலைஞர் இருந்தா இயக்குனர் சீனு ராமுசாமிக்கு அனுப்பிவிடு' என்றார். 13 கலைஞர்களை அனுப்பினேன். அவருக்கு திருப்தியாகவில்லை. இந்நிலையில் என்னையே போய் பார்க்கச் சொன்னார். சீனு ராமசாமியை பார்க்க சென்றேன். 'வயதானவரின் துக்கநிகழ்வு, அதில் சந்தோஷமாகவும் பாடவேண்டும்; அதற்கேற்ப பாட்டெழுது' என்றார்.அவருக்கு கால் மணி நேரத்தில் பாட்டெழுதி கொடுத்தேன். பாடச் சொன்னபோது, மக்க(ள்) கலங்குதப்பா… என்று சோகமாக பாடினேன்.இதையே சந்தோஷமாகவும் பாடு என்றார். பாடினேன். அதன்பின், பாட அழைத்தனர். எனது பாடலுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஏத்தகோவிலுக்குசென்றேன். அங்கு துக்க நிகழ்வுக்கான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. மைக் கட்டப்பட்டிருந்த பந்தலில் நின்று என்னை பாடச் சொன்னார்கள். சுற்றிலும் கேமரா ஒளிவெள்ளத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியவில்லை. பின் பாட்டை மனப்பாடம் செய்து, பாடி முடித்தேன். பட்டிதொட்டியெல்லாம் எனது பாடலை இளசுகள் விரும்பி கேட்டபோது, பெரிய உயரத்தை தொட்ட மாதிரி இருந்தது,என்றார்.இவரிடம் பேச 7639 779430.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
17-அக்-201611:13:13 IST Report Abuse
Karuppu Samy இதுபோல பல நாட்டுப்புற கலைகள் உட்கொண்ட பாடல்களை வெளியே கொண்டுவர எல்லா இயக்குனர்களும் உதவனும்.பல நாட்களுக்குப்பின் யுவனின் இசையுடன் இவரின் பாடல்கு,ரல்,வரிகள் மிகுந்த சந்தோஷத்தையும் நம் அடையாளத்தையும் கொடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.ராசாவின் அடுத்த வாரிசு யுவன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.பறையாட்ட கலைஞர் வேலு என்ற பெருமையுடன் சொல்வதில் இருந்து தன் அடையாலத்தை முன்னிறுத்தி உள்ளார் ஆனால் இன்று பலபேர் தன் அடையாளத்தை சொல்லவே கூனி குறுகின்றனர்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X