திருமணமா: அலறும் நடிகையர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருமணமா: அலறும் நடிகையர்

Added : அக் 17, 2016 | கருத்துகள் (9)
Advertisement
திருமணமா: அலறும் நடிகையர்

நடிகையர் கீர்த்தி சாவ்லா, சுப்பிரமணியபுரம் சுவாதி ஆகியோர், தங்களுக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என, மறுத்துள்ளனர். சுப்பிரமணியபுரம் படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதிக படங்களில் தலைகாட்டாத இவர், வடகறி படத்தை தொடர்ந்து, யாக்கை படத்தில் நடித்துள்ளார். இவருக்கு, திருமணம் நடந்ததாக தகவல்கள் பரவின.
இது குறித்து, சென்னையில் நடந்த, யாக்கை பட விழாவில், சுவாதி கூறுகையில், ''திருமணம் ஆனதாக பரவிய வதந்திக்கு விளக்கம் சொல்லி, போரடித்து விட்டது; யாரும் நம்ப வேண்டாம். எனக்கு ஆண் நண்பர்கள் கூட கிடையாது,'' என்றார். நடிகர் அர்ஜுன் உடன், ஆணை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சாவ்லா. ஆழ்வார், நான் அவனில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்த கீர்த்தி சாவ்லாவுக்கு, தமிழில் பட வாய்ப்புகள் குறைய, சொந்த ஊரான மும்பைக்கே பறந்தார். அங்கு, திருமணம் செய்து செட்டில் ஆனதாக தகவல் பரவியது.
இந்நிலையில், மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ள கீர்த்தி சாவ்லா கூறியதாவது: எனக்கு, 34 வயது ஆகிறது. இது திருமண வயது என்றாலும், சத்தியமாக எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிப்பு ஆசை இன்னும் குறையாததால், திருமணம் பற்றி யோசிக்கவில்லை. திருமணம் ஆனதாக வந்த தகவல்கள் வதந்தியே. நல்ல கதாபாத்திரமாக இருந்தால், யாருடனும் நடிக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
18-அக்-201617:43:14 IST Report Abuse
Endrum Indian “பொண்ணுங்களுக்கு 25 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லையென்றால் ஏதோ கோளாரு இருக்கு” முத்தின கத்திரிக்காய் வசனம். அப்போ பெண்களுக்கு 34 வயது எப்படி திருமண வயதாகும்?????
Rate this:
Share this comment
Cancel
18-அக்-201617:30:19 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் //எனக்கு, 34 வயது ஆகிறது. இது திருமண வயது என்றாலும், சத்தியமாக எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை// 50 வயசு கூட திருமண வயது தான், அப்புறம் பண்ணிக்கலாம்.
Rate this:
Share this comment
Naga - Muscat,ஓமன்
18-அக்-201620:37:04 IST Report Abuse
Nagaஜெயராமன் உடனே நீங்க கல்யாணம் பண்ணுங்க, குழந்தை செல்வத்தோடு வாழ எனது வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel
Muthusamy Thiagarajan - Coimbatore,இந்தியா
18-அக்-201615:47:55 IST Report Abuse
Muthusamy Thiagarajan "பல மரங்கண்ட தச்சன் ஒரு மரத்தையும் வெட்ட மாட்டான்" என்பது பழ மொழி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X